“ஈ சாலா கவர்மெண்ட் நமதே.. தலைவன்”.. ராகுல் காந்தியை இப்படியா பாராட்டினார் விராட் கோலி? FACT CHECK
டெல்லி: கர்நாடகா மாநில சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பாஜகவை வீழ்த்தி தனிப்பெரும்பான்மையுடன் பிரம்மாண்ட வெற்றியை பெற்று இருக்கும் நிலையில், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி புகழ்ந்து ஸ்டேட்டஸ் வைத்ததாக சில படங்கள் பகிரப்பட்டு வரும் நிலையில் அதன் உண்மைத்தன்மை பற்றி அலசுவோம்.
கர்நாடகா சட்டசபைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று இருக்கும் நிலையில், நேற்று முதல் அதுதொடர்பான செய்திகளும், சமூக வலைதள பதிவுகளும் அதிகளவில் பகிரப்பட்டு வரும் நிலையில், அதை விட வேகமாக வேறு 2 படங்களும் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன.

அதுதான் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, கர்நாடகா மாநில சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை வாழ்த்தி இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டசில் பதிவிட்டார் என்பது. இன்ஸ்டாகிராமில் விராட் கோலி ஸ்டேட்டஸ் வைத்த ஸ்க்ரீன் ஷாட்டுகள் என்று கூறி 2 படங்கள் சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகின்றன.
நிமோ யாதவ் என்ற ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படம் பகிரப்பட்டு உள்ளது. அதில், "The man, the myth, the leader @rahulgandhi" என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டு ராகுல் காந்தியின் படத்தை விராட் கோலி ஸ்டேட்டஸ் வைத்து உள்ளதுபோல் உள்ளது. இந்த படத்துடன் விராட் கோலி அருகே நெருப்பு ஸ்மைலியை பகிர்ந்து இதை அவர் நீக்க மாட்டார் என்று நம்புகிறேன் என குறிப்பிட்டு உள்ளார்.

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் மற்ற பக்கங்களிலும் வாட்ஸ் அப் குழுமங்களிலும் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் உண்மைத்தன்மையை ஆராய வேறு யாராவது இதை ஸ்க்ரீன் ரெக்கார்ட் செய்து பதிவிட்டு உள்ளார்களா? என்று ஆராய்ந்தோம். அதுபோல் யாரும் பதிவிடவில்லை.
அனைவரும் பகிரும் படத்திலும் கோலி இந்த ஸ்டேட்டசை வெளியிட்ட 17 நிமிடங்களுக்கு பின் ஸ்க்ரீன்ஷாட் எடுக்கப்பட்டதாகவே உள்ளது. கோலி போன்ற ஒரு பிரபலம் இதை வைத்திருந்தால் பலரும் ஸ்க்ரீன் ஷாட் எடுத்திருப்பார்கள். உடனே முக்கிய ஊடகங்களில் செய்தியாகும். ஆனால், பெரும்பாலான ஊடகங்கள் இதை செய்தியாக்கவில்லை. நாம் அவரது ஸ்டேட்டசை தேடியபோது வேறு 2 ஸ்டேட்டஸ்களே இருந்தன.

பகிரப்பட்டு வந்த அந்த ஸ்க்ரீன் ஷாட்டை ஆராய்ந்தபோது அவரது பெயருக்கு அருகே இருக்கும் வெரிபிகேஷன் பேட்ஜ் கீழே இறங்கி இருந்தன. பெயருக்கு அருகே இல்லை. அவர் வெளியிட்ட மற்ற ஸ்டேட்டஸ்களில் வெரிபிகேஷன் பேட்ஜ் பெயருக்கு அருகிலேயே உள்ளன. இதனை வைத்து பார்க்கையில் அந்த ஸ்க்ரீன் ஷாட் போலியானது என்பதை உறுதி செய்து இருக்கிறோம்.
அதேபோல் "E sala government namde @Rahulgandhi", என ஆங்கிலத்தில் விராட் கோலி ராகுல் காந்தியின் படத்தை பகிர்ந்து இன்ஸ்டாகிராமில் ஸ்டேட்டஸ் வைத்ததாக ஒரு ஸ்க்ரீன்ஷாட் பகிரப்பட்டு வருகிறது. ஆனால், அதை பார்த்தவுடனே போலி என்று தெரிந்துவிட்டது. காரணம், அவர் சூர்யகுமார் யாதவை பாராட்டி வைத்த ஒரு ஸ்டேட்டசை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து, அதன் மீது ராகுல் காந்தி படத்தை வைத்து எடிட் செய்து இருப்பது தெளிவாக தெரிந்தது. இதன் மூலம் இந்த 2 படங்களுமே போலியானது என்பது உறுதியானது.

Fact Check
வெளியான செய்தி
கர்நாடகா தேர்தல் வெற்றிக்காக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி புகழ்ந்து ஸ்டேட்டஸ் வைத்துள்ளார்.
முடிவு
பகிரப்படும் 2 புகைப்படங்களும் எடிட் செய்து பகிரப்பட்ட வதந்திகள்
ரேட்டிங்
-
'பிரின்ஸ்'னு சொல்லிக்கிட்டா பத்தாது.. விராட் கோலி மாதிரி விளையாடவும் செய்யணும்.. 25 பந்தில் அரைசதம்! -
சுப்மன் கில் அவுட்.. வெறித்தனமாக கத்தி கொண்டாடியா விராட் கோலி! அனுஷ்கா சர்மா பக்கம் திரும்பிய கேமரா! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications