FACT CHECK: என்னது.. பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டவில்லையா? உண்மை என்ன?
சென்னை: அயோத்தியில் பாபர் மசூதியை இடித்த இடத்தில் ராமர் கோயில் கட்டப்படவில்லை என சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவலின் உண்மை தன்மை என்ன என்று விரிவாக பார்ப்போம்.
அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா வரும் 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் ஆக்கிரமித்து இருக்கும் நிலையில் பாபர் மசூதியை இடித்த இடத்தில் ராமர் கோயில் கட்டப்படவில்லை என ஒரு தகவல் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. ஏராளமானோர் பேஸ்புக், எக்ஸ், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக தளங்களில் இதனை பதிவிட்டு வருகின்றனர்.

அதில், "பாபர் மசூதியை இடித்த இடமும் ராமர் கோயில் கட்டும் இடமும் வேறு வேறு.. இஸ்லாமிய சகோதரர்களுக்கு இதை விட பெரிய துரோகம் என்ன இருக்க முடியும்? ராமர் எங்கே பிறந்தார்? மசூதி இருந்த இடத்திலா? ராமர் கோயில் கட்டும் இடத்திலா? மசூதி இருந்த இடத்தில் என்றால், ஏன் கோயிலை வேறெங்கோ 3 கிலோ மீட்டர் தொலைவில் கட்டினீர்கள்?
இப்போது கோயில் கட்டி இருக்கும் இடத்தில் தான் ராமர் பிறந்தார் என்றால், சம்பந்தம் இல்லாமல் ஒரு 500 வருடம் முன்பு கட்டிய புராதான சின்னத்தை எதற்காக உடைத்தீர்கள்? எப்போதோ அமைதியாக கோயில் கட்டி போயிருக்கலாமே? மேலும் பாபர் ராமர் எப்போதோ அமைதியாக கோயில் கட்டி போயிருக்கலாமே? மேலும் பாபர் ராமர் பிறந்த இடத்தில் கட்டினார் என்பது பொய் தானே??" என்று குறிப்பிட்டு உள்ளார்.
இந்த நிலையில் இதன் உண்மை தன்மை குறித்து ஆராயும் முயற்சியில் ஈடுபட்டபோது பல்வேறு உண்மை கண்டறியும் ஊடகங்கள் இது குறித்த தகவலை பகிர்ந்து உள்ளனர். கூகுள் மேப் உதவியுடன் அவர்கள் மேற்கொண்ட ஆய்வில் பாபர் மசூதி என குறிப்பிடப்பட்டு உள்ள இடத்தில் இருந்து கோயில் கட்டப்படும் இடம் 750 மீட்டர் தொலைவில் மட்டுமே உள்ளதை அறிய முடிந்தது. கூகுள் மேப்பின் சாட்டிலைட் படமும் இதை உறுதிபடுத்துகிறது. இதன் மூலம் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் ராமர் கோயில் கட்டப்படுகிறது என்று பகிரப்பட்ட தகவல் வதந்தி என உறுதிபடுத்துகிறோம்.

Fact Check
வெளியான செய்தி
பாபர் மசூதியை இடித்த இடமும் ராமர் கோயில் கட்டும் இடமும் வேறு வேறு. 3 கிலோ மீட்டர் தொலைவில் கோயில் கட்டியுள்ளார்கள்.
முடிவு
பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்துக்கும், கோயில் கட்டப்பட்ட இடத்திற்குமான தூரம் 750 மீட்டர் மட்டுமே.
ரேட்டிங்
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications