Fact check: "க்ளீன் நோட் பாலிசி.." ரூபாய் நோட்டுகளில் எதாவது எழுதினால் அவை செல்லாதா.. உண்மை என்ன!
ரூபாய் நோட்டுகளில் எதாவது எழுதப்பட்டிருந்தால் செல்லாது என்ற தகவல் பரவி வருகிறது.
டெல்லி: இந்தியாவில் ரூபாய் நோட்டுகளில் எதாவது எழுதப்பட்டிருந்தால்.. அது செல்லாது என்ற தகவல் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த முறை பலரும் அதை இணையத்தில் பரப்பி வருகின்றனர். இதற்கிடையே இது குறித்த விளக்கத்தை ரிசர்வ் வங்கி அளித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 2016இல் பணமதிப்பு நீக்கம் சமயத்தில் அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு, புதிதாக 500, 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் கொண்டு வரப்பட்டன.
இதனிடையே இந்த புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் குறித்து இணையத்தில் அவ்வப்போது பொய்யான செய்திகள் பரவி வருகிறது. இதற்கு அரசும் தொடர்ந்து விளக்கத்தைக் கொடுத்து வருகிறது.

ரூபாய் நோட்டுகள்
இந்தியாவில் இப்போது 2000 ரூபாய் நோட்டுகள் தான் புழக்கத்தில் இருக்கும் அதிகபட்ச கரன்சியாக உள்ளது. சில்லறை கிடைப்பதில்லை உள்ளிட்ட பல காரணங்களால் 2000 ரூபாய் நோட்டுகள் பெரியளவில் பயன் தருவதில்லை. ஏற்கனவே, அவை ஏடிஎம்களில் இருந்தும் நீக்கப்பட்டுவிட்டன. மேலும், ரிசர்வ் வங்கியும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்திவிட்டன. இருப்பினும், அவை தொடர்ந்து புழக்கத்திலேயே உள்ளன.

பரவும் தகவல்
இந்தியாவில் ரூபாய் நோட்டுகளில் எதையாவது எழுதுவது என்பது பரவலாக இருக்கும் நடைமுறைகளில் ஒன்று. வங்கிகளில் ரூபாய் நோட்டுகளை கட்டாக வைக்கும் போது, அதில் எத்தனை ரூபாய் உள்ளது என்பதை மேலே இருக்கும் நோட்டுகளில் எழுதி வைப்பார்கள். அதேபோல இளைஞர்கள் ரூபாய் நோட்டுகளில் தங்களைப் பெயர்களை எல்லாம் எழுதிய காலங்களும் உள்ளன. இப்போது இந்த நடைமுறை வெகுவாக குறைந்துவிட்டது என்ற போதிலும், ஆங்காங்கே ரூபாய் நோட்டுகளில் இதுபோல எதையாவது எழுதியிருப்பதை நம்மால் பார்க்க முடியும்.

விளக்கம்
ஆனால், இப்படி புதிய ரூபாய் நோட்டுகளில் ஏதாவது எழுதப்பட்டிருந்தால், அது அந்த ரூபாய் நோட்டுகளைச் செல்லாத ஒன்றா மாற்றிவிடுமா.. சமீபகாலமாகவே கரன்சி நோட்டில் ஏதாவது எழுதப்பட்டால் அது செல்லாது என்று இணையத்தில் தொடர்ச்சியாகப் பல செய்திகள் உலா வருகிறது. அதாவது எந்தவொரு ரூபாய் நோட்டுகளிலும் எதாவது எழுதப்பட்டு இருந்தால் அது செல்லாது என்றும் எனவே, பணத்தை வாங்கும் போது கவனமாக இருக்க வேண்டும் என்றும் இணையத்தில் போலி செய்திகள் பரவி வருகிறது. இதற்கிடையே இதற்கு மத்திய அரசு மீண்டும் விளக்கமளித்துள்ளது.

நோட்டுகள் செல்லும்
இது குறித்து மத்திய அரசின் பிஐபி தனது ட்விட்டரில், "ரூபாய் நோட்டுகளில் எதாவது எழுதப்பட்டிருந்தால்.. அது அவற்றை செல்லாத ஒன்றாக மாற்றுவதில்லை.. அவை தொடர்ந்து சட்டப்பூர்வ கரன்சியாக இருக்கும். அதேநேரம் க்ளீன் நோட் பாலிசி படி, மக்கள் ரூபாய் நோட்டுகளில் எழுத வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அது ரூபாய் நோட்டுகளைப் பாதிக்கும். அதன் ஆயுளைக் குறைக்கிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது. சரி அதென்ன நோட் பாலிசி என்று கேட்கிறீர்களா.. வாங்க அதையும் பார்க்கலாம்.

க்ளீன் நோட் பாலிசி
ரிசர்வ் வங்கி கடந்த 1999இல் இந்த க்ளீன் நோட் பாலிசியை அறிவித்தது. அதன்படி ரூபாய் நோட்டுகள், நாணயங்களின் விநியோகத்தை அதிகரிக்கப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மேலும், கரன்சி நோட்டுகளில் எழுத வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும், அழுக்கடைந்த மற்றும் சிதைந்த நோட்டுகளை மாற்ற அனைத்து வங்கிகளிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்களின்படி, வாடிக்கையாளராக இல்லை என்றாலும் கூட அழுக்கடைந்த மற்றும் சிதைந்த நோட்டுகளுக்கு ஈடாக தரமான நோட்டுகள் மற்றும் நாணயங்களை வழங்க வேண்டும் என்பதே க்ளீன் நோட் பாலியாகும்.

ரிசர்வ் வங்கி
கடந்த 2016இல் புதிய ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்தே.. எழுதப்பட்ட கரன்சி நோட்டுகள் செல்லாது என்ற தகவல் தொடர்ந்து பரவி வருகிறது. இதற்கு ரிசர்வ் வங்கியும் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.. ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட அனைத்து நோட்டுகளும் சட்டப்பூர்வமானவை என்றும், வங்கிகளும் பொதுமக்களும் அவற்றை அச்சமின்றி ஏற்றுக்கொள்ளலாம் என்றும் தொடர்ந்து விளக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Fact Check
வெளியான செய்தி
ரூபாய் நோட்டுகளில் எதாவது எழுதப்பட்டிருந்தால்.. அது செல்லாது என்று தகவல் பரவி வருகிறது.
முடிவு
ரூபாய் நோட்டுகளில் எதாவது எழுதியிருந்தாலும் அது செல்லும் எனப் பல முறை ரிசர்வ் வங்கி விளக்கியுள்ளது.
ரேட்டிங்
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications