Fact Check: காஷ்மீரின் செனாப் பாலம் என இணையத்தில் பரவும் புகைப்படம்.. உண்மையானதா?
டெல்லி: உலகிலேயே மிக உயரமான ரயில்வே மேம்பாலம் என்ற சிறப்பை பெறும் செனாப் ரயில்வே மேம்பாலத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதற்கு பாராட்டு தெரிவித்து நெட்டிசன்கள் பலரும் ரயில்வே பாலத்தின் படம் ஒன்றையும் பகிர்ந்தனர். ஆனால் உண்மையில் அது செனாப் ரயில்வே மேம்பாலம் இல்லை என்பதும் சீனாவில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் உள்ள படம் என்பதும் தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் ரயில்வே உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி வரும் பணியில் ரயில்வே துறை ஈடுபட்டு வருகிறது.
மலைப்பிரதேசங்கள் மற்றும் கடினமான காலசூழல் கொண்ட பகுதிகளிலும் ரயில்வே கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

'செனாப் பாலம்'
அந்த வகையில் இந்தியாவின் வடகோடியில் உள்ள காஷ்மீரை நாட்டின் பிற பகுதிகளோடு ரயில்வே வழித்தடம் மூலமாக இணைக்கும் பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அதேபோல், ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் ஓடும் செனாப் ஆற்றின் குறுக்கே உலகின் மிக உயரமான பாலம் கட்டப்பட்டுள்ளது. அங்குள்ள சலால் அணையின் அருகே உள்ள இரு மலை முகடுகளுக்கு இடையே பிரம்மாண்டமான கட்டமைப்புடன் 'செனாப் பாலம்' உருவாக்கப்பட்டுள்ளது.

விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது
இந்த பாலம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு உலகிலெயே மிக உயரமான பாலமாக இருக்கும். அதாவது உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் டவரை விட அதிக உயரத்தில் இந்த பாலம் அமைகிறது. ஈபிள் டவரின் உயரம் 324 மீட்டர் ஆக உள்ளது. செனாப் ரயில் பாலம் 359 மீட்டர் உயரத்தில் அமைக்கப்படுகிறது. அதாவது ஈபிள் டவரை விட 35 மீட்டர் உயரம் அதிகம் கொண்டது. இந்த பாலத்தின் கட்டமைப்பு பணிகள் ஏறத்தாழ முடிந்து விட்ட நிலையில், விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.

இந்திய ரயில்வேயை பாராட்டும்..
இந்த பாலம் இந்திய ரயில்வே துறையின் சிறப்பான உள்கட்டமைப்புகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமையும் என்று கடந்த சில தினங்களாகவே சமூக வலைத்தளங்களில் பல்வேறு தரப்பிலும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அந்த வகையில், காஷ்மீரின் செனாப் பாலம் எனக் குறிப்பிட்டு உயரமான பாலம் ஒன்றையும் நெட்டிசன்கள் பலரும் பகிர்ந்து இந்திய ரயில்வேயை பாரட்டி வருவதைக் காண முடிகிறது. மார்ச் 21 ஆம் தேதி சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றதாகவும் இந்திய ரயில்வேயிக்கு பாராட்டுக்கள் என நெட்டிசன்கள் வாழ்த்து மழை பொழிந்தனர்.

காஷ்மீரின் செனாப் பாலம் இல்லை
குறிப்பாக பிரபல தொழில் அதிபர் ஆனந்த் மகிந்திரா கூட செனாப் பாலம் என்று குறிப்பிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டு பாராட்டுக்கள் தெரிவித்து பதிவிட்டு இருந்தார். ஆனால் நெட்டிசன்கள் பரப்பும் அந்த பாலம் உண்மையில் அது காஷ்மீரின் செனாப் பாலம் இல்லை. சீனாவில் உள்ள மிக உயரமான ரயில்வே பாலமான பெய்பன்ஜியாங் ரயில்வே பாலத்தின் படத்தை வெளியிட்டு பலரும் செனாப் ரயில்வே பாலம் என்று பகிர்ந்து வருகின்றனர்.

Fact Check
வெளியான செய்தி
உலகின் மிக உயரமான செனாப் ரயில்வே மேம்பாலத்தில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. இது தொடர்பாக பாராட்டு தெரிவித்து நெட்டிசன்கள் பலரும் பதிவிட்டு வரும் நிலையில், செனாப் மேம்பாலம் என ஒரு ரயில்வே மேம்ப
முடிவு
நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பகிரப்படும் இந்த மேம்பாலம் செனாப் ரயில்வே மேம்பாலம் கிடையாது. சீனாவில் உள்ள உயரமான பெய்பன்ஜியாங் ரயில்வே மேம்பாலத்தை செனாப் ரயில்வே மேம்பாலம் என பலரும் பகிர்ந்து வருகின்












Click it and Unblock the Notifications