கசிந்த க்யூட்டான போட்டோ.. விராட் கோலி - அனுஷ்கா சர்மாவின் மகனா இது? உண்மை என்ன?
சென்னை: கிரிக்கெட் வீரர் விராட் கோலி - நடிகை அனுஷ்கா சர்மா ஆகியோருக்கு 2வதாக ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் பெயர் ‛அகாய்’. இந்த குழந்தையின் போட்டோ நீண்டகாலமாக வெளியாகாமல் இருந்தது. தற்போது இணையதளத்தில் விராட்கோலியின் மகன் என்று போட்டோ பரவி வரும் நிலையில் அது உண்மையா? வாங்க பார்க்கலாம்.
இந்திய கிரிக்கெட் அணியின் ரன் மெஷினாக இருப்பவர் விராட் கோலி. இவர் நடிகை அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்தார். தற்போது இருவரும் மும்பையில் வசித்து வருகின்றனர்.

இந்த தம்பதிக்கு 2 குழந்தை உள்ளது. முதலில் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் பெயர் வாமிகா. வாமிகாவுக்கு தற்போது 3 வயது ஆகிறது.
அதன்பிறகு கடந்த பிப்ரவரி மாதம் 25ம் தேதி விராட் கோலி- அனுஷ்கா சர்மா தம்பதிக்கு 2வதாக ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் பெயர் ‛அகாய்’. விராட் கோலி கிரிக்கெட் வீரராகவும், அனுஷ்கா சர்மா நடிகையாகவும் பிரபலமாக உள்ளனர். இருப்பினும் அவர்களின் 2 குழந்தைகளின் போட்டோ, வீடியோ என்பது இன்னும் வெளியே வரவில்லை. இதற்கிடையே தான் தற்போது இணையதளத்தில் ஒரு போட்டோ பரவி வருகிறது. வாயில் கைவிரலை வைத்தபடி தலைநிறைய முடியுடன் க்யூட்டாக உள்ளது.
இந்த குழந்தை தான் விராட் கோலி - அனுஷ்கா சர்மாவின் மகன் ‛அகாய்’ என்ற தகவல் பரவி வருகிறது. அதோடு கோலி - அனுஷ்கா சர்மா தம்பதியின் மகன் அகாயின் முதல் போட்டோ இதுதான் என்று பலரும் சமூக வலைதளங்களில் அந்த போட்டோவை பரப்பி வருகின்றனர்.
தற்போது ஆஸ்திரேலியாவி்ல பார்டர் - கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் போட்டி நடக்கிறது. முதல் டெஸ்ட் நேற்று முன்தினம் தொடங்கியது. விராட் கோலியை உற்சாகப்படுத்த அனுஷ்கா சர்மாவும் அங்கு சென்றுள்ளார். விராட் கோலி சதமடித்தபோது அனுஷ்கா சர்மா எழுந்து நின்று கையசைத்து உற்சாகப்படுத்திய நிலையில் தான் இந்த போட்டோ பரவி வருகிறது. பலரும் அந்த போட்டோவை விராட் கோலியின் மகன் என்று தொடர்ந்து பரப்பி வருகின்றனர்.
ஆனால் அது உண்மையில்லை. அதாவது தற்போது விராட் கோலி - அனுஷ்கா சர்மாவின் மகன் என்று பரவி வரும் போட்டோவில் இருப்பது அவர்களின் நண்பரின் மகள். உண்மையில் அது விராட் கோலி -அனுஷ்கா சர்மாவின் மகன் அகாய் இல்லை என்று இருவருக்கும் நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

Fact Check
வெளியான செய்தி
விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதியின் மகன் அகாய் என்று போட்டோ வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது
முடிவு
பரவி வரும் போட்டோ விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதியின் மகன் அகாய் இல்லை. நண்பரின் மகள்.
ரேட்டிங்
-
2வது முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்ல காத்திருக்கும் ஆர்சிபி.. குஜராத் அணி வெல்ல என்ன செய்ய வேண்டும்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications