"சந்திரயான்-3 இருக்கட்டும்! அரசு பஸ் என்ன இவ்வளவு மோசமாக இருக்கு.." பரவும் பழைய படம்! 100% வதந்தி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவிற்குச் சென்றுள்ள நிலையில், திராவிட மாடல் ஆட்சியில் மிக மோசமான நிலையில் அரசு பேருந்து இருப்பதாகச் சொல்லி இணையத்தில் வீடியோ ஒன்று பரவி வருகிறது.

இஸ்ரோ நிர்வாகம் கடந்த மாதம் சந்திரயான் 3 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பியது. சுமார் 40 நாட்கள் பயணித்த அந்த சாட்டிலைட் நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. அதிலும் நிலவின் தென் துருவத்தில் இந்த ராக்கெட் தரையிறங்கியது.

 Fact check: Old picture of bus in very bad condition is spreading now in social media

நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய முதல் நாடு என்ற சிறப்பையும் சந்திரயான் 3 இந்தியாவுக்குப் பெற்றுத் தந்தது. மேலும், அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் சீனாவுக்குப் பிறகு நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய நாடு என்ற சிறப்பையும் இந்தியா பெற்றது.

சந்திரயான் 3: அடுத்து சுமார் இரண்டு வாரங்களுக்கு நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள உள்ளது. இந்த சந்திரயான் 3 குறித்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் உலா வந்து கொண்டு இருக்கிறது. மேலும், சந்திரயான்-3 பெற்ற வெற்றியை வைத்து பலரும் இங்கே திமுக அரசையும் விமர்சித்து வருகின்றனர். அப்படி ஒரு விமர்சனம் தான் இப்போது இணையத்தில் பேசுபொருள் ஆகியுள்ளது.

அதாவது பேருந்து ஒன்றின் பின்புறம் கயிறை வைத்துக் கட்டப்பட்ட போட்டோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. பேருந்தின் பின்புறம் கழன்று வராமல் இருக்கக் கயிற்றை போட்டு அவர்கள் கட்டியுள்ளதைப் போலவே தெரிகிறது. இந்தப் படத்தை நெட்டிசன்கள் பலரும் தங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

பரவும் படம்: சந்திரனுக்கு ராக்கெட் அனுப்பினாலும் திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் அரசு பஸ்கள் மோசமாக இருப்பதாகப் பலரும் விமர்சித்தனர். இதனை அதிமுக நிர்வாகிகள் சவுக்கு சங்கர் ஆர்மி என பல பக்கங்களும் பகிர்ந்தனர். இப்படி பலரும் அந்த போட்டோவை பகிர்ந்ததால் இதை உண்மை என்று பலரும் கருதினர். தமிழ்நாட்டில் உடனடியாக பேருந்துகளைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் விமர்சிக்கத் தொடங்கிய நிலையில், அது டிரெண்டிங் ஆனது.

இதற்கிடையே இந்தப் படம் உண்மை தானா.. இது எங்கே எடுக்கப்பட்ட படம் என்பது குறித்து நாம் ஆய்வு செய்தோம். அதில் இப்போது இணையத்தில் பரவும் படத்தின் நிறம், அதன் பேருந்து எண், ஊர் ஆகியவற்றை வைத்து அது தமிழ்நாட்டைச் சேர்ந்த பேருந்து தான் என்பது உறுதியாகிறது. நாமக்கல் மற்றும் துறையூர் இடையே இயக்கப்படும் பேருந்து என்பதும் உறுதியாகிறது.

உண்மை என்ன: அதேநேரம் இந்தப் படத்தை நாம் ரிவர்ஸ் சேர்ச் செய்து பார்க்கும் போது இந்தப் படம் புதிய படம் இல்லை என்பது தெரிய வருகிறது. கடந்த 2018ஆம் ஆண்டில் ஜூலை மாதமே இந்தப் படம் இணையத்தில் பரவி உள்ளது. அப்போதைய அதிமுக அரசை விமர்சிக்கும் வகையில் இந்தப் படத்தை அப்போதே நெட்டிசன்கள் பரப்பியுள்ளதும் நமக்குத் தெரிய வருகிறது.

இதன் மூலம் இது இப்போது எடுக்கப்பட்ட புதிய படம் இல்லை என்பது உறுதியாகிறது. எப்போதோ எடுக்கப்பட்ட பழைய ஃபோட்டோவை தான் சிலர் இப்போது எடுக்கப்பட்ட புதிய படம் என்பதைப் போலத் திரித்து வெளியிட்டு வருகிறார்கள். மேலும், சமீபத்தில் பேருந்துகள் இதுபோல மோசமாக இருந்ததாக எந்தவொரு படமும் இணையத்தில் பரவவில்லை என்பதும் நமக்கு உறுதியாகத் தெரிகிறது.

Fact Check

வெளியான செய்தி

நிலவுக்கு இந்தியா சந்திரயான் 3 ராக்கெட்டை அனுப்பும் நிலையில், தமிழ்நாட்டில் முறையான பேருந்துகள் கூட இல்லாத நிலை இருக்கிறது

முடிவு

பல ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட பழைய படத்தை இப்போது எடுக்கப்பட்ட படத்தைப் போலப் பரப்புகிறார்கள்

ரேட்டிங்

Misleading
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+