Fact Check: “ராகுல் ராஜீவ் பெரோஸ்”.. பிரிட்டனில் ராகுல் காந்தியின் பெயர் இதுவா? டிரெண்டாகும் படம்

இதன் உண்மை தன்மையை நான் ஆராய்வதற்காக ராகுல் காந்தி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கலந்துகொண்டு உரையாற்றி வீடியோவை தேடினோம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரிட்டனில் ராகுல் காந்தி கலந்துகொண்ட நிகழ்ச்சியில் அவர் உரையாற்றும்போது அவருக்கு வைக்கப்பட்ட பெயர் பலகையில், ராகுல் காந்தி என்று குறிப்பிடுவதற்கு பதிலாக ராகுல் ராஜீவ் பெரோஸ் என்று அவரது தந்தை மற்றும் பாட்டனார் பெயர்கள் இடம்பெற்று இருந்ததாக சமூக வலைதளங்களில் பரவி வரும் படத்தின் உண்மை குறித்து அலசுவோம்.

இந்திய ஒற்றுமை யாத்திரை, காங்கிரஸ் அகில இந்திய மாநாட்டுக்கு பிறகு இம்மாத தொடக்கத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி பிரிட்டனுக்கு ஒருவார சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார்.

அதில், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நிகழ்வில் கலந்துகொண்ட அவர், அந்நாட்டின் தலைநகர் லண்டனில் மார்ச் 5 ஆம் தேதி புலம்பெயர்ந்த இந்தியர்களை சந்தித்து பேசினார். அத்துடன் லண்டனில் இருக்கும் இந்திய அயலக காங்கிரஸ் (IOC) உறுப்பினர்களையும் சந்தித்தார்.

 கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்

பிரிட்டனில் இருக்கும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் உலகின் புகழ்பெற்ற மற்றும் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். இந்த பல்கலைக்கழகத்தின் மேலாண்மை துறை சார்பில் கடந்த வாரம்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் சிறப்புரை ஆற்ற ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

ஒற்றுமை யாத்திரை பற்றி பேச்சு

ஒற்றுமை யாத்திரை பற்றி பேச்சு

"21 ஆம் நூற்றாண்டில் கேட்க கற்றுக்கொள்வது" என்ற தலைப்பில் ராகுல் காந்தி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் பேசினார். இந்தியாவில் தான் மேற்கொண்ட பாரத் ஜோடா ஒற்றுமை யாத்திரை, 2 விதமான கொள்கைகள் மற்றும் உலகளாவிய உரையாடலுக்கான தேவை என 3 முக்கிய அம்சங்கள் குறித்து அவர் உரையாற்றினார்.

ராகுல் ராஜீவ் பெரோஸ்

ராகுல் ராஜீவ் பெரோஸ்

யாத்திரையின்போது வளர்த்த நீளமான தாடி மற்றும் தலை முடியை வெட்டி கோட் ஷூட் அணிந்து கலந்துகொண்ட ராகுல் காந்தியின் புகைப்படம் அதிகளவில் பகிரப்பட்டது. இந்த நிலையில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி பேசும்போது அவர் அருகே "ராகுல் ராஜீவ் பெரோஸ்" என்ற பெயர் பலகை இருக்கும் புகைப்படமும் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

பாஜக ஆதரவாளர்கள் விமர்சனம்

பாஜக ஆதரவாளர்கள் விமர்சனம்

இதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்த பாஜக ஆதரவாளர்கள், "நம்ம வூர்லதான் காந்தி வேசம்! வெளி நாடு வந்தா ராகுல் ராஜிவ் பெஃரோஸ்னு ஒரிஜினல் பேர்தான் வச்சிப்பாரு நம்ம தலைவரு...," என்று விமர்சித்து வருகிறார்கள். சாமானிய மக்களும் இதனை அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

ராகுல் பேசிய வீடியோ

ராகுல் பேசிய வீடியோ

இதன் உண்மை தன்மையை நான் ஆராய்வதற்காக ராகுல் காந்தி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கலந்துகொண்டு உரையாற்றி வீடியோவை தேடினோம். ஆங்கில ஊடகத்தின் யூடியூப் சேனலில் பதிவு செய்யப்பட்டு இருந்த அந்த வீடியோவில் இருந்துதான் இவர்கள் இதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து இருப்பார்கள் என தெரிகிறது.

காலியான பலகை

காலியான பலகை

ஆனால், அந்த வீடியோவில் இவர்கள் கூறுவதைபோல், "ராகுல் ராஜீவ் பெரோஸ்" என்று குறிப்பிடப்படவில்லை. அந்த பலகை என்பது எதுவும் எழுதப்படாமல் காலியாகவே இருந்தது. அதேபோல் ட்விட்டரில் கடந்த மார்ச் ஒன்றாம் தேதி சாம் பிட்ரோடா என்பவர் வெளியிட்ட இந்த நிகழ்வின் புகைப்படங்களிலும் அந்த பலகையில் எதுவும் எழுதப்படவில்லை.

 உண்மை என்ன?

உண்மை என்ன?

எனவே காலியாக உள்ள அந்த வெள்ளை பலகையில், "Rahul Rajiv Feroz, Gold from Potato expert, Wayanad, Kerala" என்று எடிட் செய்து இருப்பது தெளிவாகிறது. எனவே இது வதந்தி என்ற முடிவுக்கு நான் வருகிறோம். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தில் பிரதமர் மோடி காந்தி பெயரை ஏன் நேரு குடும்பம் பயன்படுத்துகிறது என விமர்சித்த நிலையில் இவ்வாறு வதந்தி பரப்பப்படுவது குறிப்பிடத்தக்கது.

Fact Check

வெளியான செய்தி

பிரிட்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில்ல் ராகுல் காந்தி உரையாற்றும்போது அவருக்கு வைக்கப்பட்ட பெயர் பலகையில் ராகுல் ராஜீவ் பெரோஸ் என்று வைத்து உள்ளனர்.

முடிவு

காலியாக இருந்த பெயர் பலகையில் ராகுல் ராஜீவ் பெரோஸ் என்று எடிட் செய்து பகிர்ந்து இருக்கிறார்கள்.

ரேட்டிங்

Misleading
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+