கொரோனா குறித்த இன்னும் ஒரு ஃபேக் நியூஸ்.. அது குறித்து நாஸ்டிரடாமஸ் கணிக்கலை.. நம்பாதீங்க!

கொரோனா வைரஸ் பற்றி பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே நாஸ்டிரடாமஸ் கணித்து இருப்பதாக ஒரு தவறான தற்போது பரவி வருகிறது.

Subscribe to Oneindia Tamil

மதுரை: 2025ஆம் ஆண்டுக்குள் உலகம் சைவமாகும், உலகத்தை ரட்சிக்க ஒரு தலைவர் வருவார் அவரது கட்டுப்பாட்டிற்குள் உலகம் அடங்கும் என்றெல்லாம் நாஸ்டிரடாமஸ் கணித்திருக்கிறார் என்று முன்பு ஒரு செய்தி கிளப்பி விடப்பட்டது போல இப்போது கொரோனா குறித்தும் அவர் கணித்ததாக போலியான தகவல் பரவி வருகிறது. அதில் உண்மை இல்லை.

Recommended Video

    கொரோனா வைரஸ் பற்றிய வதந்திகளும் அதற்கான பதில்களும் | Dr.Aravindha Raj

    தீர்க்கதரிசனம் என்று உண்டு, பின்னால் நடக்கப் போவதை முன்கூட்டியே கணித்து சொல்வதுதான். நமது நாட்டில் வாழ்ந்த சித்தர்கள் பலர் கொரோனா வைரஸ் பற்றி முன்பே கணித்ததாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. இதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்று நம்மால் உறுதிபடக் கூற முடியாது. இந்த வகையில் நாஸ்டிரடாமஸ் பெயரை வைத்து போலியான தகவல் பரவி வருகிறது.

    நாஸ்டிரடாமஸ் 1503ஆம் ஆண்டு முதல் 1566 ஆம் ஆண்டு வரை பிரான்சில் வாழ்ந்திருக்கிறார். இவர் தன்னுடைய லெஸ் ப்ரோஃபீடிஸ் என்கிற புத்தகத்தில் கவிதை வடிவத்தில் சில தகவல்களை உலகத்திற்கு சொல்லியிருக்கிறார். இவற்றில் பல சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அதேசமயம், அதில் பல, கற்பனை கலந்த கணிப்புதான். 16ஆம் நூற்றாண்டில் இருந்தே ஒவ்வொரு முக்கிய நிகழ்வுகளையும் அவர் முன்கணித்து உள்ளார் என குறிப்பிட்ட மக்கள் நம்பி வருகிறார்கள்.

    கலவரங்கள் அதிகமாகும்

    கலவரங்கள் அதிகமாகும்

    இந்த கொரோனா வைரஸ் பரவி மக்களை கொத்து கொத்தாக கொன்று வரும் இந்த நேரத்தில் நாஸ்டிரடாமஸ் 2025 வரை இன்னும் என்னென்ன நடக்கும் என்று கணித்திருக்கிறார் என்று கூறப்படும் தகவல்கள் பற்றிப் பார்க்கலாம். 2018ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டுவரை உலகம் மிகப் பெரிய பல பேரழிவுகளையும் சந்திக்குமாம். அதாவது எரிமலைகள் வெடிக்குமாம், நிலநடுக்கம் அதிகரிக்குமாம், வெள்ளம் அதிகளவில் ஏற்படும். வறட்சி, பஞ்சம் அதிகரிக்குமாம். கலவரங்களும் அதிகரிக்கும் என்று கணித்திருக்கிறாராம்.

