கர்நாடகாவில் இந்துக்களை முஸ்லிம்கள் கொலை செய்றாங்க..பாஜக நிர்வாகி பகிர்ந்த பகீர் வீடியோ! உண்மை என்ன?
சென்னை: கர்நாடகாவில் இந்துக்களை முஸ்லிம்கள் கொலை செய்வதாக தெலுங்கானா மாநில பாஜகவை சேர்ந்தவர் வெளியிட்டு உள்ள வீடியோவின் உண்மை நிலையை அறிவோம்.
சென்னை: கர்நாடகாவில் இந்துக்களை முஸ்லிம்கள் கொலை செய்வதாக தெலுங்கானா மாநில பாஜகவை சேர்ந்தவர் வெளியிட்டு உள்ள வீடியோவின் உண்மை நிலையை அறிவோம்.

தெலுங்கானா மாநிலத்தில் 30 ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதன் அண்டை மாநிலமாக கர்நாடகாவில் கோயில்கள் முன்பாக திரண்டு இருந்த இந்துக்கள் மீது இஸ்லாமியர்கள் தாக்குதல் நடத்துவதாக ஒரு வீடியோவுடன் சமூக வளைதளங்கள் பதிவுகளை வெளியிட்டு வந்தனர். இதை குறிப்பிட்டு காங்கிரஸ் ஆளும் கர்நாடக மாநிலத்தில் இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று இந்த வீடியோவை பாஜக ஆதரவாளர்கள் பகிர்ந்து வந்தனர்.
மற்றொரு பதிவில், "பாருங்கள்.. கர்நாடகாவில் கார்த்தை மாதத்தில் கோயில் முன்பாக பஜனை செய்துகொண்டு இருந்த இந்துக்கள் அடித்து கொலை செய்யப்பட்டு உள்ளார்கள். இதேபோல் தெலுங்கானாவிலும் பாஜக ஆட்சிக்கு வராமல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அம்மாநிலத்தில் உள்ள இந்துக்கள் இஸ்லாமியர்களால் அடித்துக் கொலை செய்யப்படுவார்கள்." என்று பாஜகவை சேர்ந்த சுப்பா ரெட்டி என்பவர் தெலுங்கில் பதிவிட்டு இருந்தார்.
இந்த வீடியோக்களும், பதிவுகளும் சமூக வலைதளங்களில் அதிகளவில் பரவி மத ரீதியான பதற்றத்தை ஏற்படுத்தும் நிலைக்கு சென்றன. இந்த நிலையில் இந்த வீடியோ உண்மைதானா? இதன் உண்மை பின்னணி என்ற ஆய்வில் ஈடுபட்டபோதுதான் இந்த சம்பவம் நடைபெற்றது கர்நாடகாவில் இல்லை என்பது உறுதியானது. ஆம், மகாராஷ்டிரா மாநில அஹமதுநகர் மாவட்டத்தில்தான் இந்த பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. நிலத் தகராறு காரணமாக இரு பிரிவினரும் ஒருவர் மீது ஒருவர் தாக்குதலில் ஈடுபட்டு உள்ளார்கள்.
அந்த வீடியோவில் இருப்பவர் மராத்தியில் பேசிக்கொள்வதும் தெளிவாகி பதிவாகி இருக்கிறது. மகாராஷ்டிராவின் அஹமதுநகர் மாவட்டத்தில் உள்ள குஹா என்ற கிராமத்தில்தான் இந்த பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. இந்த நிகழ்வு எப்போது நடந்தது? இது தொடர்பாக வட மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளனவா என்று ஆய்வு செய்தபோது, பிரபல தொலைக்காட்சியின் மராத்தி பிரிவு ஊடகம் கடந்த நவம்பர் 13 ஆம் தேதி மகாராஷ்டிராவின் அஹமத்நகர் மாவட்டம் குகா கிராமத்தில் உள்ள கனிஃப்நாத் மந்திர் என்ற பகுதியில் இச்சம்பவம் நடைபெற்றதாக தெரிவித்து உள்ளது.
அப்பகுதியில் அருகருகே அமைந்து உள்ள கனிஃப்நாத் கோயில் மற்றும் தர்கா இடையே நிலத்தகராறு உள்ளதாகவும் செய்தி வெளியிட்டு உள்ளன. கடந்த 13 ஆம் தேதி சோம்வதி அமாவாசை அன்று இந்து மக்கள் கனிஃப்நாத் தேவஸ்தானத்துக்கு சென்று மதச் சடங்குகளில் ஈடுபட்டதாகவும், அப்போது ஒலிப்பெருக்கைகளை அவர்கள் பயன்படுத்துவதற்கு முஸ்லீம்கள் ஆட்சேபனை தெரிவித்ததால் இந்த மோதல் ஏற்பட்டதாகவும் அதில் 4 பேர் காயமடைந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக கீழ் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ளது. மோதலன்று போலீசார் அங்கு வந்து பிரச்சனையை கட்டுப்படுத்தினர். 124 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக அஹமத்நகர் எஸ்பி ராகேஷ் ஓலா தெரிவித்து உள்ளார். எனவே இந்த பிரச்சனை மகாராஷ்டிராவில் ஏற்பட்டது என்றும், கர்நாடகாவில் நடைபெற்றதாக கூறுவது வதந்தி எனவும் தெரிகிறது.

Fact Check
வெளியான செய்தி
கர்நாடகாவில் இந்துக்களை முஸ்லிம்கள் கொலை செய்கிறார்கள். தெலுங்கானாவில் கான்கிரஸுக்கு வாக்களித்தால் இங்குள்ள இந்துக்களுக்கும் பாதுகாப்பு இல்லை.
முடிவு
மகாராஷ்டிராவில் நடைபெற்ற நிலத்தகராறு வீடியோவை கர்நாடகா என்று வதந்தி பரப்பி வருகிறார்கள்.
ரேட்டிங்
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications