FACT CHECK: இஸ்லாமியர் இந்து கடவுளை பற்றி தவறாக பேசினாரா? பரவும் வீடியோவில் இருப்பவர் யார் தெரியுதா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இஸ்லாமியர் ஒருவர் இந்து மத கடவுள்களை பற்றி தவறாக பேசுவதாக வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது. இது குறித்து உண்மை தன்மை என்ன என்று விரிவாக பார்ப்போம்.

குழந்தைசாமி சுப்ரமணியம் என்ற நபர் எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்து "மேலே உள்ள முஸ்லீம் அவன் பேசியதை அவரவர் செல்லில் உள்ள அனைத்து குரூப்களிலும் பகிருங்கள் அவன் கைது ஆகும் வரை." என்று குறிப்பிட்டு உள்ளார். இன்றும் அந்த பதிவு எக்ஸ் தளத்தில் உள்ளது. அந்த வீடியோவில் ஒருவர் கவிதை வாசிக்கிறார்.

 Fake video of Muslim speaking against of Hindu Gods is being shared on social media

"வீட்டு மலக்குழியில் ஒருவாரமாய் அடைப்பு
அடைப்பெடுக்க எங்கெங்கோ சுற்றி அந்தணர் கிடைக்காமல
அயோத்தி சென்று ராமனைக் கையோடு கூட்டிவந்தேன்
முதலில் மறுத்தவனிடம் பணம் கூடத் தருவதாய்க் கூறினேன்
ஒரு புட்டிச் சாராயத்தை ஒரே மூச்சில் குடித்துக் குழிக்குள் குதித்தான் ராமன்"

என்று தொடங்கும் அந்த கவிதையில் இந்து மத கடவுள்களான ராமர், சீதை, அனுமன் ஆகியோரது பெயர்கள் உச்சரிக்கப்படுகின்றன.

அந்த வீடியோவின் மேலே இயக்குநர் பா ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையத்தின் முத்திரை மற்றும் நீலம் பண்பாட்டு மையம் நடத்தும் வானம் நிகழ்வில் முத்திரைகள் இடம்பெற்று உள்ளன. வானம் நிகழ்வில் அவர் இந்த கவிதை வாசிக்கப்பட்டது தெரிகிறது. இது நீலம் அமைப்பின் இணையதளத்திலும் உள்ளது. உற்று கவனித்தபோதுதான் தெரிந்தது இந்த கவிதையை வாசித்தவர் பெயர் விடுதலை சிகப்பி என்றும், மலக்குழி மரணங்கள் என்ற தலைப்பில் தான் எழுதிய கவிதையை அவர் வாசித்து அது நீலம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளதும் உறுதியானது.

இந்த வீடியோ கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் மலக்குழி மரணம் என்ற தலைப்பில் அவர் இக்கவிதையை படித்து இருக்கிறார். இதற்கு இந்துத்துவ அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்து முன்னணியை சேர்ந்த சுரேஷ் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விடுதலை சிகப்பி மீது இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் அவருக்கு முன் ஜாமீனும் வழங்கி உள்ளது. விடுதலை சிகப்பியின் இயற்பெயர் விக்னேஷ்வரன் என்பதாகும். இந்த நிலையில் அவரை இஸ்லாமியர் என சித்தரித்து வதந்தி மூலம் மத வெறுப்பை பரப்பி உள்ளது தெளிவாகிறது.

Fact Check

வெளியான செய்தி

இந்து மத கடவுள்களான ராமர், சீதை, அனுமனை இஸ்லாமியர் தவறாக பேசும் வீடியோ.

முடிவு

வீடியோவில் பேசுபவர் உதவி இயக்குநர் விடுதலை சிகப்பி. அவரது இயற்பெயர் விக்னேஷ்வரன்.

ரேட்டிங்

Misleading
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+