சென்னையில் ஒரு கழிப்பறை கட்ட ரூ 1 கோடி செலவா?! வதந்தி! மாநகராட்சி விளக்கத்தை பாருங்கள்!
சென்னை: சென்னையில் ஒரு கழிப்பறை கட்ட ஒரு கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது என்ற தகவல் பொய்யானது என தமிழக அரசு தெளிவுப்படுத்தியுள்ளது. சென்னை மாநகராட்சி அறிவிப்பின் உண்மைத்தன்மை என்ன என்பதையும் விளக்கியுள்ளது.
சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில் நேற்று முன் தினம் ரிப்பன் மாளிகையில் நடந்தது. இந்த கூட்டத்தில் சென்னை மாநகரில் உள்ள 291 அம்மா உணவகங்களை ரூ 17 கோடியில் சீரமைக்கவும் 81 இடங்களில் ரூ 12 கோடியில் 3டி மாடல் நவீன பேருந்து நிழற்குடைகள் அமைக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் குப்பைகள், கட்டட கழிவுகள் கொட்டுவதை தடுக்க ரூ 500 அபராதம் விதித்திருந்த நிலையில் அதை ரூ 5000 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அது போல் தேனாம்பேட்டை மண்டலம் 110ஆவது வார்ட்டில் காம்தார் சாலைக்கு திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியன் பெயரை சூட்டவும் மன்றத்தில் அனுமதி வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து இன்று சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பில் சென்னையில் 1002 கழிவறைகளை அமைக்க உள்பட பல்வேறு பணிகளுக்கு 1168 கோடி ரூபாய் செலவு என அறிவிப்பு வெளியாகியிருந்தது. இதைத் தொடர்ந்து, "சென்னையில் ரூ. 1168 கோடி மதிப்பீட்டில் 1002 புதிய கழிப்பறைகள் கட்டத் திட்டம் என்றால் ஒரு கழிப்பறை கட்டுவதற்கு ரூ 1 கோடி செலவிடப்படுகிறதா" என சமூகவலைதளங்களில் நிறைய பேர் கிண்டலும் கேலியுமாக பேசியிருந்தனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு உண்மை சரிப்பார்ப்பகம் (fact check) இது குறித்து கண்டறிந்த வெளியிட்டுள்ளது. அதில் ஒரு கழிப்பறை ஒரு கோடி என பரவும் தகவல் பொய்யானது.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 1002 இடங்களில் 7166 இருக்கைகள் கொண்ட கழிப்பறைகள் அமைக்கப்பட உள்ளது. பொது மக்கள் பயன்பாட்டிற்கான இக்கழிப்பறைகளின் கட்டுமானம் ( புதிதாக கட்டுதல் மற்றும் மறுசீரமைக்கும் பணி) செயல்படுத்தல் மற்றும் 9 ஆண்டுகளுக்கான பராமரிப்பு பணிகள் ஆகியவற்றிற்கான மொத்த செலவாக ரூ.1168 கோடி (ஜி.எஸ்.டி உட்பட) என்றே அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

Fact Check
வெளியான செய்தி
ஒரு கழிப்பறை கட்ட ஒரு 1 கோடியை செலவு செய்த சென்னை மாநகராட்சி
முடிவு
ஒரு கோடியில் ஒரு கழிப்பறை என்ற செய்தி தவறானது 9ஆண்டுகளுக்கான பராமரிப்பு செலவு ஜிஎஸ்டியுடன் சேர்த்து ரூ 1168 கோடி என்றுதான் மாநகராட்சி அறிவித்தது.












Click it and Unblock the Notifications