குகேஷுக்கு ரூ5 கோடி பரிசு வழங்கிய தமிழக அரசு! மாரியப்பனுக்கு ஒரு ரூபாய்கூட வழங்கவில்லையா? உண்மை என்ன
சென்னை: உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற டி குகேஷுக்கு ரூ.5 கோடி பரிசுத்தொகை அறிவித்த தமிழ்நாடு அரசு, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு வெறும் வாழ்த்து மட்டுமே தெரிவித்ததாக பரப்பப்படும் தகவல் வதந்தி என்று தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு தெரிவித்துள்ளது. மேலும் தடகள வீரர் மாரியப்பனுக்கு தமிழக அரசு பரிசுத் தொகை, போட்டிகளில் பங்கேற்றல், மருத்துவ செலவுகள் என சுமார் ரூ7.5 கோடி அளவிற்கு உதவிகள் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
இந்திய கிராண்ட் மாஸ்டர் டி குகேஷ் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். 18 வயதான டி குகேஷ் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் உலகிலேயே இளம் வயதில் செஸ் சாம்பியன் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற வரலாற்று சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார்.

சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் சீன வீரர் டிங் லிரெனை வீழ்த்தி வெற்றி பெற்றார் டி குகேஷ். இதன் மூலம் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற 2வது இந்திய வீரர் என்ற பெருமையை குகேஷ் பெற்றுள்ளார். தமிழகத்தின் விஸ்வநாதன் ஆனந்த் 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற டி குகேஷுக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து இருந்தனர். மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் டி குகேஷுக்கு ரூ.5 கோடி வழங்குவதாக அறிவித்தார். உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய கிராண்ட் மாஸ்டரான குகேஷ்-க்கு தமிழ்நாடு முதல்வர் ரூ.5 கோடி பரிசுத் தொகை அறிவித்தார்.
இந்த நிலையில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற டி குகேஷ் தமிழர் இல்லை தெலுங்கர் என்றும், குகேஷுக்கு முதல்வர் ரூ5 கோடி வழங்கியுள்ளதாகவும், ஆனால் ஒலிம்பிக்கில் வெற்றி பெற்ற தமிழர் மாரியப்பனுக்கு பரிசு எதுவும் வழங்கவில்லை என்று சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவி வந்தது. இதற்கு தமிழக அரசின் உண்மை கண்டறியும் குழு மறுப்பு தெரிவித்து அதற்கான விளக்கத்தை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக உண்மை கண்டறியும் குழு கூறியிருப்பதாவது:- குகேஷ்-க்கு ரூ.5 கோடி என்றும், மாரியப்பனுக்கு பரிசு வழங்கவில்லை என்று வதந்தி பரப்பப்படுகிறது. உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய கிராண்ட் மாஸ்டரான குகேஷ்-க்கு தமிழ்நாடு முதல்வர் ரூ.5 கோடி பரிசுத் தொகை அறிவித்தார். இந்நிலையில், குகேஷ்-க்கு 5 கோடி ரூபாய் அறிவித்த அரசு தடகள வீரர் மாரியப்பனுக்கு வெறும் வாழ்த்து மட்டும் கூறிவிட்டு பரிசுத் தொகை வழங்கவில்லை என்று சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பப்படுகிறது.
கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற 'ரியோ பாரா ஒலிம்பிக்' தொடரில் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்ற மாரியம்மன் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.2 கோடி பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டது. அடுத்ததாக, 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற போது தமிழ்நாடு முதல்வர் ரூ.2 கோடி பரிசுத் தொகையை அறிவித்தார்.
மேலும், குரூப்- 1 பிரிவில் மாரியப்பனுக்கு தமிழ்நாடு காகித நிறுவனத்தின் துணை மேலாளர் பணி வழங்கப்பட்டது. 2024ம் ஆண்டு ஜூன் மாதம் ஜப்பானில் நடைபெற்ற உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற போது தமிழ்நாடு முதல்வர் ரூ.75 லட்சம் பரிசுத் தொகையை அறிவித்தார். மேலும் 2024ம் செப்டம்பர் மாதம் பாரீஸில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதற்காக ரூ.1 கோடி பரிசுத் தொகை தமிழ்நாடு முதல்வர் வழங்கினார்.
தடகள வீரர் மாரியப்பன் அவர்களுக்கு பரிசுத் தொகை, போட்டிகளில் பங்கேற்றல், மருத்துவ செலவுகள் என சுமார் ரூ7.5 கோடி அளவிற்கு தமிழ்நாடு அரசால் உதவிகள் செய்யப்பட்டுள்ளது என்று SDAT தெரிவித்துள்ளது. ஆனால், தடகள வீரர் மாரியப்பனுக்கு முதல்வர் வாழ்த்து மட்டுமே கூறியதாக இனரீதியான வதந்திகள் பரப்பப்படுகிறது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தரப்பில், 07.05.2021 முதல் 30.11.2024 வரை சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர் வீராங்கனைகள் உள்ளிட்ட 3,345 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.104.22 கோடி உயரிய ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் 585 விளையாட்டு வீரர்களுக்குத் தேவையான உபகரணங்கள் வாங்கவும், உயர்நிலைப் போட்டிகளில் பங்கேற்றல் மற்றும் மருத்துவச் செலவு உட்பட பல்வேறு செலவினங்களுக்கும் ரூ. 13.33 கோடி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Fact Check
வெளியான செய்தி
குகேஷ்-க்கு 5 கோடி ரூபாய் அறிவித்த தமிழக அரசு, தடகள வீரர் மாரியப்பனுக்கு வெறும் வாழ்த்து மட்டும் கூறிவிட்டு பரிசுத் தொகை வழங்கவில்லை என்று சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பப்படுகிறது.
முடிவு
தடகள வீரர் மாரியப்பனுக்கு தமிழக முதல்வர் வாழ்த்து மட்டுமே கூறியதாக பரவும் தகவல் வதந்தி. மாரியப்பனுக்கு பரிசுத் தொகை, போட்டிகளில் பங்கேற்றல், மருத்துவ செலவுகள் என சுமார் ரூ7.5 கோடி அளவிற்கு உதவிகள் செ












Click it and Unblock the Notifications