FACT CHECK: என்னது..தமிழக அரசு பெட்ரோலுக்கு ரூ.54 வரி வசூலிக்கிறதா? பாஜக ராமலிங்கம் சொன்னது உண்மையா?
சென்னை: தமிழ்நாடு அரசு பெட்ரோலுக்கு ரூ.54 வரி விதிக்கிறது என பாஜக மாநில துணைத் தலைவர் கேபி ராமலிங்கம் பேசிய வீடியோ அதிகளவில் பகிரப்படும் நிலையில் அதன் உண்மைத் தன்மை குறித்து அலசுவோம்.
பாஜக மாநிலத் தலைவராக இருக்கும் கே.பி.ராமலிங்கம் செய்தியாளர் சந்திப்பில் பேசிய வீடியோ ஒன்று தற்போது அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. அவர் அதில் பேசுகையில், "சென்னையில் பெட்ரோல் என்ன விலை? பெங்களூருவில் என்ன விலை? இன்று அங்கு ரூ.10 குறைவு. ஏன் அதை உங்களால் குறைக்க முடியவில்லை. ஜிஎஸ்டியில் இதை கொண்டு வாருங்கள். விலை குறையப்போகிறது. யார் வேண்டாம் என்று சொன்னது. நாங்கள் 16 ரூபாய் வரி போட்டோம். நீங்கள் ரூ.54 வரி விதித்து உள்ளீர்கள். மத்திய அரசு போட்ட வரி எவ்வளவு? மாநில அரசு போட்ட வரி எவ்வளவு என்று போர்டு போடுங்கள்" என்று பேசி உள்ளார்.

2022 ஆம் ஆண்டு அவர் பேசிய இந்த வீடியோ தற்போது அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதன் உண்மைத் தன்மை குறித்து தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு விளக்கம் அளித்து உள்ளது. அதில், "பெட்ரோலுக்கு தமிழ்நாடு அரசு ரூ.54 வரி விதிக்கிறது' என்பது வதந்தியே!
வதந்தி: பா.ஜ.க மாநில துணைத்தலைவர் கே.பி.இராமலிங்கம், "பெட்ரோலுக்கு தமிழ்நாடு அரசு ரூ.54 வரி விதிக்கிறது. ஒன்றிய அரசு ரூ.16 மட்டுமே வரி விதிக்கிறது" என பேசிய காணொளி பரவி வருகிறது.
மத்திய அரசு வரி ரூ.16, தமிழக அரசு வரி ரூ.54; பெட்ரோல் பங்க்ல போர்டு வைக்க தமிழக அரசுக்கு தைரியம் இருக்கா?
— Annamalai Army 🔥 (@Sriniva73783247) February 13, 2024
பாஜக KP..ராமலிங்கம் கேள்வி ... pic.twitter.com/1iAe6IeM05
உண்மை என்ன?: கே.பி.இராமலிங்கம் கடந்த 2022 ஆம் ஆண்டு பேசிய காணொளிதான் தற்போது சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகிறது. அந்தக் காணொளியில் அவர் பேசியது முற்றிலும் பொய்யானதாகும். பெட்ரோல், டீசலின் அடிப்படை விலை, கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப மாறுபடும். விலை உயரும் போது அடிப்படை விலை, ஒன்றிய அரசின் கலால் வரி ஆகியவற்றுடன் மாநில அரசின் வாட் வரியின் சதவீதத்திற்கேற்ப விற்பனை விலை மாறுபடும். ஒவ்வொரு மாநில அரசும் குறிப்பிட்ட அளவு வாட் வரி விதிக்கின்றன.
புதிய அரசு ஆட்சிக்கு வந்ததும் பெட்ரோலுக்கு ரூ.3 குறைத்து 2021 ஆம் ஆண்டு அரசாணை வெளியிட்டது. அதன் பிறகு மாநில அரசு வரியில் எந்த மாற்றமும் கொண்டு வரவில்லை. கே.பி.இராமலிங்கம் பேசிய 2022 ஏப்ரல் காலகட்டத்தில் ஒன்றிய அரசு பெட்ரோலுக்கு கலால் வரியாக ரூ.27.9 விதித்துள்ளது. அப்போதைய தமிழ்நாடு அரசின் வரி ரூ. 22.54 (13% + 11.52 ரூ/லி) விட இது அதிகமாகும்.
கே.பி.இராமலிங்கம் கடந்த 2022 ஆம் ஆண்டு பேசியபோது இருந்த பெட்ரோல் விலை:
ஏப்ரல் 2022 ல் பெட்ரோலின் அடிப்படை விலை (போக்குவரத்து செலவு உட்பட) - ரூ. 56.85 / லி
ஒன்றிய அரசின் கலால் வரி, செஸ் வரி: ரூ.27.9 / லி
முகவர் கமிஷன்: ரூ. 3.56 / லி
மாநில அரசின் வாட் வரி: ரூ.22.54 / லி
சில்லறை விற்பனை விலை (சென்னை): ரூ.110.85 / லி
தமிழ்நாடு அரசின் வாட் வரி 13% + 11.52 ரூ/லி." என்று குறிப்பிட்டு உள்ளது.

Fact Check
வெளியான செய்தி
தமிழ்நாடு அரசு பெட்ரோலுக்கு ரூ.54 வரியும், மத்திய அரசு ரூ.16 மட்டுமே வரி வசூலிப்பதாக பாஜக மாநிலத் தலைவர் கே.பி.ராமலிங்கம் பேச்சு
முடிவு
மத்திய அரசு ரூ.27.9 வரியும், தமிழ்நாடு அரசு ரூ. 22.54 வரி மட்டுமே வசூலிக்கிறது.
ரேட்டிங்
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications