உச்சமடையும் இந்தியா-கனடா மோதல்! ராஷ்டிரபதி பவனில் சீக்கிய காவலர்கள் நீக்கம் என பரவும் போலி செய்தி
டெல்லி: காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விவகாரத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவைக் குற்றஞ்சாட்டிய நிலையில், ராஷ்டிரபதி பவனில் இருந்து சீக்கிய பாதுகாவலர்கள் நீக்கப்படுவதாகத் தகவல் பரவி வருகிறது. இது உண்மை தானா என்பது குறித்து பார்க்கலாம்.
இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே கடந்த சில காலமாகவே தொடர்ந்து மோதல் நிலவி வருகிறது. கனடாவில் இருக்கும் பயங்கரவாதி ஹர்தீப் சிங் கொலையில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக ட்ரூடோ சொன்னதே இதற்குக் காரணமாகும்.

இந்த மோதல் சர்வதேச அளவில் பெரும் பேசுபொருள் ஆகியுள்ளது. கனடாவின் இந்த ஆதாரமில்லாத குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும், கனடாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளையும் இந்தியா எடுத்து வருகிறது.
பரவும் தகவல்: இதற்கிடையே சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் டிரெண்டாகி வருகிறது. அதாவது காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விவகாரத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவைக் குற்றஞ்சாட்டிய நிலையில், டெல்லி ராஷ்டிரபதி பவனில் பாதுகாப்புப் பணியில் இருந்து சீக்கியர்கள் நீக்கப்படுவதாகத் தகவல் பரவி வருகிறது. இது உண்மை தானா என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகும் அந்த பதிவில், "டெல்லியில் சீக்கிய வீரர்கள் வலுக்கட்டாயமாக விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளனர். ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலையில் இந்திய அரசு ஈடுபட்டதாக ட்ரூடோ சொன்ன பிறகு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். ராணுவத்திலும் சீக்கிய சமூகத்தினருக்கான விடுப்பு மறுக்கப்படுவதாக தகவல்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
உண்மை என்ன: இதுபோல மேலும் சிலரும் சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். இவை இப்போது டிரெண்டாகி வரும் நிலையில், பலரும் இதை உண்மை என்றும் கருதத் தொடங்கிவிட்டனர். இது உண்மை தானா என்பது குறித்து நாம் பார்க்கலாம். இந்தத் தகவல் இணையத்தில் டிரெண்டாகும் நிலையில், இது உண்மை தானா என்பது குறித்து ஆய்வு செய்தோம்.

ராஷ்டிரபதி பவனில் உள்ள சீக்கிய காவலர்கள் விடுப்பில் அனுப்பப்பட்டதாக எந்தவொரு செய்திக்குறிப்பையும் பாதுகாப்புத் துறை அமைச்சகமோ அல்லது மத்திய அரசோ வெளியிடவில்லை. எந்தவொரு ஆங்கில அல்லது இந்தி ஊடகங்களும் இப்படியொரு சம்பவம் நடந்ததாக எந்தவொரு செய்தியையும் வெளியிடவில்லை. மேலும், ட்விட்டரில் இது தொடர்பாக நாம் தேடிய போது இந்திய ராணுவம் இது குறித்த அளித்த விளக்கத்தைப் பார்க்க முடிந்தது.
மறுப்பு: இந்திய ராணுவம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இந்த தகவலை மறுத்துள்ளது. அந்த போலி தகவலைப் பகிர்ந்த இந்திய ராணுவம், "இதுபோன்ற பொய்யான தகவல் இணையத்தில் பரவி வருகிறது. இதுபோன்ற போலியான செய்திகளை யாரும் நம்ப வேண்டாம்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
மத்திய அரசின் பேக்ட் செக் பிரிவான பிஐபி அமைப்பும் இது குறித்து விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் தங்கள் ட்விட்டரில், "Claim: சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ராஷ்டிரபதி பவனில் இருந்த சீக்கிய காவலர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.. ராணுவத்திலும் சீக்கிய வீரர்களுக்கு விடுமுறை மறுக்கப்படுகிறது. இப்படியொரு பொய்யான தகவல் இணையத்தில் பரவுகிறது. இது முழுக்க முழுக்க பொய்யான ஒரு தகவல்" என்று விளக்கம் கொடுத்துள்ளனர்.
இதன் மூலம் சீக்கிய காவலர்கள் மாற்றப்படுவது பொய்யான தகவல் என்பது உறுதியாகியுள்ளது.

Fact Check
வெளியான செய்தி
காலிஸ்தான் பயங்கரவாதி கொலை குறித்த ட்ரூடோவின் பேச்சுக்குப் பிறகு, டெல்லி ராஷ்டிரபதி பவனில் உள்ள சீக்கிய காவலர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
முடிவு
இது முழுக்க முழுக்க பொய்யான தகவல் என்று ராணுவம் திட்டவட்டமாக விளக்கம் அளித்துள்ளது.
ரேட்டிங்
-
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications