Fact check: அரசு கொடுக்கும் ரூ.1000..பீர் வாங்கி பஸ்ஸிலேயே குடிக்கும் மாணவிகள்! தீயாய் பரவும் வீடியோ
சென்னை: அரசுப் பள்ளி சீருடையில் உள்ள மாணவிகள் சிலர் பேருந்திலேயே மது அருந்தும் வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் புதுமைப் பெண் திட்டத்தில் பெற்ற பணத்தில் மது அருந்துவதாக அந்த வீடியோ பரப்பப்பட்டு வருகிறது. இதன் உண்மை தன்மை என்ன? என்பது குறித்து பார்க்கலாம்..
அரசுப் பள்ளி சீருடையில் உள்ள மாணவிகள் சிலர் பேருந்திலேயே மது அருந்தும் வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.

அந்த வீடியோ காட்சிகளில் பள்ளி முடிந்து பேருந்தில் செல்லும் மாணவர்கள் மற்றும் மாணவிகள் பீரை குடித்துக் கொண்டும் அதனை மற்ற மாணவர்களுக்கும் பகிர்ந்து குடிப்பதோடு கூச்சலிட்டு கொண்டே அராஜகத்தில் ஈடுபடுகின்றனர்.
வீடியோவை செல்போனில் படம்பிடித்த சிலர் அந்த வீடியோவை முகநூல், இஸ்ட்ராகிராம், வாட்ஸ்அப் என அனைத்து வலை தளங்களிலும் பதிவிட்டு பரப்பினர். இந்நிலையில் ”அரசு பள்ளி மாணவிகளுக்கு அரசு மாதம் மாதம் 1000 ரூபாய் வழங்குகிறது. அதனை வைத்து மாணவிகள் சீருடையுடன் மது அருந்துகிறார்கள்” என @PhoenixAdmk என்ற ட்விட்டர் அக்கவுண்டில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த ட்வீட் டெலீட் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அது தற்போது எடுக்கப்பட்டதல்ல கடந்த 2022ஆம் எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் மாணவ, மாணவிகள் செங்கல்பட்டு அருகே உள்ள பொன் விளைந்த களத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தவர்கள் என்பதும், இச்சம்பவம் தற்போது சிலர் புதுமைப் பெண் திட்டத்தோடு தொடர்பு படுத்தி சமூக வலை தளங்களில் பரப்பி வருகின்றனர்.
கடந்த 2022ஆம் ஆண்டே இந்த வீடியோ பேசுபொருள் ஆகியுள்ள நிலையில் அந்தப் பள்ளியில் படித்த மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனைகளும் அறிவுரைகளும் காவல்துறை சார்பில் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Fact Check
வெளியான செய்தி
அரசு பள்ளி மாணவிகளுக்கு அரசு மாதம் மாதம் 1000 ரூபாய் வழங்குகிறது. அதனை வைத்து மாணவிகள் சீருடையுடன் மது அருந்துகிறார்கள்
முடிவு
தற்போது பரப்பப்பட்டு வரும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதல்ல கடந்த 2022ஆம் எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் மாணவ, மாணவிகள் செங்கல்பட்டு அருகே உள்ள பொன் விளைந்த களத்தூர் அரசு மேல
ரேட்டிங்
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications