Fact Check: மதுரை ஏர்போர்ட்டில் இன்பநிதிக்கு மட்டும் பிடிஆர் வரவேற்பு அளித்ததாக பரவும் போலி வீடியோ!

Subscribe to Oneindia Tamil

மதுரை: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதிக்கு மதுரையில் திமுக அமைச்சர்கள் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டதாக சில விநாடி வீடியோ ஒன்று பரப்பப்பட்டு வருகிறது. அது உண்மையா?

உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டை இன்று துவக்கி வைப்பதற்காக தமிழ்நாட்டின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு மதுரை வந்தார். அவருடன், அவரது மகன் இன்பநிதியும் மதுரைக்கு வருகை தந்தார்.

fact check udhayanidhi stalin dmk

மதுரை விமான நிலையத்துக்கு வந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அமைச்சர்கள் மூர்த்தி, பிடிஆர் பழனிவே தியாகராஜன், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மேயர் மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார் மற்றும் ஆளுங்கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.

பரவி வரும் வீடியோ

இந்நிலையில், பாஜகவினர் ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். சில விநாடிகள் கொண்ட அந்த வீடியோவில், இன்பநிதி, ஏர்போர்ட்டில் வெளியே வருவது போன்றும், அவருக்கு பின்னால் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் திமுகவினர் வருவது போலவும் காட்சி இடம்பெற்றுள்ளது.

ஆட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லாத இன்பநிதிக்கு வரவேற்பு அளிப்பதாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை விமர்சிக்கும் வகையில் இந்த வீடியோ தற்போது பாஜகவினர் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. ஆனால், இந்த வீடியோ, உள்நோக்கத்துடன் திட்டமிடப்பட்டு கட் செய்து பரப்பப்பட்டு வருகிறது.

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை தொடங்கியது. இந்தப் போட்டியை துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார். உதயநிதியுடன் அவரது மகன் இன்பநிதியும் ஜல்லிக்கட்டுப் போட்டியை கண்டு ரசித்து வருகிறார். துணை முதல்வர் உதயநிதிக்கு அமைச்சர்கள் மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகியோர் வரவேற்பு நல்கினர்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

துணை முதல்வர் உதயநிதி மேடைக்கு வந்த பின்னர் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து முதலில் கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. கோயில் காளைகளுக்கு துணை முதல்வர் வழங்கும் தங்கக்காசு உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. பின்னர் தொடர்ந்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டு, மாடுபிடி வீரர்கள் அணைத்து வருகின்றனர்.

நேற்று இரவு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சென்னையில் இருந்து மதுரை விமான நிலையத்துக்கு வந்தபோது, மைச்சர்கள் மூர்த்தி, பிடிஆர் பழனிவே தியாகராஜன், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மேயர் மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார் மற்றும் ஆளுங்கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.

அப்போது எடுக்கப்பட்ட காட்சியில், உதயநிதி ஸ்டாலின் முன்னே சென்ற பிறகு இன்பநிதி வருவதை மட்டும் கட் செய்து, இன்பநிதிக்கு மட்டும் அமைச்சர்கள் வரவேற்பு அளித்ததாக எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.

Fact Check

வெளியான செய்தி

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதிக்கு மதுரையில் அமைச்சர்கள் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டதாக வீடியோ ஒன்று பரப்பப்பட்டு வருகிறது.

முடிவு

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் வந்திருந்தார். இருவரையும் அழைத்தபடி அமைச்சர் பிடிஆர் உள்ளிட்டோர் வெளியே வந்தனர். ஆனால் இன்பநிதிக்கு மட்டும் வரவேற்பு அளித்ததாக குறிப்பிட்டு வீடியோ பரப்பப்படுகிறது.

ரேட்டிங்

Misleading
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+