Fact Check: கொடுக்குற மாதிரி கொடுத்துட்டு திரும்ப வாங்கினாரா உதயநிதி? பரவிய வீடியோ.. உண்மை என்ன?
சென்னை: மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களைக் கொடுப்பது போல் கொடுத்துவிட்டுத் திரும்பப் பெறுவதாகத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்நிலையில், இந்த தகவல் பொய்யானது என தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழக அரசு சார்பில் தமிழ்நாடு முழுவதும், மாணவர்களுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்கள், அதாவது ஸ்போர்ட்ஸ் கிட் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த திட்டம் தொடர்பாக ஒரு வதந்தி சமூக வலைதளங்களில் தீவிரமாகப் பரவியது.

பரவிய தகவல்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களைக் கொடுப்பதுபோல் கொடுத்து விட்டுத் திரும்பப் பெறுவதாக வீடியோ ஒன்று சமூக வலை தளங்களில் பரவி வருகிறது. பாஜக, அதிமுக ஆதரவாளர்கள் பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து திமுக அரசை கடுமையாக விமர்சித்திருந்தனர்.
உண்மை என்ன?: இந்நிலையில், இது முற்றிலும் பொய்யான தகவல் என தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் மறுத்துள்ளது. விழுப்புரத்தில் நடைபெற்ற கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கும் விழாவில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 688 ஊராட்சிகளுக்கு, 33 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 825 தொகுப்புகளைத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

இதற்கான நிகழ்ச்சியில் மேடையில் விளையாட்டு உபகரணங்கள் அடையாளத்துக்காக வழங்கப்பட்ட போது எடுக்கப்பட்ட காணொளியைத் திரித்து தவறாகப் பரப்பி வருகின்றனர். வதந்தியைப் பரப்பாதீர்! என தமிழக அரசின் உண்மை சரிபார்க்கம் விளக்கம் அளித்துள்ளது.

Fact Check
வெளியான செய்தி
மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களைக் கொடுப்பதுபோல் கொடுத்து விட்டுத் திரும்பப் பெறுவதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது.
முடிவு
மேடையில் விளையாட்டு உபகரணங்கள் அடையாளத்துக்காக வழங்கப்பட்ட போது எடுக்கப்பட்ட காணொளியைத் திரித்து தவறாகப் பரப்பி வருவதாக தமிழக அரசின் உண்மை சரிபார்க்கம் விளக்கம் அளித்துள்ளது.
ரேட்டிங்
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications