Fact check: "ஸ்டார்" குறியீடு .. இந்த ரூ.500 நோட்டுகள் போலியா.. உண்மை என்ன? அதிகாரப்பூர்வ விளக்கம்
டெல்லி: உங்களிடம் ஸ்டார் குறியீடு உடன் ரூ. 500 நோட்டுகள் இருக்கிறதா.. அது போலியான நோட்டுகள் எனவே அதை வாங்க வேண்டாம் என இணையத்தில் ஒரு செய்தி பரவி வருகிறது. இதனால் பலரும் இந்த ரூ.500 நோட்டுகளை வாங்கத் தயங்கி வருகிறார்கள். உண்மையில் இந்த நட்சத்திரத்துக்கு என்ன அர்த்தம். இதன் பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்த காலத்தில் இணைய வசதி இருப்பதால் பல்வேறு விஷயங்களை நம்மால் மிக எளிதாகச் செய்ய முடிகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வாய்ப்பே இல்லை எனச் சொல்லப்பட்ட விஷயங்கள் கூட இப்போது இணையச் சேவையால் சாத்தியமாகிறது.

இந்த இணையம் இரு பக்கமும் கூர்மையாக இருக்கும் கத்தியைப் போன்றதுதான். ஒரு பக்கம் இதனால் பல நன்மைகள் இருந்தாலும் போலி தகவல்கள் பரவவும் இதுவே முக்கியமான காரணமாக இருக்கிறது.
ஸ்டார் இருக்கும் நோட்டு: பல போலி செய்திகள் சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாகப் பரவி வருகிறது. அப்படி தான் சமீபத்தில் 500 ரூபாய் நோட்டுகள் குறித்து இணையத்தில் ஒரு தகவல் பரவியது. அதாவது உங்களிடம் இருக்கும் ரூ.500 நோட்டில் ஸ்டார் அதாவது * இருந்தால் போலியான நோட்டு என்றும் இதனால் ஸ்டார் இருக்கும் நோட்டுகளை வாங்க வேண்டாம் என்றும் அதில் கூறப்பட்டு இருந்தது.
வாட்ஸ்அப்பில் முதலில் இந்த தகவல் பரவ தொடங்கிய நிலையில், பல க்ரூப்களிலும் இந்த மெசேஜை அனுப்பியுள்ளனர். மேலும், ட்விட்டர், பேஸ்புக் போன்ற தளங்களிலும் இது தொடர்பான தகவல்கள் பரவின. இதனால் பலரும் இது உண்மை என்றே கருதினர். ஆனால், இது முழுக்க முழுக்க பொய்யான தகவல் என்று மத்திய அரசின் பிஐபி அமைப்பு விளக்கமளித்துள்ளது.
விளக்கம்: இது தொடர்பாக பிஐபி அமைப்பு தனது எக்ஸ் பக்கத்தில், "நட்சத்திரக் குறியீடு (*) கொண்ட ₹500 நோட்டு உங்களிடம் உள்ளதா? இது போலியானது என்று கவலைப்படுகிறீர்களா? கவலைப்பட வேண்டாம். இந்த குறியீடு இருந்தால் ரூபாய் நோட்டு போலியானது எனப் பரவும் செய்தி தவறானது. நட்சத்திரம் குறிக்கப்பட்ட (*) 500 ரூபாய் நோட்டுகள் டிசம்பர் 2016 முதல் புழக்கத்தில் உள்ளன" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
உண்மை என்ன: உர்ஜித் படேல் ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த போது கடந்த 2016 இறுதியில் வெளியான ரூ.500 நோட்டுகளில் இந்த நட்சத்திர குறியீடு சேர்க்கப்பட்டது. ரூபாய் நோட்டுகளில் அதற்கு முன்பு நட்சத்திர குறியீடு இல்லாத நிலையில், முதல்முறையாக அவை சேர்க்கப்பட்டது. அப்போதே இது குறித்து மத்திய அரசு தெளிவான விளக்கத்தை அளித்த போதிலும் இது தொடர்பான போலி செய்தி பரவுவது தொடர்ந்து வாடிக்கையாகவே இருந்து வருகிறது.

Fact Check
வெளியான செய்தி
ஸ்டார் அதாவது * குறியீடு உடன் இருக்கும் 500 ரூபாய் நோட்டுகள் போலியானவை எனவே, அதை யாரும் வாங்க வேண்டாம் எனத் தகவல் பரவுகிறது.
முடிவு
ஸ்டார் குறியீடு இருக்கும் ரூபாய் நோட்டுகள் போலியானது இல்லை என்று மத்திய அரசு ஏற்கனவே தெளிவுபடுத்தி இருக்கிறது. அதை பிஐபி அமைப்பும் இப்போது மீண்டும் உறுதி செய்துள்ளது.
ரேட்டிங்
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications