சலூன் கடையில் மசாஜ் செய்தவருக்கு பக்கவாதமா? சமூக வலைத்தளங்களில் பரவிய வீடியோ.. உண்மை என்ன?
சென்னை: கடந்த சில நாட்களுக்கு முன்பு சலூன் கடையில் மசாஜ் செய்யப்பட்ட நபருக்கு பக்கவாதம் ஏற்பட்டது போல ஒரு வீடியோ இணையத்தில் தீயாக பரவி வந்தது. முறையான பயிற்சி இல்லாதவர்கள் மசாஜ் செய்தால் இப்படித்தான் நடக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். தற்போது இது தொடர்பான முழு வீடியோ வெளியாகி உள்ளது.
முடிவெட்டும் கடைகளுக்கு சென்றால் முடி வெட்டிய பிறகு தலையில் லேசாக மசாஜ் செய்து விடுவதை காண முடிகிறது. சிலர் வாடிக்கையாளர்கள் மசாஜ் செய்ய சொல்லி அதற்காக கட்டணமும் செலுத்துவதால் பல சலூன் கடைகளில் இப்படி கழுத்து மற்று தோள்பட்டை பகுதியில் மசாஜ் செய்து விடுகிறார்கள். இருந்தாலும் முறையான பயிற்சி இல்லாதவர்கள் மசாஜ் செய்யக் கூடாது எனவும் இதனால் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் ஒரு தரப்பினர் கூறி வருகிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று காட்டுத்தீ போல பரவி வருகிறது. இந்த வீடியோவில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் முடிவெட்டுவதற்காக கடைக்கு செல்கிறார். முடி வெட்டிய பிறகு அந்த இளைஞருக்கு தலை மற்றும் கழுத்து பகுதியில் முடி வெட்டும் ஊழியர் மசாஜ் செய்து விடுகிறார். அப்போது திடீரென வாடிக்கையாளருக்கு பக்கவாதம் ஏற்படுகிறது.
கழுத்தை திருப்பி மசாஜ் செய்யும் போது நரம்பு பாதிக்கப்பட்டு பக்கவாதம் ஏற்பட்டது போல இருந்தது. இதனால், பதறியடித்து போன சலூன் கடைக்காரர் அவருக்கு தண்ணீர் கொடுத்து பார்த்ததோடு, என்ன செய்வது, ஏது செய்வது என தெரியாமல் கடையை விட்டு வெளியே ஓடி போய் உதவி கேட்க செல்வது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் இடம் பெற்று இருந்தது.
ये महाशय तो याद होंगे, वैसे एक्टिंग पे एक अवॉर्ड तो बनता है 🤓 pic.twitter.com/aMUPAHzirl
— Professor of memes (@prof_desi) November 18, 2024
இதையடுத்து முறையான பயிற்சி இல்லாதவர்கள் மசாஜ் செய்யக் கூடாது எனவும், இல்லையென்றால் இப்படித்தான் நடக்கும் என்றும் நெட்டிசன்கள் பலரும் கருத்துக்களை அடுக்கி வந்தனர். இந்த நிலையில், அந்த வீடியோவின் மற்றொரு பக்கமும் வெளியாகி இருக்கிறது. அதாவது, ஒட்டு மொத்த காட்சிகளும் பிராங்கிற்காக எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பான புதிய வீடியோ காட்சி ஒன்றும் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
அதில் பக்க வாதம் ஏற்பட்டது போல துடிதுடித்த நபர், சாவகாசமாக எழுந்து சிரித்த படி இருக்கையை விட்டு செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த வீடியோ வெளியிடப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நடிகை சஞ்சனா கல்ராணியும் இந்த தகவலை வீடியோவாக பகிர்ந்து பொழுதுபோக்கிற்காகவும் கல்வி மற்றும் விழிப்புணர்வு நோக்கத்திற்காக பதிவு செய்யப்பட்ட வீடியோ என்று கூறியுள்ளார்.
அதேவேளையில், சலூன் கடையில் கழுத்து மசாஜ் செய்யும் போது உடல் நலம் பாதிக்கப்பட்ட நிகழ்வுகள் நடைபெற்றுள்ளதாக கூறி அது தொடர்பான பழைய செய்திகள் பற்றிய பதிவும் வைரலாகி வருகின்றன. இது தொடர்பாக நெட்டிசன்கள் கூறுகையில், "முறையான பயிற்சி இல்லாதவர்கள் மசாஜ் செய்வது ஆபத்தானது என்பதை மறுப்பதற்கு இல்லை.
ஆனாலும் வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாகவே இந்த வீடியோ பரவி பலரையும் பீதியில் ஆழ்த்திவிட்டது. விழிப்புணர்வு வீடியோ என்றாலும் அதை முறையான தகவலும் வெளியிடுவது பார்ப்பவர்களை அச்சத்தில் ஆழ்த்தாமல் இருக்கும்" என்று கூறி வருகிறார்கள்.

Fact Check
வெளியான செய்தி
சலூன் கடையில் முடிவெட்டுவதற்காக சென்ற இளைஞருக்கு கழுத்து மசாஜ் செய்யும் போது பக்கவாதம் ஏற்பட்டது போல் ஒரு வீடியோ இணையத்தில் டிரெண்ட் ஆனது.
முடிவு
சமூக வலைத்தளத்தில் பரவும் வீடியோ உண்மை தான். ஆனால் அது பாதி வீடியோ தான். தற்போது முழு வீடியோவும் வெளியாகியுள்ளது. அந்த இளைஞருக்கு பக்கவாதம் ஏற்படவில்லை. நலமுடன் இருக்கிறார்.
ரேட்டிங்
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications