Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பூனைக்கு மணி கட்டியாச்சு.. ரோபோ சங்கர் மகள் சொல்வது பொய்! வதந்தி பரப்பாதீங்க.. தமிழக அரசு கண்டனம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல நடிகர் ரோபோ சங்கரின் மகளும் நடிகையுமான இந்திரஜா கடந்த சில தினங்களுக்கு தனது ஆறு மாத குழந்தைக்கு அறிவு வளர்ச்சியை தூண்டும் பயிற்சி அளிப்பதாக ஒரு நிறுவனம் குறித்து வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் அவர் குழந்தைகளின் சிந்தனை திறன் குறைந்துள்ளதாக தவறான தகவலை பரப்புவதாகவும், அவர் தவறான தகவல்களை பரப்ப கூடாது என தமிழ்நாடு அரசின் டிஎன் ஃபேக்ட் செக் தெரிவித்துள்ளது.

பிரபல நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா பிகில் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். தொடர்ந்து விருமன் படத்திலும் நடித்திருந்தார். இதற்கிடையே தனது உறவினரான கார்த்திக் என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

அவரது திருமணம் தொடங்கி அனைத்து நிகழ்வுகளையும் யூட்யூப் சேனல் ஒன்று ஒளிபரப்பியது. ஆனால் அளவுக்கு அதிகமாக ப்ரோமோஷன் செய்ததாக ரோபோ சங்கர் குடும்பம் மீது விமர்சனம் இருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது.

Indraja Robo Shankar Fact Check

இந்த நிலையில் அந்த குழந்தை குறித்த வீடியோக்களை போட்டு வந்தார். ஆனால் அதிலும் ஏதாவது ஒரு நிறுவனத்துக்கு ப்ரமோஷன் செய்வது போலவே இருந்தது. இந்த நிலையில் தனது ஆறு மாத குழந்தையை வைத்து ஹீ குரு என்ற நிறுவனத்திற்கு அழைத்துச் சென்றார். அந்த நிறுவனம் குழந்தைகளின் அறிவு வளர்ச்சியை தூண்டும் பயிற்சியை கொடுக்கும் நிறுவனம் என விளம்பரம் செய்யப்பட்டது. இந்த நிலையில் 6 மாத குழந்தையை வைத்து சம்பாதிக்க வேண்டுமா என சமூக வலைதளங்களில் கடும் விமர்சனம் எழுந்தது.

இந்த நிலையில் இந்திரஜா வதந்தி பரப்புவதாகவும், அவர் இனி வதந்தி பரப்பக் கூடாது என கூறி இருக்கிறது தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம். இது தொடர்பாக வெளியாகி உள்ள அறிவிப்பில்," ஹெகுரு பயிற்சி சர்ச்சை : தமிழ்நாட்டில் குழந்தைகளின் சிந்தனைத் திறன் குறைந்துள்ளதாகத் தவறான தகவலைப் பரப்பும் யூடியூப் தம்பதி !

ஹெகுரு பயிற்சி குறித்து யூடியூபர் இந்திரஜா மற்றும் அவரது கணவர் யூடியூப் பக்கத்தில் வெளியிட்ட காணொளி சர்ச்சையான நிலையில், அதற்கு அவர்கள் விளக்கமளித்து வெளியிட்ட காணொளியில் பல தவறான தகவல்கள் உள்ளன.

தவறான தகவல் 1 : ஹெகுரு என்ற கல்விமுறை/பயிற்சியைப் பற்றி இந்திய அரசு நவ்சேத்னா என்ற வழிகாட்டும் நெறிமுறையை வெளியிட்டுள்ளது. அதை அடிப்படையாக வைத்து தான் இந்த பயிற்சி மையம் செயல்படுகிறது.

இது முற்றிலும் பொய்யான தகவல். மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை வெளியிட்ட Navchetana - National framework for early childhood stimulation for children from birth to three years, 2024. இது குழந்தை நலன் மற்றும் பராமரிப்பு குறித்த கட்டமைப்பு தொடர்பான ஆவணம். இதில் ஹெகுரு குறித்தோ, Right-Brain activation குறித்தோ எந்த தகவலும் இல்லை. இதிலுள்ள "Early childhood stimulation" என்ற வார்த்தையை மட்டும் வைத்து, இந்த கட்டமைப்பு குறித்த செய்திகளைத் திரித்து கூறுகின்றனர்.

தவறான தகவல் 2 : தமிழ்நாட்டில் குழந்தைகளின் சிந்தனைத் திறன் குறைந்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்த சிந்தனைத் திறன் வெகுவாக குறைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் குழந்தைகளின் சிந்தனைத் திறனோ, மூளை வளர்ச்சியோ குறைந்ததாக எந்த தரவுகளும் இல்லை. இந்த தகவல் அவர்கள் குறிப்பிடும் நவ்சேத்னாவிலும் இல்லை.

தவறான தகவல் 3 : ஒன்றிய அரசு இந்த Right-Brain activation பயிற்சி முறையை செயல்படுத்த தனியாக பட்ஜெட் ஒதுக்கியுள்ளது. அரசாங்கம் குழந்தைகள் நலன் சார்ந்த திட்டங்கள் பலவற்றை செயல்படுத்தி வருகிறது. ஆனால் இந்த Right-Brain activation அல்லது ஹெகுரு போன்ற பயிற்சிகளை ஊக்குவிக்கவோ, நடைமுறைப்படுத்தவோ அரசு எந்தத் தொகையும் பட்ஜெட்டில் ஒதுக்கவில்லை.

தவறான தகவல் 4: குழந்தை பிறந்தவுடன் கூட அங்கன்வாடியில் சேர்க்க அரசு திட்டம் வகுத்துள்ளது.

இது திரிக்கப்பட்ட தகவல், நவ்சேத்னா குழந்தைகளை மூன்று வயது வரை வீட்டில் வளர்ப்பதையே ஊக்குவிக்கிறது. குழந்தையைப் பராமரிக்க வாய்ப்பில்லாத நிலையில் அங்கன்வாடியில் சேர்க்கலாம் என்று பரிந்துரைக்கிறது.

மேலும், ஹெகுரு ஒரு கல்விமுறை இல்லை, இது ஒரு Activity என்றும் கூறுகிறார். இதுவும் தவறான தகவல். சென்னையில் செயல்படும் ஹெகுரு பயிற்சி மையத்தின் சமூக வலைதளப் பக்கத்தில் இது 'JAPAN CERTIFIED RIGHT BRAIN EDUCATION' என்றுதான் குறிப்பிட்டுள்ளனர். அவர்களது இணையதளப் பக்கத்திலும் "RIGHT BRAIN EDUCATION" என்றுதான் குறிப்பிட்டுள்ளனர். தவறான தகவல்களைப் பரப்பாதீர்" என கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் குழந்தையை வைத்து இந்திரஜா வதந்தி பரப்பியதும், ப்ரோமோஷன் செய்ததும் உறுதியாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+