    உலகப்போர்

    உலகப்போர்

    2018 முதல் 2025 வரை நிறைய பூகம்பங்கள் வரலாம். உலகத்தில் இதுவரை பார்க்காத அளவிற்கு இயற்கை சீற்றங்கள் வரலாம். புவி வெப்பமயமாதல் காரணமாக வெப்பம் அதிகமாக இருக்கும் கடலின் அளவு கூடும். அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப்தான் உலகின் மூன்றாம் உலகப்போருக்கு காரணமாவார். உலகப்போர் கண்டிப்பாக வரும் என்று கணித்திருக்கிறாராம். நாஸ்டிரடாமஸ் கணித்துள்ளவற்றில் முக்கியமானது, 3வது உலகப் போர் வெடிக்கும் என்பதுதான். (இது உண்மையா என்பது ஆய்வுக்குரியது)

    உலகத்தில் பாதிப்பு

    உலகத்தில் பாதிப்பு

    இந்த உலகப் போர் உலக அளவில் பல மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும் பாதி உலகம் அழியும் என்றும் நாஸ்டிரடாமஸின் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். இதுவரை உலகம் பார்த்திராத பல வித்தியாசமான ஆயுதங்கள் இதில் பயன்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளதாம்.
    இந்தப் போரின் தாக்கத்தால் உலகின் பெரும் பகுதி பாதிக்கப்படுமாம்.

    இயற்கை பேரிடர்கள்

    இயற்கை பேரிடர்கள்

    இந்த ஆண்டில் மிகப் பெரிய உலகத் தலைவர் ஒருவர் கொல்லப்படுவாராம். அவர் மத்திய கிழக்கு நாட்டில் கொல்லப்படுவாராம். அவர் கொல்லப்படும் சமயத்தில் ஒரு பெரிய வால் நட்சத்திரம் வெறும் கண்ணில் பார்க்கும் அளவுக்கு தெளிவாக காட்சி தருமாம். பல நாட்கள் அந்த வால் நட்சத்திரத்தைப் பார்க்க முடியுமாம். பின்னர் அது வெடித்துச் சிதறி விடுமாம்.

    கொரோனா பற்றி வதந்தி

    கொரோனா பற்றி வதந்தி

    இதெல்லாம் கூட விட்டு விடலாம்.. ஆனால் சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் கோவிட்-19 வைரஸ் குறித்தும் நாஸ்டிரடாமஸ் கணித்து உள்ளதாக கிளப்பி விட்டு விட்டனர். இதுதான் மிகப் பெரிய பொய்ச் செய்தி என்று தெரிய வந்துள்ளது. நாஸ்டிரடாமஸ் கணிப்பில் அப்படி எதுவுமே கூறப்படவில்லையாம். அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாஸ்டிரடாமஸ் பெயரில் வெளியாகி உலா வரும் இந்தத் தகவல் பொய்யானது என்று தெரிய வந்துள்ளது. எனவே இது போலிச் செய்தி.. யாரும் நம்ப வேண்டாம். நம்பி பீதி அடைய வேண்டும்.

    பூமியில் அழிவு

    பூமியில் அழிவு

    கொரோனா வைரஸ் தாக்கியதற்குப் பின்னர் பல நாட்டு மக்கள் சைவத்திற்கு மாறி வருகின்றனர். ஆனால் நம்ம ஊர் கறி கடைகளில் கூட்டம் அலைமோதிக்கொண்டுதான் இருக்கிறது. 2025ஆம் ஆண்டுக்குள் உலகின் பல பகுதி மக்கள் சைவத்திற்கு மாறுவார்கள் என்று கணித்திருக்கிறாராம். வரலாற்றில் கண்டிராத மிகப் பெரிய வெள்ளம் ஏற்படுமாம். இயற்கை பேரிடர்கள் மிகப் பெரிய அளவில் வெடிக்குமாம். பல பேரழிவுகளை உலகம் காணுமாம். நிலத்தின் பெரும் பகுதி இதில் சிக்கி அழியுமாம். வானிலிருந்து வரும் சக்தியால் பூமியின் பல பகுதிகளில் அழிவு ஏற்படுமாம்.

    எல்லாமே காது வழித் தகவல்தான்.. இதில் எதுவுமே உறுதிப்படுத்தப்பட்டது கிடையாது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+