தங்கையுடன் திருமணம்? பாக். கிரிக்கெட் வீரர் பாபர் அசாமை தாறுமாறாக திட்டும் நெட்டிசன்கள்! உண்மை என்ன
இஸ்லாமாபாத்: இப்போது கிரிக்கெட் உலகில் இருக்கும் தலைசிறந்த வீரர்களில் ஒருவர் பாபர் அசாம். பாகிஸ்தானைச் சேர்ந்த பாபர் அசாம் பல கிரிக்கெட் தொடர்களில் ரன்களை குவித்துள்ளார். இவர் குறித்த படம் தான் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அது உண்மைதானா என்று பார்க்கலாம்.
அந்தப் படத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரும் இப்போதுள்ள தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவருமான பாபர் அசாம் ஒரு பெண்ணுடன் இருக்கிறார். அந்த படம் குறித்து இணையத்தில் பல வித தகவல்கள் பரவி வருகிறது.

இந்த படத்தை இணையத்தில் பரப்பி பலரும் பாபர் அசாம் தனது சகோதரியையே திருமணம் செய்து கொண்டதாகக் கூறி வருகின்றனர். இந்தப் படத்தைப் பலரும் ஷேர் செய்த நிலையில், உண்மையாகவே பாபர் அசாம் தனது சகோதரியைத் தான் திருமணம் செய்து கொண்டாரா என்ற சந்தேகமும் பலருக்கும் எழலாம். இந்த போட்டோவில் இருப்பது உண்மைதானா.. இந்த பெண் யார் என்பது குறித்து நாம் இதில் பார்க்கலாம்.
டிரெண்டாகும் படம்: இந்த போட்டோவை ஆய்வு செய்தால் அது ஒரு போலி செய்தி தளத்தில் இருந்து வந்ததாகவே தெரிகிறது. கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி அவர்கள் பாபர் அசாம் குறித்த கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தனர். அதில் பாபர் அசாம் தனது சகோதரியையே ஒரு தனிப்பட்ட நிகழ்வில் திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்பட்டிருந்தது. மேலும், அவர்களின் திருமண விழா உலகக் கோப்பைக்குப் பின் நவம்பர் 2023இல் நடைபெறும் என்று கூறப்பட்டிருந்தது.
இருப்பினும், இவர்கள் இப்படிச் சொல்ல எந்தவொரு ஆதாரமும் இல்லை.. அதேபோல பாபர் அசாமின் தனிப்பட்ட டீமும் இந்த செய்தியை அடியோடு மறுத்துள்ளனர். மேலும், இதுபோல திருமணம் நடந்ததற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை. இது குறித்து பாபர் அசாம் தரப்பில் விரிவான விளக்க அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
உண்மை என்ன: அதில் அவர்கள், "நவம்பரில் பாபர் அசாமின் திருமணம் நடைபெறுகிறது என்று வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் பொய்யானது. இது அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பெரிய அதிர்ச்சியாகவே இருந்துள்ளது. இதுபோல உறுதி செய்யப்படாத செய்திகளைப் பகிர்வதைத் தவிர்க்கவும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் பாபர் அசாமுக்கு திருமணம் என்பதும் அவர் தனது சகோதரியையே திருமணம் செய்து கொள்கிறார் என்பதும் பொய்யான தகவல் என்பதும் உறுதியாகிறது. அவர் தனது சகோதரியையே திருமணம் செய்து கொண்டார் என்பதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை என்பது தெளிவாகிறது.
யார் அந்த பெண்: அது சரி அப்போது அந்த பெண் யார்.. இந்த போட்டோ எங்கே எடுக்கப்பட்டது எனக் கேட்கிறீர்களா.. இந்த போட்டோவை நாம் தேடிப் பார்க்கும் போது இது முதலில் கடந்த 2023 ஜனவரி 31ஆம் தேதி எடுக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது. பிரபல கிரிக்கெட் நடுவர் அலீம் தாரின் மகனின் திருமண நிகழ்வில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. அந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்ட பாபர் அசாமுடன் போட்டோ எடுக்கப் பலரும் விரும்பிய நிலையில், இந்தப் பெண்ணும் புகைப்படம் எடுத்துள்ளார்.
அவ்வளவு தான் இந்தப் படத்தின் வரலாறு.. ஆனால்,இதைத்தான் சிலர் பரப்பி பாபர் அசாம் தனது சகோதரியையே திருமணம் செய்து கொண்டதாகப் பொய்யான தகவல்களைப் பரப்பி வருகின்றனர்.

Fact Check
வெளியான செய்தி
பிரபல கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் தனது சொந்த சகோதரியையே திருமணம் செய்து கொண்டார்.
முடிவு
இது முற்றிலும் தவறான செய்தி என்று பாபர் அசாம் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது
ரேட்டிங்
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications