Fact check: விழுப்புரம் அருகே இரவில் நடமாடும் பேய்.. மக்களை பதற வைத்த வீடியோ! உண்மை என்ன?
சென்னை: விழுப்புரம் மாவட்டம் கூட்டேரிப்பட்டு பகுதியில் பேய் நடமாடுகிறது என வீடியோ மற்றும் புகைப்படம் வெளியாகி, அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் விளக்கம் அளித்து உள்ளது.
உண்மைகளை விட சுவாரஸ்யமான பொய்கள் வேகமாகப் பரவுவது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில், அப்பாவி மக்களை பதற வைக்கும் ஒரு வீடியோ சமீப நாட்களாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே கூட்டேரிப்பட்டு பகுடியில் பேய் நடமாடுவதாக ஒரு காணொளி மற்றும் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் பரவி வருகின்றன.

வதந்தி: விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள கூட்டேரிப்பட்டில் இரவு நேரத்தில் பேய் நடமாடுவது போன்ற காணொளி மற்றும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஒரு பெண் அழுவது போன்ற சத்தத்தோடு இணைந்த ஒரு வீடியோ பரவி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
உண்மை என்ன?: இந்த வீடியோ தொடர்பாக தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் விளக்கம் அளித்து உள்ளது. இது முற்றிலும் வதந்தியே. பேய் நடமாடுவதாகப் பரப்பப்படும் புகைப்படம் மற்றும் காணொளி கடந்த ஜூலை மாதம் உத்தரப் பிரதேச மாநிலம், அமேதியில் நடந்ததாகக் கூறி பரவியது.
இது குறித்து விசாரணை நடத்திய உத்திரப்பிரதேச காவல்துறை, பேய் நடமாட்டம் இருப்பதாகக் கூறப்படும் சம்பவம் பொய்யானது என்று விளக்கமளித்தனர். தற்போது இது விழுப்புரத்தில் நடப்பதாகக் கூறி வதந்தி பரப்பியுள்ளனர். வதந்தியை நம்பாதீர்!” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Fact Check
வெளியான செய்தி
விழுப்புரம் மாவட்டம் கூட்டேரிப்பட்டு பகுதியில் பேய் நடமாடுகிறது என வீடியோ மற்றும் புகைப்படம் வெளியாகி பரவியது.
முடிவு
இந்த வீடியோ பொய்யாக சித்தரிக்கப்பட்டது. இதே வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு உ.பி மாநிலம் அமேதியில் எடுக்கப்பட்டது எனப் பரப்பட்டது.












Click it and Unblock the Notifications