போலீஸ் காலில் விழுந்து கெஞ்சிய கரப்பான் பூச்சி கட்சி தலைவர் அபிஜித்! தவறாக பரவும் தகவல்.. பின்னணி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வரும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் அபிஜித் திப்கே நடுரோட்டில் போலீஸ் அதிகாரியின் காலில் விழுந்து கெஞ்சிய வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் அதுபற்றி பல்வேறு தகவல்களை நெட்டிசன்கள் பரப்பி வருகின்றனர். இந்நிலையில் தான் அபிஜித் திப்கே எதற்காக போலீஸ் காலில் விழுந்து கெஞ்சினார்? அதன் பின்னணி என்ன? எப்போது நடந்தது? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

'நீட்' வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சரிடம் தர்மேந்திர பிரதானிடம் ராஜினாமா கோரி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி ஜந்தர் மந்தரில் இந்த போராட்டம் நடந்து வருகிறது. நாளுக்கு நாள் போராட்டம் தீவிரடைந்து வருகிறது.

Abijeet Dipke

இந்நிலையில் தான் தற்போது இணையதளங்களில் வேகமாக வீடியோ ஒன்று பரவி வருகிறது. அந்த வீடியோவில் போலீஸ் அதிகாரி ஒருவரிடம், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவன தலைவர் அபிஜித்திப்கே கையெடுத்து கும்பிட்டும், நடுரோட்டில் படுத்து போலீஸ் அதிகாரியின் காலை பிடித்து கெஞ்சும் காட்சிகள் பரவி வருகிறது.

இந்த வீடியோவை தற்போது ஒரு தரப்பினர் 'எக்ஸ்'உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு, ''அமைதி போராட்டத்தை கைவிட்டு வன்முறையில் ஈடுபடுவோரின் பாஸ்போர்ட்டை ரத்து செய்வதாக அறிவித்ததால் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் அபிஜித் திப்கே போலீஸ் காலில் விழுந்து கெஞ்சுகிறார்'' என்று கூறி வருகின்றனர்.

அதோடு, டெல்லியில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த காவல் ஆணையர் அனுராக் குமாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதோடு வன்முறையில் ஈடுபடுவோரின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய போலீசார் யோசித்து வருவதாக நேற்று தகவல் வெளியான நிலையில் இந்த வீடியோவை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

ஆனால் உண்மை என்னவென்றால் வேறு. அதாவது அபிஜித் திப்கே டெல்லி ஜந்தர் மந்தரில் போலீஸ் அதிகாரியின் காலில் விழுந்து கெஞ்சினாரா என்றால் அது உண்மை தான். இந்த சம்பவம் அங்கு போராட்டம் தொடங்கிய சில நாட்களில் நடந்தது. அதாவது ஜூன் 6ம் தேதி சாதாரண போராட்டமாக தான் கரப்பான்பூச்சி கட்சியினர் முதலில் தொடங்கினர். அதன்பிறகு சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் ஜூன் 28 ல் பங்கேற்று உண்ணாவிரதத்தை தொடங்கினார். அவருடன் சில மாணவர் அமைப்பினரும் உண்ணாவிரதத்தை தொடங்கினர்.

சோனம் வாங்சுக் வந்த பிறகு தான் இந்த போராட்டம் அதிக கவனம் பெற்றது. உண்ணாவிரதம் தொடங்கிய பிறகு இந்த மாதத்தின் 2வது வாரத்தில் டெல்லியில் கனமழை பெய்தது. இதனால் அங்கு போராட்டம் மற்றும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றவர்கள் பாதிக்கப்பட்டனர். மழையில் நனைய வேண்டிய சூழல் ஏற்பட்டது. பலரும் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். இதனால் கூடுதலாக கூடாரம் அமைக்க அபிஜித் திப்கே போலீசாரிடம் அனுமதி கோரினார். அதற்கு அவர்கள் மறுத்த நிலையில் தான் அபிஜித் திப்கே காலில் விழுந்து கெஞ்சினார். ஆனால் அந்த பழைய வீடியோவை தற்போது தவறான தகவல்களுடன் சிலர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

Fact Check

வெளியான செய்தி

போராட்டம் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடுவோரின் பாஸ்போர்ட்டை ரத்து செய்யும் நடவடிக்கையை தொடங்க வேண்டாம் என்று போலீஸ் அதிகாரியின் காலில் விழுந்து கெஞ்சிய கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் அபி

முடிவு

ஜூலை தொடக்கத்தில் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தியபோது போராட்டக்காரர்களின் பாதுகாப்புக்காக கூடுதலாக கூடாரங்கள் அமைக்க போலீசாரிடம் அனுமதி கோரி அபிஜித் திப்கே கெஞ்சினார்.

ரேட்டிங்

False
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+