சீனாவில் தெருக்களில் சுற்றும் பெண் ரோபோ? சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ.. உண்மை என்ன!
பீஜிங்: டெக்னாலஜியின் அடுத்த கட்டத்துக்கு நகரும் வகையில் சீனாவின் கண்டுபிடிப்புகள் உள்ளதாக சொல்லப்படும் நிலையில், சீனாவின் தெருக்களில் அச்சு அசலாக பெண் போலவே ஒரு ரோபோ உலா வருவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. உண்மையில் அது பெண்ணா? அல்லது ரோபோவா? என்பது தற்போது தெரியவந்துள்ளது.
ஆசிய நாடுகளில் ஒன்று சீனா. தொழில்நுட்பத்திலும் சரி, புதுப்புது கண்டுபிடிப்புகளிலும் சரி எப்போதும் சீனா தன்னை முன்னிலை படுத்த முயற்சி செய்து வருகிறது. அதற்கு ஏற்றாற்போல் பல்வேறு புது முயற்சிகளையும் கையில் எடுத்து வருகிறது.

டெக்னாலஜியின் அடுத்த கட்டத்துக்கு நகரும் வகையில் சீனாவின் கண்டுபிடிப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. ஒருவர் வீட்டில் இருந்து அலுவலகம் சென்றடையும் வரை அனைத்துமே சீனாவில் நவீனமயமாகிவிட்டது என்றும், நாம் தற்போது 2050 ஆம் ஆண்டில் இருக்கிறோமோ என்று நாம் எண்ணத்தோன்றும் வகையில் சீனாவில் அன்றாட வாழ்க்கை நிலை மாறிவிட்டதாக கூறப்படுகிறது.
ரயில், பஸ் என அனைத்திலுமே புதுப்புது டெக்னாலஜியை கொண்டு வந்துள்ள நிலையில், பெண் ரோபோ ஒன்று சாலைகளில் உலாவும் வீடியோ இணையத்தில் பரவியது. அந்த வீடியோவில், பார்ப்பதற்கு அச்சு அசலாக பெண் போலவே, ஒரு ரோபோ சாலைகளில் சர்வ சாதாரணமாக நடந்து செல்வதும், பேசுவதும் போன்ற வீடியோ வெளியாகி இருந்தது.
அந்த வீடியோவில், ரோபோ ஒன்று ஷாப்பிங் சென்றுவிட்டு கையில் ஒரு பையுடன் சிக்னலில் பஸ்சுக்காக நிற்பது போலவும், அப்போது, அந்த ரோபோவை பலரும் சுற்றி நின்று வீடியோ எடுக்கிறார்கள். தொடர்ந்து அங்கிருந்து சில மீட்டர் தூரம் சென்று அங்குள்ள ஷாப்பிங் மாலுக்கு செல்வது போலவும் பலரும் அந்த ரோபோவை பின் தொடர்ந்து செல்வது போலவும் இருந்தது.
*❓CAN YOU IMAGINE*
— SRK(@)Sanatani (@experienceluv) November 3, 2024
This Is A ROBOT in China, walking around in public places. (ROBOT A I). Where's the world headed? pic.twitter.com/LQfGeinK1r
இந்த வீடியோவை பார்த்த பலரும், "அடேங்கப்பா.. சீனாவின் கண்டுபிடிப்பே.. கண்டுபிடிப்பு தான். ரோபோ அச்சு அசலாக பெண் போலவே இருக்கிறதே.." என்று பலரும் கருத்துக்கள் தெரிவித்து வந்தனர். மற்றும் சிலர், 'உண்மையில் அது ரோபோ கிடையாது என்றும் நிஜமாகவே ஒரு பெண் என்றும் மற்றொரு தரப்பினர் கருத்துக்கள் பதிவிட்டு வந்தனர். இதனால் உண்மையில் சீனாவில் சாலைகளில் உலா வந்தது பெண் ரோபோவா? இல்லை பெண்ணா? என்பதற்கு தற்போது உண்மையான விளக்கம் கிடைத்துள்ளது.
உண்மையில் அந்த வீடியோவில் இருப்பது பெண் என்று பேக்ட் செக் செய்து பார்த்ததில் தெரியவந்துள்ளது. சீனாவின் தெருக்களில் சுற்றி வந்தது சமூக வலைத்தளங்களில் பிரபலமான வீடியோ எடிட்டர் என்பது தெரியவந்தது. இமேஜ் ரிவர்ஸ் செய்து பார்த்த போது அது ரோபோ இல்லை என்று பெண் தான் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

Fact Check
வெளியான செய்தி
சீனாவில் மக்கள் அதிகம் செல்லும் தெருக்களில் அச்சு அசலாக பெண் போலவே ஒரு ரோபோ சுற்றித் திரிவதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது.
முடிவு
சீனாவின் தெருக்களில் சுற்றி வந்தது, ரோபோ கிடையாது. சமூக வலைத்தளங்களில் பிரபலமான பெண். அவர் சீனாவில் வீடியோ கிரியேட்டராக பணி செய்து வருகிறார்.
ரேட்டிங்
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
வீரர்களே இல்லாமல் ரஷ்யாவை அலறவிடும் உக்ரைன்! புதினே எதிர்பார்க்காத சீக்ரெட் ஆயுதம் இறக்கிய ஜெலன்ஸ்கி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications