Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

FACT CHECK - தெலுங்கு வருடப்பிறப்பு.. திருப்பதி கோயிலில் கொண்டாடினாரா சீமான்? புகைப்படம் உண்மையா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தெலுங்கு வருடப் பிறப்பை முன்னிட்டி திருப்பதி கோயிலில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறப்பு வழிபாடு செய்ததாக செய்தி பரவி வரும் நிலையில், அது குறித்த உண்மை தகவலை பார்ப்போம்.

நேற்று தெலுங்கு வருடப் பிறப்பான உகாதியை உலகம் முழுவதும் வாழும் தெலுங்கு பேசும் மக்கள் கொண்டாடினார். தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு பூர்வீகத்தை கொண்ட மக்களும் உற்சாகமாக நேற்று உகாதியை கொண்டாடினார்கள்.

தமிழ்நாட்டை சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் தெலுங்கு பேசும் மக்களுக்கு தங்கள் உகாதி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்கள். இந்த நிலையில்தான் நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளர்கள் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உகாதி தின வாழ்த்தை தெரிவித்தனர்.

டிரெண்டான செய்தி

டிரெண்டான செய்தி

பதிலுக்கு திமுகவினரும் சீமானின் மனைவிக்கு உகாதி வாழ்த்தை கூறி இருந்தனர். இதனால் நேற்று சமூக வலைதளங்களில் 2 கட்சியினருக்கும் இடையே பல்வேறு விவாதங்கள் தொடர்ந்து கொண்டிருந்தனர். அதற்கு மத்தியில்தான் உகாதி தொடர்பாக புகைப்படத்துடன் ஒரு செய்தி அதிகளவில் பகிரப்பட்டு வந்தது.

உகாதி கொண்டாடினாரா சீமான்?

உகாதி கொண்டாடினாரா சீமான்?

அதாவது, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெலுங்கு வருடப்பிறப்பை கொண்டாடியதாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அவரை விமர்சித்து வருகின்றனர். தெலுங்கு வருடப் பிறப்பை முன்னிட்டு திருப்பதி கோயிலில் சீமான் சிறப்பு தரிசனம் செய்ததாக இணைய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டதாக புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

திருப்பதியில் சாமி தரிசனமா?

திருப்பதியில் சாமி தரிசனமா?

அதில், "தெலுங்கு வருடப் பிறப்பையொட்டி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருப்பதியில் சிறப்பு தரிசனம் செய்தார்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இதனை கரிகாலன் கலைஞரிஸ்டு என்ற பேஸ்புக் ஐடியில் வெளியிட்டு, "திருப்பதியில் உகாதி கொண்டாடும் உண்மைத் தெலுங்கர் சீமான் வாழ்க..." என்று பதிவிடப்பட்டு உள்ளது. மோகன் வெங்கட் என்ற பேஸ்புக் ஐடியில், இதே படத்தை வெளியிட்டு, "இனிய தெலுங்கு வருட பிறப்பு வாழ்த்துகள் 😂 நாம் தமிழர். పుట్టినరోజు శుభాకాంక్షలు తెలుగమ్మాయి సోదరి." என்று தெலுங்கில் குறிப்பிட்டு உள்ளனர்.

கோயிலில் மாலையுடன் சீமான்

கோயிலில் மாலையுடன் சீமான்

இதுகுறித்த உண்மை தன்மையை ஆராய அந்த புகைப்படத்தில் இருக்கும் செய்தி ஊடகத்தின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் தேடினோம். ஆனால் இதுபோன்ற செய்தி அதில் வெளியிடப்படவில்லை. அதை தொடர்ந்து சீமான் மாலையுடன் சாமியார்கள் அருகில் நிற்கும் புகைப்படத்தை இணையதளத்தில் தேடியபோதுதான் அது செப்டம்பர் மாதம் எடுத்த படம் என தெரிந்தது.

உண்மையான படமா?

உண்மையான படமா?

திருப்போரூரில் உள்ள கந்தசாமி கோயில் சீமான் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சாமி தரிசனம் செய்தபோது எடுத்த புகைப்படங்களையும், வீடியோக்களையும் பல்வேறு இணைய ஊடகங்களும், முன்னணி செய்தி தொலைக்காட்சி நிறுவனங்களும் வெளியிட்டு உள்ளார்கள். அதேபோல் சீமானும் நேற்று திருப்பதி செல்லவில்லை.

திருப்பதி சென்றாரா சீமான்?

திருப்பதி சென்றாரா சீமான்?

இதனை அவரது ட்விட்டர் பதிவின் மூலம் உறுதி செய்ய முடிந்தது. நேற்று ட்விட்டரில் பதிவிட்டு உள்ள அவர், "இன்று 22.03.2023 சென்னை பம்மலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறுபான்மை மக்கள் நலக் கட்சியின் தலைமை அலுவலகத் திறப்பு விழாவில் நாம் தமிழர் கட்சி சார்பாக பங்கேற்று, அக்கட்சியின் தலைமை அலுவலகத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றிய போது" என்று குறிப்பிட்டு புகைப்படங்களையும் அவர் பகிர்ந்து உள்ளார்.

உண்மை என்ன?

உண்மை என்ன?

இதன் மூலம் சீமான் திருப்பதியில் உகாதி தினத்தை கொண்டாடியதாக வெளியான புகைப்படம் கடந்த ஆண்டு திருப்போரூரில் எடுக்கப்பட்டது என்பதும், நேற்று அவர் திருப்பதிக்கே செல்லவில்லை என்பதும் உறுதியாகிறது. எனவே சீமான் திருப்பதியில் உகாதி கொண்டாடினார் என்று பரவிய செய்தி போலியானது என்பதை உறுதிசெய்கிறோம்.

Fact Check

வெளியான செய்தி

தெலுங்கு வருடப் பிறப்பையொட்டி திருப்பதி கோயிலில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறப்பு வழிபாடு.

முடிவு

சீமான் நேற்று திருப்பதிக்கு செல்லவில்லை. அந்த படம் திருப்போரூர் கோயிலில் கடந்த ஆண்டு எடுக்கப்பட்டது.

ரேட்டிங்

Misleading
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+