Fact Check: சபாநாயகர் இருக்கையில் அமர்ந்த முதல் பெண் சத்யபாமா தானா? உண்மை என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபையில் நேற்று முன்தினம் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து மாற்று அவைத் தலைவராக இருந்து தவெக எம்எல்ஏ சத்யபாமா அவையை வழிநடத்தினார். இதனால் சட்டசபை வரலாற்றிலேயே சபாநாயகர் இருக்கையில் அமர்ந்த முதல் பெண் சத்யபாமா தான் என்று தவெகவினர் ரீல்ஸ் வெளியிட்டு வருகின்றனர். இதன் உண்மைத்தன்மை குறித்து பார்க்கலாம்.

சட்டசபையில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அலுவல் பணிக்காக தனது அறைக்கு சென்ற போது, துணை சபாநாயகரும் அவையில் இல்லை. இதனால் மாற்று அவைத் தலைவராக தவெக எம்எல்ஏ சத்யபாமா அவையை நடத்தினார். அப்போது திமுக எம்எல்ஏ தங்கம் தென்னரசு, லேடி வெலிங்டன் சட்டசபைக்கு கொடுத்த ஆசனத்தில் பெண்மணி ஒருவர் அமர வேண்டும் என்பது நீண்ட காலமாக எல்லோரிடமும் இருக்கும் எதிர்பார்ப்பு.

Sathyabama

மாற்று தலைவராக நீங்கள் அமர்ந்திருப்பதை பார்ப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்த்துகிறோம் என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து தவெகவினர் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்த முதல் பெண்.. அதனை சாதித்து காட்டியது தவெக தான் என்று சோசியல் மீடியாவில் ரீல்ஸ் மற்றும் பதிவுகளை வெளியிட்டு வந்தனர்.

மாற்று பெண் அவைத் தலைவர்கள்

ஆனால் இதற்கு முன்பாகவே தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டசபையில் பல்வேறு பெண் எம்எல்ஏக்கள் மாற்று சபை தலைவர்களாக இருந்துள்ளனர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 7 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த பெண் எம்.எல்.ஏ. ஏ.எஸ். பொன்னம்மாள், ராஜாத்தி குஞ்சிதபாதம், பி.கே.ஆர். லட்சுமிகாந்தம், யசோதா, ராஜம்மாள் ஆகியோர் மாற்று அவைத் தலைவர்களாக இருந்துள்ளனர்.

அதேபோல் திமுகவைச் சேர்ந்த எஸ்.பி. சற்குணம், காஞ்சனா கமலநாதன் ஆகியோரும், அதிமுகவைச் சேர்ந்த சி.எம்.சூரியக்கலாவும் மாற்று அவைத் தலைவர்களாக இருந்துள்ளனர். அதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த லீமா ரோஸ் எம்எல்ஏ மாற்று அவைத் தலைவர்களாக செயல்பட்டுள்ளார்.

உண்மை என்ன?

தமிழகத்தின் நீண்ட சட்டசபை பாரம்பரியத்தில் இதுவரை தமிழகத்தில் சபாநாயகராகவோ அல்லது துணை சபாநாயகராகவோ பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை. இதனால் தவெக எம்எல்ஏ தான் மாற்று அவைத் தலைவராக சபாநாயகர் இருக்கையில் அமர்ந்த பெண் என்பது பொய்யான செய்தியாகும்.

Fact Check

வெளியான செய்தி

மாற்று பெண் சபாநாயகராக அவையை நடத்திய முதல் பெண் தவெக எம்எல்ஏ சத்யபாமா தானா?

முடிவு

தமிழக சட்டசபை வரலாற்றில் இதுவரை மாற்று சபாநாயகராக 10 பெண்கள் அவையை வழிநடத்தி இருக்கின்றனர்.

ரேட்டிங்

False
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+