மெகந்தியை வைச்சு இப்படியும் பண்ணலாமா.. "கையை ஸ்கேன் செய்தால் காசு.." ஆனா உண்மையில் இது சாத்தியம்தானா
டெல்லி: இந்த நவீனக் காலத்தில் எல்லாமே இணையம் என்று மாறி வரும் நிலையில், மெகந்தி க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து பணம் அனுப்பும் வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அது உண்மை தானா என்பதைப் பார்க்கலாம்.
வங்கித் துறையை இணையம் முற்றிலுமாக தலைகீழாகப் புரட்டிப் போட்டுள்ளது. குறிப்பாக யுபிஐ வந்த பிறகு, பணம் அனுப்புவதும் சரி பெறுவதும் சரி ரொம்பவே ஈஸியானதாக மாறிவிட்டது.

கிரெட்டிட் கார்டு மூலம் செலுத்தும் போது அதற்குக் குறிப்பிட்ட சதவிகித தொகையைக் கடை உரிமையாளர் செலுத்த வேண்டி இருக்கும். இருப்பினும், யுபிஐ மூலம் செலுத்தினால் இதுபோல எந்தவொரு கட்டணமும் இல்லை.
யுபிஐ: இதன் காரணமாகவே இப்போது பெட்டிக் கடைக்காரர் முதல் பெரிய ஷாப்பிங் மால்கள் வரை அனைவருமே யுபிஐ மூலம் பணம் பெற சம்மதித்துள்ளனர். அதேபோல யுபிஐ மூலம் பணம் செலுத்த நாம் எந்தவொரு கட்டணத்தையும் செலுத்தத் தேவையில்லை.. எவ்வளவு ஆயிரமாக இருந்தாலும் ஜீரோ கட்டணத்தில் நாம் யாருக்கு வேண்டுமானாலும் பணத்தை அனுப்பலாம். நாம் ஒரு நபருக்குப் பணத்தை அனுப்ப யுபிஐ ஐடி அல்லது மொபைல் நம்பர் இருந்தாலே போதும்.
இரண்டும் இல்லையென்றாலும் க்யூஆர் கோட் இருந்தாலே போதும்.. அதை ஸ்கேன் செய்து நம்மால் ஒருவருக்குப் பணத்தைச் செலுத்த முடியும். இது பாதுகாப்பானதாகவும் எளிதாகவும் இருப்பதால் ஆட்டோ ஓட்டுநர்கள், கடைக்காரர்கள் எனப் பலரும் இதையே பயன்படுத்தி வருகின்றர். இதற்கிடையே இன்ஸ்டாகிராம் தளத்தில் இந்த க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து அனுப்புவது போன்ற வீடியோ டிரெண்டாகி வருகிறது. பணம் அனுப்பும் வீடியோ தானா.. இதில் என்ன என்று கேட்காதீர்கள்.
ஸ்கேன் செய்தால் பணம்: ஏனென்றால் இதில் அவர்கள் ஏதோ சாதாரண கார்டில் இருக்கும் க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்து அனுப்பவில்லை. நேற்றைய தினம் ரக்ஷா பந்தன் கொண்டாடப்பட்ட நிலையில், அதற்காகப் பெண் ஒருவர் கையில் போட்டிருந்த மெகந்தியை ஸ்கேன் செய்து இந்த நபர் பணத்தை அனுப்பியுள்ளார். இந்த வீடியோ டிரெண்டாகி வரும் நிலையில், இது உண்மை தானா என்பதை நாம் பார்க்கலாம்.
இந்த வீடியோவை நாம் சேர்ச் செய்து பார்த்ததில் இது முதலில் "yash_mehndi" என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து பதிவாகியுள்ளது தெரிய வருகிறது. அவர் முதலில் இந்த வீடியோவை ஆகஸ்ட் 28ஆம் தேதி பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவிலேயே அவர் இது வெறும் ஃபன்னிற்கு உருவாக்கிய வீடியோ என்பதைத் தெளிவாகப் பதிவிட்டுள்ளார். அவரை தொடர்பு கொண்டு கேட்ட போதும், அது ஜாலிக்காக எடிட் செய்யப்பட்டு உருவாக்கப்பட்ட வீடியோ என்பதை உறுதி செய்தார். இருப்பினும், அந்த வீடியோவை தான் உண்மை பலரும் பரப்பி வருகின்றனர்.
உண்மை என்ன: மேலும், அவர் இந்த வீடியோவை எப்படி உருவாக்கினோம் என்பதை விளக்கினார். முதலில் மெகந்தியில் உள்ள க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து, அதை ஸ்கிரீன் ரெக்காட் செய்துள்ளார். அடுத்து மற்றொரு ஒர்ஜினல் க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து, பணத்தை அனுப்பியுள்ளார். அதையும் அவர் ஸ்கிரீன் ரெக்காட் செய்துள்ளார். பிறகு இரண்டையும் சேர்த்து ஒரே வீடியோவாக மாற்றி, ரீல்ஸ் எடுக்கும் போது அதை ப்ளே செய்துள்ளார்.
அதாவது டிரெண்டாகும் அந்த ரீல்ஸில் அந்த நபர் வெறுமன மொபைலில் வீடியோவை ப்ளே மட்டுமே செய்துள்ளார். எந்தவொரு க்யூஆர் கோடையும் ஸ்கேன் செய்யவில்லை. கூர்ந்து கவனித்தால் மொபைலில் கீழே ஐபோன்களில் வீடியோ ப்ளே ஆகும் போது வரும் ஐக்கான் நமக்குத் தெரியும். இதன் மூலம் இந்த வீடியோ போலியானது என்பது நமக்குத் திட்டவட்டமாகத் தெரிகிறது.
மெகந்தியில் இருக்கும் க்யூஆர் கோடை வைத்து பணம் செலுத்த முடியும் என்ற போதிலும் அது ரொம்பவே கஷ்டம்.. வரையப்பட்ட க்யூஆர் கோடின் அளவு மற்றும் அதன் அடர்த்தி, டாட்டூ மை மற்றும் தோலுக்கு இடையே உள்ள வேறுபாடு, காலப்போக்கில் க்யூஆர் கோட் சிதைவது என பல விஷயங்கள் இதில் இருக்கிறது. மெகந்தியில் பணம் அனுப்ப முடியும் என்ற போதிலும் அது ரொம்பவே கஷ்டம் என்பது இதன் மூலம் உறுதியாகிறது.

Fact Check
வெளியான செய்தி
ரக்ஷா பந்தன் தினத்தன்று க்யூஆர் கோட் மூலம் ஸ்கேன் செய்தால் ஈஸியாக பணத்தை அனுப்பலாம்.
முடிவு
இந்த வீடியோவை அவர்கள் விளையாட்டிற்காக செட்அப் செய்து எடுத்துள்ளனர். இது உண்மை இல்லை
ரேட்டிங்
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications