மே.வங்கத்தில் காளியின் சிலை அவமதிக்கப்பட்டதா? வைரலாகும் புகைப்படம்.. உண்மை என்ன?
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் காளியின் சிலையை சமூக விரோதிகள் அவமதித்து விட்டதாக பொய்யான தகவல் பரவி வருகிறது. இணையத்தில் இது தொடர்பாக வதந்தி பரவுவதாக மேற்கு வங்க போலீஸ் விளக்கம் அளித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் முர்ஷிதாபாத் பகுதியில் இருக்கும் காளி கோவில் மிகவும் பிரபலம். துர்கை அம்மன் வழிபாட்டில் மேற்கு வங்க மக்கள் ஆர்வம் காட்டுவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முர்ஷிதாபாத் பகுதியில் இருக்கும் காளி கோவிலில் இருக்கும் காளியின் முகத்தில் கரி பூசப்பட்ட புகைப்படம் ஒன்று வைரலானது.

உடல் முழுக்க கருப்பு கரி பூசப்பட்ட புகைப்படம் வைரலானது. இதை பேஸ்புக்கில் பகிர்ந்து மேற்கு வங்க பாஜக எம்பி அர்ஜுன் சிங், சமூக விரோதிகள் இந்து மதத்தை அவமதிக்க வேண்டும் என்று இப்படி செய்துள்ளனர். மேற்கு வங்க முதல்வர் மமதாவின் ஜிஹாதி அரசியல் காரணமாக இந்து கடவுள் அவமதிக்கப்படுகிறார்கள் என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.
ஆனால் இந்த தகவலை அம்மாநில போலீஸ் மறுத்துள்ளது. மேற்கு வங்கத்தில் காளியின் சிலையை சமூக விரோதிகள் அவமதித்து விட்டதாக பொய்யான தகவல் பரவி வருகிறது என்று அம்மாநில போலீஸ் கூறியுள்ளது. அதில், இந்த கோவில் சிலையை யாரும் அவமதிக்கவில்லை.

இங்கு ஏற்பட்ட தீ விபத்தில் சிலை சேதம் அடைந்துள்ளது. மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்து இது. வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கொல்கத்தா போலீஸ் கூறியுள்ளது. மேலும் இது தொடர்பாக வதந்தி பரப்பிய பாஜக எம்பி அர்ஜுன் சிங் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அம்மாநில போலீஸ் கூறியுள்ளது.

Fact Check
வெளியான செய்தி
மேற்கு வங்கத்தில் காளியின் சிலையை சமூக விரோதிகள் அவமதித்து விட்டதாக பரவும் தகவல்.
முடிவு
இந்த தகவலை அம்மாநில போலீஸ் மறுத்துள்ளது. இந்த கோவில் சிலையை யாரும் அவமதிக்கவில்லை.இங்கு ஏற்பட்ட தீ விபத்தில் சிலை சேதம் அடைந்துள்ளது.
ரேட்டிங்
-
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications