உங்களுக்கு வந்துச்சா? 5000க்கு ஆடை வாங்கினால் 18% ஜிஎஸ்டி! சமூக வலைதளங்களில் பரவும் செய்தி! உண்மையா?
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஜிஎஸ்டியில் மாற்றம் செய்து அறிவித்திருக்கிறது. இந்த நிலையில் 2500 ரூபாய்க்குள் ஆடைகள் வாங்கினால் 5% ஜிஎஸ்டி விதிக்கப்படும் எனவும், 5000 ரூபாய்க்கு மேல் ஆடை வாங்கினால் 18 சதவீத ஜிஎஸ்டி விக்கப்படும் என சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகிறது. உண்மையில் அப்படியெல்லாம் இல்லை. இது தேவையில்லாத வதந்தி என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
இந்தியாவில் கடந்த ஆண்டுகளில் நடைமுறையில் இருந்த சரக்கு மற்றும் சேவை வரி முறை சீரமைப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை கடந்த சில மாதங்களாகவே எழுந்து வந்தது. தொடர்ந்து இதனை வியாபாரிகள் பொதுமக்கள் பல்வேறு தளங்களில் அரசுக்கு வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின உரையாற்றிய பிரதமர் மோடி, "மக்களுக்கு தீபாவளி பரிசாக விலைகள் குறையும். அதற்காக ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம் செய்யப்படும்" என்று அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் அளித்தது.

ஆடைகள் ஜிஎஸ்டி
இந்த நிலையில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. குறிப்பாக, பொதுமக்கள் தினசரி பயன்படுத்தும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி விகிதம் 18% லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், அத்தியாவசியப் பொருட்களுக்கான வரி 12%ல் இருந்து, 5% ஆக குறைக்கப்பட்டுள்ள நிலையில், பேஸ்ட், சோப்பு, ஷாம்பு, பிஸ்கட், ஸ்நாக்ஸ், ஜூஸ், நெய், கன்டென்ஸ்டு பால் போன்ற தினசரி பயன்பாட்டு பொருட்கள், மிதிவண்டிகள், எழுதுப்பொருட்கள், குறைந்த விலை ஆடைகள் மற்றும் காலணிகளின் ஆகியவற்றில் விலை குறைந்துள்ளது.
5% ஜிஎஸ்டி
குறிப்பாக ஆயத்த ஆடைகள், ஆண்களுக்கான ஷர்ட், பனியன் உள்ளிட்டவற்றின் விலையும் கணிசமாக குறைந்துள்ளது. இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விலை குறைவை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் பொருட்களின் விற்பனை சூடு பிடித்துள்ளது. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் கடந்த சில தினங்களாக ஒரு செய்தி பகிரப்பட்டு வருகிறது. அதில்," தற்போது புதிய ஆடைகள் வாங்கும்போது பில் கட்டணம் ₹2,500 வரை இருந்தால், 5% GST கட்டணம் செலுத்தவேண்டும். பில் கட்டணம் ₹2,500-ஐ விட அதிகமாக இருந்தால் 18% GST கட்டணம் செலுத்தவேண்டும். ஆகவே 5000 ரூபாய்க்கு ஆடைகள் வாங்கினால் பில் தொகையை பிரித்துப் போட்டு வாங்கவும்" என கூறப்பட்டுள்ளது.
பில்லில் பிரித்து வாங்குவது
இந்த செய்தி சமீபகாலமாக பேஸ்புக், எக்ஸ் மற்றும் வாட்ஸ் அப்பில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. உண்மையில் இது பொய்யான செய்தி ஆகும். எப்பொழுதுமே ஜிஎஸ்டியை பொறுத்தவரை மொத்த பில்லின் அடிப்படையில் ஜிஎஸ்டி வரி போடப்படுவது கிடையாது. ஒவ்வொரு பொருளுக்கும் தனித்தனியாகவே ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு ஒரு சோப்பு வாங்கும் போது அதற்காக 5 சதவீத வரி விதிக்கப்படுகிறது. நீங்கள் பத்தாயிரம் ரூபாய்க்கு சோப்பு வாங்கினாலும் 5 சதவீத வரி மட்டுமே விதிக்கப்படும்.
18% ஜிஎஸ்டி
தற்போது துணி விவகாரத்திற்கு வருவோம். தற்போதைய அறிவிப்பின்படி 2500 ரூபாய்க்குள் ஆடைகள் வாங்கினால் அதற்கு ஐந்து சதவீத ஜிஎஸ்டி விதி மட்டுமே விதிக்கப்படும். 2500 ரூபாய் விட அதிக விலை கொண்ட ஆடைகளை வாங்கினால் தான் 18 சதவீத ஜிஎஸ்டி விரிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு நீங்கள் 1500 ரூபாய் மதிப்புள்ள ஒரு ஜீன்ஸ் பேண்ட் வாங்கினால் அதற்கு ஐந்து சதவீத ஜிஎஸ்டியை விரிக்கப்படும். உங்கள் அம்மாவுக்கு 2600 மதிப்புள்ள ஒரு சேலை வாங்கும்போது அதற்கு 18 சதவீத ஜிஎஸ்டி விக்கப்படும். மொத்த பில்லின் அடிப்படையில் இரண்டு பொருட்களுக்கும் தனித்தனியாகவே ஜிஎஸ்டி கணக்கிடப்பட்டு சேலைக்கு 18 சதவீத வரியும், ஜீன்ஸ் பேண்டுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி மட்டுமே விதிக்கப்படும். எனவே தற்போது பகிரப்பட்டு வரும் தகவல் தவறானது என்பது குறிப்பிடத்தக்கது.
Fact Check
வெளியான செய்தி
"தற்போது புதிய ஆடைகள் வாங்கும்போது பில் கட்டணம் ₹2,500 வரை இருந்தால், 5% GST கட்டணம் செலுத்தவேண்டும். பில் கட்டணம் ₹2,500-ஐ விட அதிகமாக இருந்தால் 18% GST கட்டணம் செலுத்தவேண்டும். ஆகவே 5000 ரூபாய்க்கு ஆடைகள் வாங்கினால் பில் தொகையை பிரித்துப் போட்டு வாங்கவும்" என சமூக வலைதளங்களில் பரவும் செய்தி
முடிவு
உண்மையில் இது பொய்யான செய்தி ஆகும். எப்பொழுதுமே ஜிஎஸ்டியை பொறுத்தவரை மொத்த பில்லின் அடிப்படையில் ஜிஎஸ்டி வரி போடப்படுவது கிடையாது.
ரேட்டிங்
Misleading
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications