கம்பி கட்டுற கதை.. எது ஸ்வீடனில் “செக்ஸ் சாம்பியன்” போட்டியா? முகம் சுளிக்கும் “ரூல்ஸ்” -உண்மை என்ன?
ஸ்டாக்ஹோம்: ஐரோப்பிய நாடான சுவீடனில் செக்ஸை விளையாட்டாக அங்கீகரித்து செக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்த இருப்பதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில் இதன் உண்மை தன்மை என்னவென்று பார்ப்போம்.
ஸ்கேண்டினேவியன் நாடு என்று அழைக்கப்படும் ஐரோப்பிய நாடான ஸ்வீடன் குறித்த ஒரு செய்தி சமூக வலைதளங்கள் தொடங்கிய முன்னணி ஊடகங்கள் வரை அனைத்திலும் கடந்த ஒரு வாரமாக வலம் வந்துகொண்டு இருக்கிறது. பாலியல் உறவை அந்நாட்டு அரசு விளையாட்டாக அறிவித்து இருக்கிறது என்பதுதான் அந்த செய்தி.

இதனை முன்வைத்து நகைச்சுவை கருத்துக்களும், ஆதரவான கருத்துக்கள், விமர்சனங்களும் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இதுபோதாதென்று ஜூன் மாதம் சுவீடன் அரசு செக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்த இருப்பதாக ஒரு செய்தி வெளியானது. இதையும் பெரும்பாலான முக்கிய ஊடகங்கள் வெளியிட்டு இருக்கின்றன.
ஜூன் 8 ஆம் தேதி தொடங்கும் இந்த போட்டி சில வாரங்கள் தொடரும் என்றும், இதில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் 6 முதல் 8 மணி நேரம் தினசரி விளையாட இருப்பதாக கூறப்பட்டது. இந்தியாவில் ஒடிசா ரயில் விபத்து, மணிப்பூர் வன்முறை, மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் தொடர்பான செய்திகளை தாண்டி இந்த செய்தி அதிகம் பகிரப்பட்டது.
அந்த சாம்பியன்சிப் தொடரில் ஒரு போட்டி 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை நடைபெறும் என்றும், இதனை விளையாடுவதற்காக 16 விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு போட்டியாளர் 5 முதல் 10 புள்ளிகள் வரை பெறலாம் என்றும் செய்திகள் வெளியாகின. இந்த போட்டியில் விளையாட 20 பேர் முன்பதிவு செய்திருப்பதாகவும் கூறப்பட்டன.
இதெல்லாம் உண்மைதானா? இது தொடர்பாக சுவீடன் நாட்டு ஊடகங்கள் ஏதேனும் செய்தி வெளியிட்டு உள்ளனவா? என்று தேடியபோதுதான் கடந்த ஒரு வாரமாக பகிரப்பட்ட இந்த செய்திகள் அனைத்தும் வதந்தி என்பது தெரியவந்தது. இது தொடர்பாக சுவீடன் ஊடகமான "கொடெர்போர்க்ஸ் - போஸ்டன்" செய்தி வெளியிட்டு உள்ளது.

அந்த ஊடகம் வெளியிட்டு உள்ள செய்தியில், "சுவீடன் நாட்டில் செக்ஸ் கூட்டமைப்பு இயங்கி வருகிறது. அதன் தலைவர் டிராகன் பிராக்டிக் என்பவர், பாலியல் உறவால் மனிதர்களுக்கு ஏற்படும் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை அதிகரிப்பதற்காக செக்ஸ் சாம்பியன்சிப் போட்டிகளை நடத்த வேண்டும் என்ற பரிந்துரையை தேசிய விளையாட்டு கூட்டமைப்பிடம் தெரிவித்தார்.
ஆனால், தேசிய விளையாட்டு கூட்டமைப்பு செக்ஸ் கூட்டமைப்பின் தலைவர் டிராகன் பிராக்டிக்கின் பரிந்துரையை கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதியே நிராகரித்துவிட்டது. கடந்த ஜனவரி மாதம் பிராக்டிக் தனது பரிந்துரையை விளையாட்டு கூட்டமைப்பிடம் வழங்கி இருக்கிறார்." என்று குறிப்பிட்டு உள்ளது.
இதுகுறித்து சுவீடன் விளையாட்டு கூட்டமைப்பின் தலைவர் ஜோன் எரிக்சன் கூறுகையில், "எங்களின் எதிர்பார்ப்புகளை அவரது பரிந்துரை பூர்த்தி செய்யவில்லை. அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை நான் இங்கு தெரிவிக்க விரும்புகிறேன். நாங்கள் செய்வதற்கு இன்னும் நிறைய வேலைகள் இருக்கின்றன." என்றார். இதன் மூலம் அந்த செய்தி வதந்தி என்பது உறுதியாகிறது.

Fact Check
வெளியான செய்தி
செக்ஸை விளையாட்டாக அங்கீகரித்த ஸ்வீடன் அரசாங்கம், செக்ஸ் சாம்பியன் போட்டியை ஜூன் 8 முதல் நடத்துகிறது.
முடிவு
செக்ஸ் சாம்பியன் போட்டி நடத்த வேண்டும் என்ற பரிந்துரை ஏப்ரல் மாதமே நிராகரிக்கப்பட்டுவிட்டது.
ரேட்டிங்
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications