"அனுமன் இலங்கையை எரிக்கவே இல்லை.." ராகுல் சொல்லியதாக பரவும் வீடியோ! சாடும் வலதுசாரிகள்! உண்மை என்ன
டெல்லி: இலங்கையை அனுமன் தீக்கிரையாக்கவில்லை என்று ராகுல் காந்தி கூறியதாக வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இது உண்மை தானா ராகுல் காந்தி உண்மையாகவே அப்படிச் சொன்னாரா என்பதைப் பார்க்கலாம்.
மோடி பெயர் தொடர்பான அவதூறு வழக்கில் ராகுல் காந்தியின் தீர்ப்பு சமீபத்தில் தான் நிறுத்தி வைக்கப்பட்டது. அவர் மீண்டும் எம்பி பதவியையும் பெற்ற நிலையில், கடந்த வாரமே அவர் மழைக்காலக் கூட்டத்தொடரிலும் கலந்து கொண்டார்.

இதற்கிடையே ராவணனின் ராஜ்ஜியமான இலங்கையை இந்துக் கடவுளான அனுமன் எரிக்கவில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பேசியதாக ஒரு வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
ராகுல் காந்தி: இதனை வலதுசாரிகள் பலரும் தங்கள் ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர். ராகுல் காந்தி இந்து இதிகாசங்கள் குறித்து தொடர்ச்சியாக இப்படிப் பேசுவது சரியான போக்கு இல்லை என்று சாடியுள்ள அவர்கள், இந்துக்கள் மனதை புண்படுத்தும் வகையில் அவர் தொடர்ச்சியாகப் பேசி வருவதாகவும் சாடியுள்ளனர்.
ராமாயணத்தின்படி முதலில் அனுமன் தான் சீதையைப் பார்க்க இலங்கை செல்வார். அப்போது அவர் சீதையை விடுவிக்க வேண்டும் என்று ராவணனிடம் சென்று கூறுவார். அப்படிச் சொன்னதும் அனுமனின் வாலுக்கு தீ வைக்க ராவணன் உத்தரவிடுவார். தீ வைக்கப்பட்ட உடன் அதை வைத்தே அனுமன் இலங்கை முழுவதையும் தீக்கிரையாக்குவார் என்பதே அதில் கூறப்பட்டிருக்கும்.
அட்டாக்: இதற்கிடையே சிலர் ராகுல் காந்தியின் அந்த 9 நொடி வீடியோவை இணையத்தில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். ராகுல் காந்தி ராமயமணம் என்று ஏதோ ஒன்றைப் படித்து வந்துவிட்டு இப்படிச் சொல்வதாக அவர்கள் சாடி வருகின்றனர். மேலும், ராகுல் காந்தி தொடர்ச்சியாக இந்துக்கள் மனதைப் புண்படுத்தும் வகையில் பேசி வருவதாகவும் பலரும் சாடியுள்ளனர். இது இணையத்தில் டிரெண்டாகும் நிலையில், இது உண்மையா.. ராகுல் காந்தி இப்படிச் சொன்னாரா என்பதைப் பார்க்கலாம்.
கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி மத்திய அரசின் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது ராகுல் காந்தி உரையாற்றினார். அந்த வீடியோவின் ஒரு பகுதியைத் தான் கட் செய்து டிரெண்டாக்கி வருகின்றனர். இந்த முழு வீடியோ இப்போதும் இணையத்தில் இருக்கும் நிலையில், அதில் அவர் என்ன சொல்கிறார் என்பதை நம்மால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடிகிறது.
உண்மை என்ன: ராகுல் காந்தி அந்த உரையில் மத்திய பாஜக அரசைக் கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். அதில் ஒரு கட்டத்தில் தான் ராகுல் காந்தி இந்து இதிகாசமான ராமாயணத்தை உதாரணமாகச் சொல்லி பாஜகவை விமர்சிக்கிறார்.
அதில் அவர், "மேகநாதர், கும்பகர்ணன் என்று இருவரின் பேச்சை மட்டுமே இராவணன் கேட்டான்.. அதேபோல், நரேந்திர மோடியும் அமித் ஷா, அதானி என்ற இருவர் சொல்வதை மட்டும் கேட்கிறார். ஒன்றை மறக்க வேண்டாம்.. இலங்கையை அனுமன் எரிக்கவில்லை. ராவணனின் ஆணவத்தால் தான் இலங்கையை எரிந்தது. ராவணனை ராமன் கொல்லவில்லை, ராவணனின் அகங்காரம் தான் அவனைக் கொன்றது..
முழுக்க முழுக்க பொய்: நீங்கள் மணிப்பூரில் மண்ணெண்ணெய்யை ஊற்றிப் பற்ற வைத்து உள்ளீர்கள்.. இப்போது அதை ஹரியானாவில் செய்கிறீர்கள்.. நீங்கள் ஒட்டுமொத்தமாக நாட்டை எரிக்கிறீர்கள்" என்று அவர் கூறுகிறார். இதுதான் அவரது முழு பேச்சு.. ராமாயணத்தைக் குறிப்பிட்டு அவர் இப்படிதான் பேசுகிறார்.. இதைத்தான் சிலர் வெட்டி தவறான பொருள் தரும் வகையில் பரப்புகிறார்கள்.
எனவே, முழு வீடியோவை நாம் செக் செய்த போது ராகுல் காந்தியின் பேச்சில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டுமே வெட்டி ஒட்டி தவறான பொருள் தரும் வகையில் இணையத்தில் அவர்கள் பரப்புவதும் தெரிய வருகிறது. முழு வீடியோவை பார்த்தால் அனைவருக்கும் ராகுல் காந்தி என்ன சொல்ல வருகிறார் என்பது புரியும்.

Fact Check
வெளியான செய்தி
இலங்கையை அனுமன் எரிக்கவே இல்லை என ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.
முடிவு
ராகுல் காந்தியின் பேச்சின் சில நொடிகளை மட்டும் கட் செய்து போலி செய்தியைப் பரப்புகிறார்கள்.. இது பொய்யான ஒன்று
ரேட்டிங்
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications