FACT CHECK: டெல்லி போராட்டத்தில் "டூப்ளிகேட் விவசாயிகள்”.. மதுவுக்கு முண்டியடிக்கும் வீடியோ உண்மையா?
சென்னை: டெல்லி சலோ போராட்டத்தில் பங்கேற்று உள்ள போலி விவசாயிகள் மது வாங்க முண்டியடிப்பதாக வீடியோ ஒன்று அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. அதன் உண்மைத் தன்மை என்ன என்று அலசுவோம்.
சுதந்திர போராட்ட வீரர் சுபாஸ் சந்திர போஸின் முழக்கமான 'டெல்லி சலோ' என்ற முழக்கத்துடன் விவசாயிகள் மீண்டும் டெல்லியில் போராட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள். பல்வேறு மாநிலங்களில் இருந்து டெல்லி போராட்டத்துக்கு நுழைய முயன்ற விவசாயிகளை தடுக்கும் பணியில் மத்திய அரசும், பாஜக ஆளும் மாநில அரசுகளும் ஈடுபட்டு வருகின்றன. இதுபோன்ற போராட்டங்கள் நடந்தால் ஊடகங்கள் எப்படி பரபரப்பாகி விடுமோ, அதைவிட தீவிரமாக இறங்கிவிடுகிறது வதந்தி கும்பல்.

சின்ராசை கையிலையே பிடிக்க முடியாது என்ற கதையாக வதந்தி கும்பல் வளைத்து வளைத்து பழைய புகைப்படங்கள், வீடியோக்கள், கற்பனை கதைகளை எழுதி விவசாயிகள் போராட்டத்துக்கு களங்கம் கற்பித்து வருகிறது. இந்த நிலையில்தான் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் அதிகளவில் வைரலாகி வருகிறது. ஒரு கூட்டம் முண்டியடித்துக்கொண்டு மது வாங்கும் வீடியோவை பகிர்ந்து, "ஹரியானா டூப்ளிகேட் விவசாயிகள் போராட்டம், பப்பு, கெஜ்ரி ஸ்பான்சர் செய்ய, கன கச்சிதமாக நடைபெறுகிறது!!!" என்று குறிப்பிட்டு உள்ளனர்.

ராகுல் காந்தியை பாஜகவினர் பப்பு என்று அழைத்து வரும் நிலையில், அவரும், டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலும் பணம் கொடுத்து விவசாயிகளை போராட்டத்தில் ஈடுபட வைப்பதாக குறிப்பிட்டு இந்த வீடியோவை பகிர்ந்து உள்ளார்கள். இந்த வீடியோவின் உண்மை தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டோம். வீடியோவின் கீ பிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடல் மூலம் ஆய்வுக்கு உட்படுத்தினோம். அப்போது இந்த வீடியோ 2020 ஆம் ஆண்டே பலரால் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு இருந்தது. இந்த ஒரு தகவலே டெல்லி சலோ போராட்டத்தில் எடுக்கப்பட்ட வீடியோ இதுவல்ல என்பதை உறுதிபடுத்துகிறது.
அப்படியென்றால் இந்த வீடியோ எப்போது எங்கு எடுக்கப்பட்டது என்ற கேள்வி எழும். அதுபற்றி நாம் ஆய்வு செய்தபோது, கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவலின்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தபோது இந்த வீடியோவை பகிர்ந்து ஏழைகளுக்கு இலவச சேவை என்று குறிப்பிட்டு பலர் பதிவிட்டு இருந்தனர். முதன் முதலில் இந்த வீடியோவை பகிர்ந்த யூடியூப் சேனலில் இது எங்கு எப்போது எடுக்கப்பட்டது என்ற தெளிவான விபரம் கொடுக்கப்படவில்லை. ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டு இருந்தபோது மது பிரியர்களுக்கு யாரோ மது வழங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், இது விவசாயிகள் போராட்டத்தில் எடுக்கப்பட்டது என்பது முற்றிலும் பொய்.

Fact Check
வெளியான செய்தி
டெல்லி சலோ போராட்டத்தில் போலி விவசாயிகள் மது வாங்க முண்டியடிப்பதாக பரவும் வீடியோ
முடிவு
2020 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது பரப்பி விவசாயிகள் மீது களங்கம் கற்பித்து வருகிறார்கள்.
ரேட்டிங்
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications