For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Fake News Buster: எஸ்பிஐ வங்கியின் AePS பண பரிவர்த்தனையை ஆர்பிஐ முடக்கியதா? உண்மை என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: எஸ்பிஐ வங்கியின் AePS பண பரிவர்த்தனை முறையை ஆர்பிஐ முடக்கி இருப்பதாக பொய்யான செய்தி ஒன்று இணையம் முழுக்க பரவி வருகிறது.

Recommended Video

    Fake News Buster : எஸ்பிஐ வங்கியின் AePS பண பரிவர்த்தனையை ஆர்பிஐ முடக்கியதா?

    இந்தியாவில் 9373 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 1075 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Fake News Buster: RBI did not freeze the SBI’s AePS server

    தமிழகத்தில் ஏப்ரல் 30 வரை ஏற்கனவே ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பு இப்படி இருக்க இன்னொரு பக்கம் கொரோனா தொடர்பான பொய்யான வதந்திகள் பரவிய வண்ணம் இருக்கிறது. நிறைய பொய்யான செய்திகள் பரவிய வண்ணம் உள்ளது .

    அதில் ஒரு பகுதியாக எஸ்பிஐ வங்கியின் AePS பண பரிவர்த்தனை முறையை ஆர்பிஐ முடக்கி இருப்பதாக பொய்யான செய்தி ஒன்று இணையம் முழுக்க பரவி வருகிறது. AePS என்பது Aadhar enabled Payment System என்று அழைக்கப்படும் ஆதார் எண் மூலம் சோதனை செய்யப்பட்டு அனுப்பப்படும் பண பரிவர்த்தனை முறை ஆகும்.

    இதன் எஸ்பிஐ வங்கியில் பணம் அனுப்பலாம், பணம் பெறலாம், பில்களை செலுத்தலாம், வங்கி கணக்கின் விவரங்களை அறியலாம். இந்த நிலையில் இந்த நிலையில் AePS பண பரிவர்த்தனை முறையை ஆர்பிஐ முடக்கி இருப்பதாக செய்தி வெளியானது. சிலருக்கு இது தொடர்பாக மெசேஜும் சென்றது.

    அதேபோல் இந்த AePS பண பரிவர்த்தனை மூலம் பணம் அனுப்பினால் அந்த பணம் முடங்கிவிடும் என்றும் கூறப்பட்டது. ஏப்ரல் 14 வரை இது இயங்காது என்றும் இதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இது பொய்யான தகவல் என்று செய்தி வெளியாகி உள்ளது. ஆர்பிஐ அப்படி அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. எஸ்பிஐ வங்கியும் அப்படி AePS பண பரிவர்த்தனையை முடக்கும் எண்ணத்தில் இல்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இது தொடர்பாக வெளியாகும் செய்திகளை நம்ப வேண்டாம்.

    English summary
    Fake News Buster: RBI did not freeze the SBI’s AePS server due to lockdown.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X