Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

FACT CHECK - புல்டோசரில் சென்னை வெள்ள நீர் அகற்றமா.. பாஜக, அதிமுகவினர் பகிர்ந்த வீடியோ! உண்மை என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் தற்போது ஏற்பட்டு இருக்கும் பெரு வெள்ளத்தின்போது தண்ணீரை புல்டோசர் மூலமாக அகற்றுவதாக வீடியோ ஒன்று பகிரப்பட்டு வரும் நிலையில், அதன் உண்மை தன்மை என்னவென்று அலசுவோம்.

சென்னையில் கடந்த வாரம் மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் கொட்டித் தீர்த்த பெரு மழையின் காரணமாக மாநகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. வீடுகள், கடைகள் என எல்லா பகுதிகளுக்கு உள்ளேயும் தண்ணீர் சூழ்ந்ததது. இதனால் பொதுமக்கள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டனர். சமூக வலைதளங்களில் சென்னை வெள்ளம் தொடர்பாக பல்வேறு காட்சிகள் பரவி காண்போரை கலங்க வைத்து வருகின்றன.

Fact check on video is showing the removal of water by bulldozer during the Chennai floods

அதே சமயம் இதுதான் வாய்ப்பு என்று அரசியல் உள்நோக்கத்தாலோ அல்லது சமூக வலைதளத்தில் அதிகளவிலான வரவேற்பை பெறுவதற்காக பலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர். இந்த நிலையில் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. சாலையில் தேங்கி கிடக்கும் மழை நீரை புல்டோசரில் அள்ளி அப்படியே சாலையோரம் கொட்டும் வீடியோ அது. பாஜக ஆதரவாளரான சவுதா மணி எக்ஸ் தளத்தில் இந்த வீடியோவை வெளியிட்டு உள்ளார்.

Fact check on video is showing the removal of water by bulldozer during the Chennai floods

"விடியா ஆட்சியின் மூளை எப்படி வேலை செய்கிறது பாருங்கள். முட்டாள் ஜென்மங்கள் ஆட்சியில் இருந்தால் எல்லாம் முட்டாள்தனமாகத்தான் இருக்கும்." என்று குறிப்பிட்டு இந்த வீடியோவை பகிர்ந்து உள்ளார். அதேபோல், அதேபோல் அதிமுகவை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் சிடிஆர் நிர்மல் குமாரும் இந்த வீடியோவை பகிர்ந்து "இந்திய வரலாற்றில் இப்படி ஒரு அறிவார்ந்த கூட்டத்தை யாராவது பார்த்து இருக்கிறீர்களா?" என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

Fact check on video is showing the removal of water by bulldozer during the Chennai floods

அதேபோல் ஏராளமான பாஜக, அதிமுக ஆதரவாளர்கள் தொடங்கி சாமானிய மக்கள் வரை ஏராளமானோர் இந்த வீடியோ பகிர்ந்து அரசை விமர்சித்து வருகிறார்கள். இந்த வீடியோவின் உண்மை தன்மை குறித்து அறியும் முயற்சியில் ஈடுபட்டோம். அதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து ரிவர்ஸ் இமேஜ் தேடலில் ஈடுபட்டோம். அப்போதுதான் இந்த வீடியோ பல மொழிகளில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் பகிரப்பட்டு வரும் ஒன்று என்பது தெரியவந்தது.

2018 டிசம்பர் மாதம் finofilipino என்ற இணையதளத்தில் இது பகிரப்பட்டு உள்ளது. அதேபோல் குஷல் பாகிஸ்தான் என்ற பக்கத்தில் 2022 ஆம் ஆண்டு இதே வீடியோ பகிரப்பட்டு உள்ளது. இதன் மூலம் பழைய வீடியோவை பகிர்ந்து சென்னையில் நடைபெற்றதாக வதந்தி பரப்பி இருப்பது உறுதியாகிறது.

Fact Check

வெளியான செய்தி

சென்னை வெள்ளத்தின்போது தண்ணீரை புல்டோசர் மூலமாக அகற்றுகிறார்கள்.

முடிவு

2018 ஆம் ஆண்டில் பகிரப்பட்ட வீடியோவை சென்னை வெள்ளம் என்று பரப்பி வருகின்றனர்.

ரேட்டிங்

Misleading
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+