Fact Check என்னாது! ஊழியர்களுக்கு இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் பொங்கல் விருந்து வைத்தாரா?
லண்டன்: இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் பொங்கல் விருந்து அளித்த வீடியோ என கூறி ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
பொங்கல் விழா என்பது அறுவடை திருநாள். தமிழர்களுக்கு முக்கியமான திருவிழாவாக இந்த நாள் அமைந்துள்ளது. சங்க காலம் தொட்டு இன்று வரை பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் தை முதல் நாளில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
உழவர் திருநாள், தை முதல் நாள் என்றும் கொண்டாடப்படுகிறது. தங்கள் நிலத்தில் அறுவடை செய்த பொருட்களை சூரிய பகவானுக்கு வைத்து படைப்பது வழக்கம்.

தமிழர்கள்
உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பரந்து விரிந்து கிடந்தாலும் இந்த பண்டிகையை கொண்டாட விடாமல் தவறுவது இல்லை. குறிப்பாக வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் தங்களுக்கு ஒரு சங்கத்தை உருவாக்கி, அங்குள்ள வெளிநாட்டவர்களையும் அழைத்துப் பொங்கல் கொண்டாடி மகிழ்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

தமிழர்கள்
அந்த வகையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் கனடா நாட்டில் தெற்கு அண்டாரியோ மாகாணத்தில் உள்ள வாட்டர்லூ என்ற பகுதியைச் சேர்ந்த காவல் துறை அதிகாரிகள், மேயர், உள்ளூர் அரசியல்வாதிகள் என அந்நாட்டைச் சேர்ந்தவர்களை அழைத்து பாரம்பரிய முறையில் வாழை இலையில் பொங்கல் விருந்து தமிழர்களால் அளிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் உணவு
இந்த பொங்கல் உணவை அந்நாட்டைச் சேர்ந்தவர்கள் தங்களது கைகளிலும் ஸ்பூனிலும் ரசித்து ருசித்து சாப்பிட்டனர். இந்த வீடியோ வாட்டர்லூ தமிழ் கலாச்சார சங்கத்தின் பேஸ்புக் பக்கத்திலும் பதிவிடப்பட்டிருந்தது. ஆனால் சிலர் இதை தவறாக புரிந்து கொண்டனர். அதாவது பிரதமர் ரிஷி சுனக் தனது அலுவலக ஊழியர்களுக்குத்தான் பொங்கல் விருந்து அளித்ததாக அந்த வீடியோவை தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

ஆங்கில ஊடகங்கள்
இதை இந்தியாவின் பல பிரபல ஆங்கில ஊடகங்களும் பதிவிட்ட நிலையில் சில தமிழ் யூடியூப் சேனல்கள் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அளித்த பொங்கல் விருந்து என்று பகிர்ந்துள்ளனர். இதுகுறித்து உண்மை கண்டறியும் ஆய்வில் இந்த வீடியோ வாட்டலூ தமிழ் கலாச்சார சங்கத்தின் பொங்கல் விருந்து என உறுதியாகியுள்ளது. இதுகுறித்து Tamil culture Waterloo region என்ற பேஸ்புக் பக்கத்திலும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Fact Check
வெளியான செய்தி
இங்கிலாந்து பிரதமர் பொங்கல் விருந்து அளித்த வீடியோ
முடிவு
Tamil culture Waterloo region என்ற பேஸ்புக் பக்கத்திலும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது
ரேட்டிங்
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications