ஜவான் சக்சஸ் ஓகே.. "நான் இந்துஸ்தானி இல்லை" என்றாரா ஷாருக் கான்? தீயாக பரவும் வீடியோ! உண்மை என்ன
டெல்லி: ஷாருக் கானின் ஜவான் திரைப்படம் தாறுமாறாக ஹிட் அடித்துள்ள நிலையில், அவர் முன்பு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வீடியோ இணையத்தில் டிரண்டாகி வருகிறது. அது உண்மை தானா.. அதில் அவர் என்ன பேசினார் என்பது குறித்துப் பார்க்கலாம்.
அட்லி இயக்கத்தில் ஷாருக் கான், நயன்தாரா, விஜய் சேதுபதி ஆகியோரின் நடிப்பில் வெளியாகி மாஸ் ஹிட் அடித்துள்ள படம் ஜவான். இந்த படத்தைத் தமிழக ரசிகர்கள் என்னதான் கிண்டல் செய்தாலும், வசூலில் இது தாறுமாறாகக் கலக்கி வருகிறது.

ஷாருக் கானுக்கு கடந்த சில ஆண்டுகளாகவே எந்தவொரு படமும் பெரிய வெற்றியைத் தரவில்லை. கடந்த ஜன. மாதம் வெளியான பதான் தான் சரிந்திருந்த அவரது மார்க்கெட்டை தூக்கி நிறுத்தியது. இந்த ஜவான் படம் அதை அடுத்து லெவலுக்கு எடுத்துச் சென்றுவிட்டது என்றே சொல்லலாம்.
ஷாருக் கான்: உலகெங்கும் இருக்கும் ஷாருக் ரசிகர்கள் ஜவான் படத்தை கொண்டாடித் தீர்க்கிறார்கள். அனைத்து தியேட்டர்களிலும் ஷாருக் ரசிகர்கள் படையெடுத்து வருகிறார்கள். ஜவான் திரைப்படம் ஷாருக் மார்கெட்டை அடுத்து கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களிலும் கூட ஜவான் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்கிடையே ஷாருக் கானின் வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
அந்த சின்ன வீடியோவில் ஷாருக் கான், "சிறு வயதில் இருந்தே எனக்குக் குரானை சொல்லிக் கொடுத்தார்கள்.. அதைப் புரிந்துகொண்டு அல்லாஹ் நமக்குக் கற்றுக் கொடுத்த பாதையைப் பின்பற்ற முயன்றேன்.. ஒரு நல்ல முஸ்லீம் என்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்" என்று அவர் கூறுவது போல இருக்கிறது. இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
பரவும் தகவல்: இந்த வீடியோவை பரப்பும் ஷாருக் கான் எதிர்ப்பாளர்கள் பலரும் அவருக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். ஷாருக் கான், "நான் முஸ்லீம் மற்றும் பாகிஸ்தானியன்" என்று சொன்னதாகச் சிலர் குறிப்பிடுகின்றனர். இன்னும் சிலர், "நான் இந்துவும் இல்லை.. இந்துஸ்தானியும் இல்லை" என்றும் கூட ஷாருக் கான் சொன்னதாக அந்த வீடியோவை இணையத்தில் டிரெண்டாக்கி வருகிறார்கள்.
இதைப் பலரும் சமூக வலைத்தளங்களில் பரப்பி வரும் நிலையில், அதன் உண்மைத்தன்மை குறித்தும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த வீடியோ குறித்து நாம் ஆய்வு செய்ததில் அது 2009ஆம் ஆண்டு நடந்த சம்பவம் என்றும் அதன் ஒரு பகுதியை மட்டும் வெட்டி இப்போது பரப்பி வருவதும் தெரிய வந்தது. அந்த முழு பேட்டியில் அவர் எந்த இடத்திலும் தான் பாகிஸ்தானியர் என்றோ இந்துஸ்தானி இல்லை என்றோ அறிவிக்கவில்லை.
