Fact check: 'பான் கார்டு அப்டேட்' வங்கிக் கணக்கு காலாவதியாகிடும் என மெசேஜ்? உண்மை என்ன?
டெல்லி: வங்கிக் கணக்கு எண்ணுடன் பான்கார்டு விவரங்களை அப்டேட் செய்யாவிட்டால் வங்கிக் கணக்கு காலாவதி ஆகிவிடும் என்று எஸ்.பி.ஐ வங்கி பெயரில் வங்கி வாடிக்கையாளர்கள் பலருக்கும் மெசேஜ் வந்தது. ஆனால், இதுபோன்ற எந்த மெசேஜையும் எஸ்.பி.ஐ வங்கி அனுப்பவில்லை என்றும் அது போலியானது என மத்திய அரசின் பிஐபி ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் இணையவழி வங்கி பரிவர்த்தனை அதிகரித்துவிட்டது.
மக்கள் பெரும்பாலும் வங்கிகளுக்கு நேரடியாக செல்வது இல்லை. செக் டெபாசிட் மற்றும் வங்கி சேவைகளில் ஏதேனும் குறைபாடுகள் போன்றவை இருந்தால் மட்டுமே வங்கிக்கு நேரடியாக செல்ல வேண்டியுள்ளது.

செல்போனுக்கு லிங்க்கை அனுப்பி
இணைய வழி பண பரிமாற்றங்கள் அதிகரித்து விட்டதால் தற்போது சைபர்கிரைம் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. செல்போனுக்கு லிங்க் ஒன்றை அனுப்பி போனை ஹேக் செய்து நமது வங்கிக் கணக்கு விவரங்களை எடுத்துக்கொண்டு அதன் மூலம் மோசடியில் ஈடுபடுவது, பான் கார்டு, ஆதார் கார்டு அப்டேட் என்ற பெயரில் வங்கி கணக்கு விவரங்களை கேட்டு அதன்மூலம் வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை திருடி மோசடியில் ஈடுபடுவது என புதுப்புது வழிகளில் இந்த மோசடிகள் அதிகரித்து வருகின்றன.

பான்கார்டு எண்ணை அப்டேட் செய்ய கூறி
தொலைபேசி வாயிலாக அழைத்து ஏடிஎம் கார்டு விவரங்களை பெற்று ஓடிபி எண்ணையும் வாங்கி நடைபெறும் மோசடிகளும் ஒருபக்கம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ தனது வாடிக்கையாளர்களை பான்கார்டு எண்ணை அப்டேட் செய்ய வேண்டும் என்றும் இல்லையென்றால் உங்கள் வங்கிக் கணக்கு காலாவதி ஆகிவிடும் என்ற தகவலுடன் மெசேஜ் ஒன்று அனுப்பியதாக சமூக வலைத்தளங்களில் பலரும் கூறியிருந்தனர்.

பேக்ட் செக்-இல் விளக்கம்
எஸ்.பி.ஐ வங்கி வாடிக்கையாளர்கள் பலரும் இதேபோன்ற மெசேஜ் வந்திருப்பதாக ஸ்கிரீன் ஷாட்டையும் பகிர்ந்து இருந்தனர். அந்த மெசேஜுடன் பான்கார்டு அப்டேட் செய்வதற்கான இணைப்பு என ஒரு யூஆர்எல்-ம் பகிரப்பட்டு இருந்தது. இதனால், வாடிக்கையாளர்கள் பலருக்கும் சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில், போலியான தகவல்களை கண்டறிந்து வெளியிடும் மத்திய அரசின் பிஐபி பேக்ட் செக் இணையதளத்தில் இது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மெசேஜ் வாயிலாக கொடுக்கவில்லை
எஸ்.பி.ஐ வங்கி பெயரில் வெளியாகும் இத்தகைய மெசேஜ் முற்றிலும் போலியானது என்று பிஐபி ட்விட்டரில் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இதுபோன்ற மோசடிகளில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் எஸ்.பி.ஐ பான் கார்டு அப்டேட் செய்ய வேண்டும் என்று மெசேஜ் வாயிலாக எந்த ஒரு கோரிக்கையையும் தனது வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.

Fact Check
வெளியான செய்தி
எஸ்.பி.ஐ தனது வாடிக்கையாளர்களை பான்கார்டு எண்ணை அப்டேட் செய்ய வேண்டும் என்றும் இல்லையென்றால் உங்கள் வங்கிக் கணக்கு காலாவதி ஆகிவிடும் என்ற தகவலுடன் மெசேஜ் ஒன்று அனுப்பியதாக சமூக வலைத்தளங்களில் பரவியது
முடிவு
எஸ்.பி.ஐ வங்கி பெயரில் அனுப்பப்படும் இந்த மெசேஜ் முற்றிலும் போலியானது. பான் கார்டு அப்டேட் செய்ய வேண்டும் என்று எஸ்.பிஐ, மெசேஜ்/ இமெயில் வாயிலாக எந்த ஒரு கோரிக்கையையும் தனது வாடிக்கையாளர்களுக்கு
ரேட்டிங்
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications