Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Fact Check: தமிழ்நாட்டில் டோர் டெலிவரியில் மது விற்பனையா? பரவும் வதந்தி! டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆன்லைனில் உணவு பொருட்கள் விநியோகிக்கப்படுவதை போல மதுபானங்களையும் விநியோகிக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் இது நடைமுறைக்கு வரும் என்று தகவல்கள் வெளியான நிலையில், இதற்கு டாஸ்மாக் நிர்வாகம் மறுப்பு தெரிவித்திருக்கிறது.

ஹோட்டலுக்கு போய் ஆர்டர் செய்து சாப்பிட்ட காலம் கடந்து, தற்போது பிடித்த ஹோட்டலிலிருந்து உணவை வீட்டுக்கு ஆர்டர் செய்து வரவழைத்து சாப்பிடும் காலம் வந்துவிட்டது. இதற்காக ஸ்விக்கி, சொமோட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் உணவு டெலிவரியை செய்து வருகின்றன. இப்படியாக உணவு டெலிவரி என்பது காய்கறிகள், தயிர், பால், பிஸ்கட் என மளிகை பொருட்கள் டெலிவரியை நோக்கியும் நகர்ந்தது. பிளின்கட் உள்ளிட்டவை இந்த சேவையை வழங்கி வருகின்றன.

Madhu Tamil Nadu Tasmac

இதனை தொடர்ந்து தற்போது மதுபான வகைகளும் வீடு தேடி டெலிவரி செய்யும் திட்டம் தொடங்கப்பட இருக்கிறது. மது என்பது போதைப்பொருள் என்பதால், எல்லா மாநிலங்களுக்கும் இதற்கான அனுமதி உடனே கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. கொரோனா தொற்று காலத்தில் அசாம், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் மதுபானங்கள் டோர் டெலிவரி செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் தொற்று காலம் முடிந்த பின்னர் டோர் டெலிவரி திட்டம் வாபஸ் பெறப்பட்டுவிட்டது.

இருப்பினும், ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் இன்னும் ஆன்லைனில் மது விற்பனை நடைபெற்று வருகிறது. மது விற்பனை மூலமாக டெலிவரி நிறுவனங்களுக்கான வியாபாரம் 30 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. எனவே, நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் ஆன்லைன் மூலம் மது விற்பனையை மேற்கொள்ள டெலிவரி நிறுவனங்கள் திட்டமிட்டிருக்கின்றன.

குறிப்பாக டெல்லி, கர்நாடகா, ஹரியானா, பஞ்சாப், தமிழகம், கோவா மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் மது விற்பனையை மேற்கொள்ள டெலிவரி நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் டோர் டெலிவரி மூலமாக சரக்கு விற்கப்படுவதாக தகவல்கள் வேகமாக பரவின.

பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் இதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கையும் விட்டிருந்தார். அதில், "தமிழ்நாட்டில் பீர், ஒயின், மணமூட்டப்பட்ட மதுவகைகள் போன்ற குறைந்த அளவில் ஆல்கஹால் கொண்ட மதுவகைகளை சொமாட்டோ, ஸ்விக்கி, பிக்பேஸ்கட் போன்ற ஆன்லைன் வினியோக நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கே கொண்டு சென்று விற்க தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாகவும், அதன் சாதக பாதகங்கள் குறித்து ஆன்லைன் வினியோக நிறுவனங்கள், மது உற்பத்தியாளர்கள் போன்றோருடன் கலந்தாய்வு செய்து வருவதாகவும் தி எகனாமிக் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தியில் கூறப்பட்டுள்ள தகவல்கள் உண்மையா? வீடுகளுக்கே சென்று மது விற்க திட்டமிடப்பட்டுள்ளதா? என்பது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும். ஒருவேளை இந்த செய்தி உண்மையாக இருந்தால் தமிழக அரசின் திட்டம் கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.

வீடுகளுக்கே கொண்டு சென்று மதுவை விற்பனை செய்வது என்பது மக்கள் நலனை விரும்பும் அரசுகளால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத தீமை ஆகும். ஆனால், தமிழக அரசு அத்தகைய தீமையை செய்யாது என்று உறுதியாக கூற முடியவில்லை. அதற்கு காரணம், விளையாட்டு அரங்குகள், பன்னாட்டு நிகழ்வுகள், திருமண விழாக்கள் போன்றவற்றில் மதுவகைகளை வினியோகித்தல், மதுக்கடைகளில் காகிதக் குடுவைகளில் குறைந்த விலையில் மது விற்பனை செய்வது போன்ற புரட்சிகரமான திட்டங்களை அறிமுகம் செய்யத் துடித்த வரலாறு தமிழக அரசுக்கு உண்டு. அதனால் தான் இந்த செய்தியும் உண்மையாக இருக்குமோ? என்று நம்பத் தோன்றுகிறது" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், உணவு ஆஃப்கள் மூலம் மது விற்பனை செய்யவிருப்பதாக கூறப்படும் தகவலில் உண்மையில்லை என டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதேபோல் டெட்ரா பாக்கெட் எனப்படும் காகித குடுவையில் மதுபானங்களை அறிமுகம் செய்யவும் திட்டமிடவில்லை என டாஸ்மாக் நிர்வாகம் கூறியுள்ளது.

Fact Check

வெளியான செய்தி

தமிழ்நாட்டில் வீடுகளுக்கே சென்று உணவு டெலிவரி ஆப் மூலம் மது விற்பனை செய்ய திட்டம்

முடிவு

மது வகைகள் 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே விற்பனை செய்யப்படுகிறது. இப்படி இருக்கையில், இதனை ஆன்லைனில் விற்பனை செய்யும் திட்டமில்லை என டாஸ்மாக் நிர்வாகம் மறுத்திருக்கிறது.

ரேட்டிங்

Mostly False
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+