எந்த நிகழ்ச்சி: கடந்த 2008ஆம் ஆண்டில் மும்பையில் நடந்த தாக்குதலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 2009இல் இந்தியா கேட்டில் நடந்த நிகழ்வில் தான் ஷாருக் கான் பேசியிருந்தார். இந்த வீடியோவில், ஷாருக் கான் தவிர, அப்போதைய டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித், பாடகர் சங்கர் மகாதேவன், பாடகி ஸ்ரேயா கோஷல், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த முழு வீடியோவில் 44 நிமிடத்தில் ஷாருக் கான் பேசுகிறார்.
அங்கே பேசிய ஷாருக் கான், "இப்போது என்னைப் பார்த்து பயங்கரவாதம் பற்றிய உங்கள் கருத்து என்ன? என அடிக்கடி கேட்கிறார்கள். பயங்கரவாதம் ஆபத்தானது. இதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது என்பதால் இது மிகவும் விசித்திரமான கேள்வியாக நான் கருதுகிறேன். நான் ஒரு முஸ்லீம் என்பதால், என்னிடம் இந்த கேள்வியைக் கேட்கிறார்கள் என நினைக்கிறேன்.
என்ன பேசினார்: சிறுவயதிலிருந்தே எனக்குக் குரான் சொல்லிக் கொடுத்தார்கள். அதைப் புரிந்து கொண்டு அல்லாஹ் பாதையில் நடக்க முயன்று வருகிறேன்.. ஒரு நல்ல முஸ்லிமாக இருப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்" என்கிறார். இது தான் இப்போது இணையத்தில் டிரெண்டாகிறது. இருப்பினும், அவர் அத்துடன் தனது பேச்சை முடிக்கவில்லை.. தொடர்ந்து பேசிய ஷாருக், "இந்த நாடு எனக்கும் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொடுத்துள்ளது. நான் வளர்ந்த தெருவில் எனக்குக் கீதையை கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.
சிறுவயதில் ராம் லீலா டிராமாவில் குரங்குப் படையில் குரங்கு வேடத்தில் நடித்திருக்கிறேன். எனது பள்ளியில் எனக்குக் கிறிஸ்தவம் சொல்லித் தந்தார்கள்.. நான் எனது நண்பர்களுடன் சேர்ந்து புத்த மதம் குறித்து படம் எடுத்துள்ளேன்.. என் மனைவி ஒரு பஞ்சாபி இந்து. இந்த உறவுகள் மற்றும் நட்புகள் மூலம், நான் ஒரு சிறந்த மனிதனாக மாறிவிட்டேன். நான் இந்தியனாக இருக்கிறேன்.. இந்தியனாக இருப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்" என்று அவர் கூறுகிறார்.
100% பொய்: மேலும், மத நல்லிணக்கம் குறித்து சுதந்திரப் போராட்ட வீரரான அவரது தந்தை கற்றுக் கொடுத்தது குறித்தும் குறிப்பிட்டார். மேலும், பயங்கரவாதத்தை ஒழிக்க அனைத்து தரப்பு மக்களும் ஒன்றாக இணைந்து போராடுவது அனைவரது தார்மீக கடமை என்றும் அவர் தெரிவித்தார்.. இந்த வீடியோவில் அவர் எங்கும் தான் பாகிஸ்தானியன் என்றோ, இந்துஸ்தானி அல்ல என்றோ கூறவில்லை. இருப்பினும், நெட்டிசன்கள் சிலர் பொய்யான தகவல்களைப் பரப்பி வருகின்றனர்

Fact Check
வெளியான செய்தி
நான் இந்துஸ்தானி இல்லை என்றும் பாகிஸ்தானி என்றும் ஷாருக் கான் பழைய நிகழ்ச்சி ஒன்றில் கூறினார்.
முடிவு
மும்பை தாக்குதலில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவிக்கும் அந்த வீடியோவில் அவர் எங்கும் இதுபோல குறிப்பிடவில்லை,.
ரேட்டிங்
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில்












Click it and Unblock the Notifications