Fact check: கிருஷ்ணகிரி அரசுப் பள்ளியில் மதப் பிரச்சாரம்? என்ன நடந்தது? உண்மை சரிபார்ப்பகம் விளக்கம்
சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் மூக்காகவுண்டனூர் அரசு தொடக்கப்பள்ளியில் கிறிஸ்தவ மத பிரச்சாரம் செய்வதாகக் குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. இது உண்மையிலேயே நடந்ததா? என்ன நடந்தது? பார்க்கலாம்.
பரவும் செய்தி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் மூக்காகவுண்டனூர் அரசு தொடக்கப்பள்ளியில் கிறிஸ்தவ மத பிரச்சாரம் செய்வதாகக் குறிப்பிட்டு காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. பாஜக நிர்வாகி அஸ்வத்தாமனும் இந்த வீடியோவை பகிர்ந்து, "பள்ளியில் திருக்குறள் சொல்லி கொடுத்தால் தான் தவறி. கிறிஸ்தவ மத பிரச்சாரம் செய்யலாம்.. அப்படித்தானே பள்ளிக் கல்வித் துறை அமைச்சரே?" எனக் கேட்டு சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

உண்மை என்ன?: இந்த வீடியோ தொடர்பாக தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம், இதன் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்து பதிவிட்டுள்ளது. அதன்படி, இது இரவில் அனுமதியின்றி நிகழ்ந்த சம்பவம். கிருஷ்ணகிரி மாவட்டம் மூக்காகவுண்டனூர் அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் கடந்த 5.12.2024 ஆம் தேதி இரவு எந்த அனுமதியும் பெறாமல் வாகனம் மூலம் கூட்டம் நடத்தி உள்ளனர்.
அனுமதி இன்றி கூட்டம் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் அப்பள்ளியின் தலைமையாசிரியர் புகார் அளித்துள்ளார். இந்தப் பள்ளியின் வாயில் பொதுப்பாதையாகப் பயன்படுத்தப்பட்டு வருவதால் இவ்வாறு வாகனத்தில் வந்து பிரச்சாரம் செய்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.

Fact Check
வெளியான செய்தி
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் மூக்காகவுண்டனூர் அரசு தொடக்கப் பள்ளியில், அரசு ஆதரவுடன் கிறிஸ்தவ மத பிரச்சாரம் செய்வதாகக் குறிப்பிட்டு வீடியோ ஒன்று பரவி வருகிறது.
முடிவு
இரவு நேரத்தில் அனுமதி இன்றி கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதுசம்பந்தமாக பள்ளியின் தலைமை ஆசிரியர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
ரேட்டிங்
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications