Fact Check: முதல்வர் மருந்தகத்தில் மாத்திரை விலை அதிகமா? பரவும் போட்டோ.. உண்மை என்ன?
சென்னை: சர்க்கரை நோய்க்கான வில்டாகிளிப்டின் மெட்பார்மின் ஹைட்ரோ குளோரைடு மாத்திரை ஒரு அட்டை பிரதமரின் மக்கள் மருந்தகத்தில் ரூ.30க்கும், முதல்வர் மருந்தகத்தில் ரூ.35க்கும் விற்கப்படுவதாக இரு மாத்திரை அட்டைகளுடன் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. இது உண்மை அல்ல என தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.
"சர்க்கரை நோய்க்கான வில்டா கிளிப்டின் மெட்பார்மின் ஹைட்ரோ குளோரைடு மாத்திரை அட்டை பிரதமரின் மக்கள் மருந்தகத்திற்கும் முதலமைச்சரின் மருந்தகத்திற்கும் உள்ள வித்தியாசம் ஐந்து ரூபாய். ஸ்டிக்கர் ஒட்டி 16.6% கமிஷன் அடிக்கும் விஞ்ஞான ஊழல் விடியா அரசு" என ராஜசேகர் ஜெயராஜ் என்பவர் பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவை பலரும் பகிர்ந்துள்ளனர்.

உண்மை என்ன?
இந்த தகவலை பலரும் பகிர்ந்து, தமிழக அரசை விமர்சித்துள்ள நிலையில், இது முற்றிலும் வதந்தி என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.
வில்டாகிளிப்டின் மெட்பார்மின் ஹைட்ரோ குளோரைடு மாத்திரை (15) அட்டையில் விலை ரூ.36 என்றுள்ளது. ஆனால், முதல்வர் மருந்தகத்தில் ரூ.9 தள்ளுபடி (25%) போக 15 மாத்திரைகள் கொண்ட ஒரு அட்டை ரூ.27க்கே விற்பனையாகிறது. மாத்திரை அட்டையில் உள்ள விலையை மட்டும் வைத்து முதல்வர் மருந்தகத்தில் விலை அதிகமாக உள்ளதாகத் திரித்து வதந்தியைப் பரப்பி வருகின்றனர்.
முதல்வர் மருந்தகத்தில் மாத்திரை விலை அதிகம் என்று பரவும் வதந்தி!@CMOTamilnadu @TNDIPRNEWS (1/2) https://t.co/MP3BehVl0b pic.twitter.com/s9b91lS5UK
— TN Fact Check (@tn_factcheck) March 8, 2025
அத்துடன் முதல்வர் மருந்தகத்தில் பெறப்பட்ட சீட்டும் இணைக்கப்பட்டுள்ளது. அதில், தள்ளுபடி போக ரூபாய் 27க்கு ஒரு மாத்திரை அட்டை விற்பனை செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Fact Check
வெளியான செய்தி
சர்க்கரை நோய்க்கான மாத்திரை ஒரு அட்டை பிரதமரின் மக்கள் மருந்தகத்தில் ரூ.30க்கும், முதல்வர் மருந்தகத்தில் ரூ.35க்கும் விற்கப்படுவதாக தகவல் பரவுகிறது.
முடிவு
உண்மை அல்ல. அதே மாத்திரை தள்ளுபடி போக, ரூ.27க்கு முதல்வர் மருந்தகத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
ரேட்டிங்
-
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications