Fact Check: சென்னை மெரினா கடற்கரை சாலை வெள்ளத்தில் மூழ்கியதா? பரவும் வீடியோ! உண்மை என்ன?
சென்னை: மழை வெள்ளத்தில் சென்னை மெரினா கடற்கரை சாலை மூழ்கியதாகக் கூறி காணொளி ஒன்று சமூக வலை தளங்களில் பரப்பப்படுகிறது. இந்த வீடியோ சென்னையில் எடுக்கப்பட்டது அல்ல, இது சவுதி அரேபியாவில் எடுக்கப்பட்ட வீடியோ என தெரியவந்துள்ளது.
ஃபெஞ்சல் புயலின் தாக்கம் காரணமாக சென்னையில் வெள்ளிக்கிழமை இரவு முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வந்தது. சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், சில இடங்களில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதேசமயம், பெரும்பாலான இடங்களில் மழைநீர் சிறிது நேரத்தில் வடிந்து இயல்பு நிலை திரும்பியது. 21 சுரங்கப்பாதைகளில் 9 சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கி இருந்தது. அவற்றில் தற்போது மழைநீர் வடிந்துவிட்ட நிலையில், 3 சுரங்கப்பாதைகளில் மட்டும் இன்னும் மழைநீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை மழை வெள்ளம் எனக் கூறி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
மெரினா சாலையில் வெள்ளம் என்று பரவும் சவூதி அரேபியா காணொளி!@CMOTamilnadu @TNDIPRNEWS (1/2) https://t.co/qxZ9OtwdWL pic.twitter.com/0GIfVZvRWO
— TN Fact Check (@tn_factcheck) November 30, 2024
பரவும் செய்தி: மழை வெள்ளத்தில் மெரினா கடற்கரை சாலை மூழ்கியதாகக் கூறி காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. "மகிழ்ச்சி வெள்ளத்தில் சென்னை மக்கள்!? சென்னையில் மழை பெய்த சுவடே இல்லை என முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார்.. ஆனால் நிலையை பாருங்கள்" எனக் குறிப்பிட்டு இந்த வீடியோ பலராலும் ஷேர் செய்யப்பட்டது.
உண்மை என்ன?: இது முற்றிலும் பொய்யான தகவல் என தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. இந்தக் காணொளி கடந்த செப்டம்பர் மாதம் சவூதி அரேபியா நாட்டில் உள்ள ஜெட்டா நகரில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது எடுக்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் சவூதி அரேபியா நாட்டில் பயங்கர மழையால் வெள்ளம் ஏற்பட்டது. ஜெட்டா நகரில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது சாலை முழுவதும் மழைநீர் சூழ்ந்த நிலையில் வாகனத்தில் செல்லும்போது எடுக்கப்பட்ட வீடியோவை, சென்னை எனக் கூறி தற்போது சிலர் பரப்பி வருவது தெரியவந்துள்ளது.

Fact Check
வெளியான செய்தி
மழை வெள்ளத்தில் மெரினா கடற்கரை சாலை மூழ்கியதாகக் கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.
முடிவு
இந்த வீடியோ சென்னையில் எடுக்கப்பட்டது அல்ல. இந்த வீடியோ கடந்த செப்டம்பர் மாதம் சவூதி அரேபியா நாட்டில் உள்ள ஜெட்டா நகரில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது எடுக்கப்பட்டது.
ரேட்டிங்
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications