"இந்தியா" கூட்டணிக்கு வாக்களியுங்கள்! மாற்றி சொன்ன பிரதமர் மோடி? தீயாக பரவும் வீடியோ.. உண்மை என்ன
டெல்லி: பேரணி ஒன்றில் பேசும் பிரதமர் நரேந்திர மோடி "இந்தியா" கூட்டணிக்காக வாக்களிக்கச் சொன்னதாக இணையத்தில் வீடியோ ஒன்று பரவி வருகிறது. அதன் உண்மைத்தன்மை குறித்து நாம் இதில் பார்க்கலாம்.
மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இணைய வேண்டும் என்று நீண்ட காலமாகவே பலரும் கூறி வந்தனர். அதற்கு சில மாதங்களுக்கு முன்பு ஒரு வழியாகப் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அடித்தளம் போட்டார்.

பாட்னாவில் அப்போது நடந்த கூட்டத்தில் பல்வேறு எதிர்க்கட்சிகளும் கலந்து கொண்டன. காங்கிரஸ், திரிணாமுல், ஆம் ஆத்மி என அதுவரை எதிரும் புதிருமாக இருந்த பல கட்சிகளும் அந்தக் கூட்டணிக்குள் வந்தன.
இந்தியா கூட்டணி: முதல் கூட்டத்தை பாட்னாவில் அவர்கள் நடத்திய நிலையில், பெங்களூர், மும்பை என அடுத்தடுத்து வெற்றிகரமாகக் கூட்டங்களை நடத்தினர். இந்தக் கூட்டணிக்கு "இந்தியா" எனப் பெயர் வைத்துள்ளனர். அதாவது INDIA- Indian National Developmental Inclusive Alliance எனப் பெயர் வைத்துள்ளனர். அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில், இப்போது முதலே அதற்கான பணிகளைத் தொடர்ச்சியாக இந்தக் கூட்டணி தொடர்ந்து செய்து வருகிறது.
விரைவில் இந்தக் கூட்டணி தேர்தல் பேச்சுவார்த்தையையும் தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. மோடி vs இந்தியா என்ற பிம்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்தக் கூட்டணிக்கு "இந்தியா" எனப் பெயர் வைத்ததாகக் கூறப்படுகிறது. நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசும் போது, எதிர்க்கட்சியினர் "இந்தியா" என்றே முழக்கமிட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடி "இந்தியா" கூட்டணிக்கு ஆதரவு கோருவது போன்ற வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
பிரதமர் மோடி: "இந்தியா" கூட்டணிக்காகப் பிரதமர் மோடி கோஷங்களை எழுப்புவது போன்ற காட்சிகள் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோவை பகிரும் பலரும் பிரதமர் மோடியே கூறிவிட்டார்.. இனி "இந்தியா" கூட்டணிக்கே வாக்களிக்கும் என்று கூறி வருகின்றனர். இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகும் நிலையில், இது உண்மை தானா என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
நாம் இணையத்தில் இந்த வீடியோ குறித்துத் தேடும் போது இது புதிய வீடியோ இல்லை என்பது தெரிய வருகிறது. கடந்த 2013இல் எடுக்கப்பட்ட வீடியோவை தான் புதிய வீடியோ போல சிலர் இணையத்தில் பரப்பி வருகின்றனர். அப்போது "இந்தியா" கூட்டணியே இல்லை. அப்போது காங்கிரஸ் தலைமையில் இருந்தது யுபிஐ கூட்டணி தான். அதாவது, இந்த வீடியோவில் பிரதமர் மோடி சொல்வது இந்தியா நாட்டை தானே தவிர.. இந்தியா கூட்டணியை இல்லை.
உண்மை என்ன: கடந்த 2013 டிசம்பர் மாதம் மும்பையில் நடந்த பேரணியில் அப்போது குஜராத் முதல்வராக இருந்த பிரதமர் மோடி பேசுவதையே இப்போது பேசியது போலப் பரப்பி வருகின்றனர். அந்த வீடியோவில் நாம் பிரதமர் மோடியின் லுக்கை பார்க்கும் போது.. அது பழைய வீடியோ என்பது உறுதியாகிறது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி பேசிய முழு பேச்சும் அவரது யூடியூப் பக்கத்திலேயே இருக்கிறது.
அதில் 49.55 நிமிடத்தில் இருந்து வரும் பேச்சை மட்டும் கட் செய்து இப்போது சிலர் டிரெண்டாக்கி வருகின்றனர். 2014 பொதுத் தேர்தலில் நாட்டிற்காகவும் அதன் வளர்ச்சிக்காகவும் வாக்களிக்குமாறு பிரதமர் மோடி மக்களை வலியுறுத்துகிறார். அதன் பிறகே அவர் "இந்தியாவுக்கு வாக்களியுங்கள்" என்று முழக்கமிடுகிறார். அதில் அவர் "2014 தேர்தலில், நாட்டிற்காக வாக்களியுங்கள். எந்தவொரு கட்சிக்கும் வாக்களிக்க வேண்டாம். இந்தியாவுக்கு வாக்களியுங்கள்" என்கிறார்.
இந்த வீடியோவை தான் கட் செய்து.. பிரதமர் மோடி இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்கச் சொன்னதாக இணையத்தில் சிலர் திட்டமிட்டுப் பரப்புகிறார்கள். இதன் மூலம் இணையத்தில் பரவும் இந்த வீடியோ முற்றிலும் பொய்யானது என்பது தெளிவாகத் தெரிகிறது.

Fact Check
வெளியான செய்தி
பேரணி ஒன்றில் பேசும் பிரதமர் மோடி "இந்தியா" கூட்டணிக்காகத் தேர்தலில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறார்.
முடிவு
2013இல் எடுக்கப்பட்ட பழைய வீடியோவை ஏதோ இப்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ பல தவறாக இணையத்தில் பரப்பி வருகின்றனர்
ரேட்டிங்
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications