Fact Check: மலேசியாவில் விஜய் வருகையால் போக்குவரத்து நெரிசலா? பரவும் பழைய படம்!
சென்னை: விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படம் ஜன.9ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மலேசியாவில் நடைபெறுகிறது. இந்த விழாவை காண, சுமார் 1 லட்சம் ரசிகர்கள் குவிந்திருக்கிறார்கள். இந்நிலையில் விஜய் வருகையால் மலேசியாவில் வரலாறு காணாத அளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக படங்கள் சோசியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது. ஆனால் அது தவறான படம் என தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகியிருக்கிறது. தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை உருவாக்கியுள்ள விஜய், தனது அரசியல் பயணத்தை தீவிரப்படுத்தயிருக்கிறார். எனவே திரைத்துறையில் இந்த படம்தான் அவரது கடைசி திரைப்படம் என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில் இந்த இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியை காண, சுமார் 1 லட்சம் பேர் வரை குவிந்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு வருகை தர மலேசியாவின் பல்வேறு பகுதியிலிருந்தும் ரசிகர்கள் குவிந்திருப்பதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருப்பதாக புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இது 2020ம் ஆண்டு வெளியான படம் என்று பேக்ட் செக் ஊடகவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
கோவிட் காலத்தில் மலேசியா-சிங்கப்பூர் எல்லை ஓபன் செய்யப்பட்டபோது அதிக அளவில் நெரிசல் ஏற்பட்டது. இந்த புகைப்படத்தைதான் விஜய்யை பார்க்க குவிந்த கூட்டத்தால் ஏற்பட்ட நெரிசல் என்று சில ஊடகங்கள் தவறாக செய்தியை பதிவிட்டு வருகிறது.
Fact Check:
வெளியான செய்தி:
விஜய்யை பார்க்க மலேசியாவில் ரசிகர்கள் கூடியதால் போக்குவரத்து நெரிசல்.
முடிவு:
மலேசியாவில் போக்குவரத்து நெரிசல் என வெளியாகியுள்ள புகைப்படங்கள், கடந்த 2020ம் ஆண்டு கோவிட் காலத்தில் எடுக்கப்பட்ட படமாகும்.
ரேட்டிங்:
False












Click it and Unblock the Notifications