FACT CHECK: மோடி செமயா கிரிக்கெட் ஆடுறாரே.. யுவராஜ் சிங் தந்தை வீடியோவை காட்டி சிலாகித்த பாஜகவினர்
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி பந்துகளை விளாசி அசத்தலாக பேட்டிங் செய்வதை போன்ற வீடியோவை வெளியிட்டு பாஜக ஆதரவாளர்கள் சிலாகித்து வருகிறார்கள். இந்த நிலையில் அந்த வீடியோவில் இருப்பது பிரதமர் நரேந்திர மோடிதானா? அதன் உண்மை தன்மை என்ன என்பது குறித்து அலசுவோம்.
இந்தியா - ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் தொடரின் இறுதிப்போட்டி அண்மையில் குஜராத்தின் அஹமதாபாத்தில் நடந்து முடிந்தது.
இந்த போட்டியை பிரதமர் நரேந்திர மோடியும் ஆஸ்திரேலிய பிரதமர் ஆந்தோனி ஆல்பனீசும் தொடங்கி வைத்து, தங்கள் நாட்டு வீரர்களுடன் தேசிய கீதம் ஒலிக்கும்போது அணிவகுத்து நின்றனர்.
|
டிரெண்டாகும் வீடியோ
இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் டிரெண்டான நிலையில் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோருடன் பிரதமர் மோடியும் இந்திய அணி டெஸ்ட் சீருடை அணிந்து இருப்பதை போன்ற புகைப்படத்துடன், பிரதமர் நரேந்திர மோடி கிரிக்கெட் விளையாடுவதாக ஒரு வீடியோவை எடிட் செய்தி அவரை பாஜகவினர் பாராட்டி வருகிறார்கள்.

பேட்டிங் செய்யும் மோடி
"இப்படி இந்த மனுசன் சகல விசயத்தையும் அறிந்து வைத்திருப்பதை தான் எதிரிகளால் ஜீரணிக்க முடியாமல் கதறுறானுக தேர்ந்தெடுக்கப்பட்ட கிரிக்கெட் வீரனை போல் அற்புதமாக பேட்டிங் நளினம் மிக அருமை..." என்ற பதிவுடன் இதனை பாஜக ஆதரவாளர்கள் பலரும் பகிர்ந்து சிலாகித்து வருகிறார்கள். வெள்ளை குர்தாவுடன் நீள நிற சுவட்டர், கழுத்தில் துண்டு வெள்ளை முடி, வெள்ளை தாடியுடன் அந்த வீடியோவில் பந்துகளை அடிக்கிறார்.

இன்ஸ்டாகிராம் பக்கம்
இதன் உண்மை தன்மை குறித்து இணையத்தில் ஆராய்ந்தபோது கடந்த மார்ச் 12 ஆம் தேதி YSPL Cricket என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோ பதிவிடப்பட்டு இருக்கிறது. அத்துடன் யோக்ராஜ் சிங் என்ற இன்ஸ்டாகிராம் கணக்கு இந்த வீடியோவில் டேக் செய்யப்பட்டு இருக்கிறது. "எனக்கு கிரிக்கெட் விளையாட பிடிக்கும். விளையாடினால் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும். உங்களுக்கு பிடித்த விளையாட்டு எது?" என்று அதில் பதிவிடப்பட்டு இருக்கிறது.

யுவராஜ் சிங்கின் தந்தை
அத்துடன் யோக்ராஜ் சிங் என்ற இணையளத்தின் பெயரும் இணைக்கப்பட்டு இருந்தது. அதில் சென்று பார்த்தபோதுதான் அவர் மிகப்பெரிய ஜாம்பவான்களுக்கு எல்லாம் கிரிக்கெட் பயிற்சியளித்த யோக்ராஜ் சிங் என்பதும் அவர் ஓய்வுபெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை என்பதும் தெரியவந்தது. இவர் யுவராஜ், மனன் வோரா போன்ற வீரர்களுக்கு அவர் பயிற்சி அளித்து இருக்கிறார்.

உண்மை என்ன?
முன் பக்கமாக பார்க்க மிகப்பெரிய தாடியுடன் யோக்ராஜ் சிங் காணப்படுகிறார். அதே நேரம் அவர் கிரிக்கெட் விளையாடியதை பின்புறமாக பார்க்க ஒரு சாயலுக்கு பிரதமர் நரேந்திர மோடியை போன்று தெரிகிறார். இந்த நிலையில் அதை பதிவிட்டு பிரதமர் நரேந்திர மோடி பேட்டிங் செய்வதாக வதந்தி பரப்பி உள்ளனர்.

Fact Check
வெளியான செய்தி
பிரதமர் நரேந்திர மோடி பந்துகளை விளாசி அசத்தலாக பேட்டிங் செய்வதாக கூறி ஒரு வீடியோவை பாஜகவினர் பகிர்ந்து வருகிறார்கள்.
முடிவு
அந்த வீடியோவில் இருப்பவர் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங். அது மோடி அல்ல.
ரேட்டிங்
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications