என்னது..நடிகர் ஜாக்கி சான் இஸ்லாமியராக மாறிவிட்டாரா? காட்டுத்தீபோல் பரவும் புகைப்படங்கள் -எது உண்மை?
சென்னை: உலகப் புகழ்பெற்ற நடிகர் ஜாக்கி சான் இஸ்லாமிய மதத்தை ஏற்றுக்கொண்டதாக புகைப்படங்கள் வெளியான நிலையில், இதன் உண்மைத் தன்மை என்னவென்று பார்ப்போம்.
கடந்த சில நாட்களாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஒரு பதிவு புகைப்படத்துடன் பகிரப்பட்டு வருகிறது. அந்த புகைப்படத்தில் "நாட்டைவிட்டு வெளியேற்றிய ஜாக்கி சான். இஸ்லாத்தை தழுவினார்! அல்லாஹு அக்பர்!" என்று குறிப்பிடப்பட்டு அவர் இஸ்லாமியரை போல் தொப்பி அணிந்திருப்பதும், அவருக்கு ஒருவர் பதக்கம் அணிவிப்பதைபோன்றும் புகைப்படங்கள் உள்ளன.

அத்துடன் பகிரப்பட்ட பதிவில், "உலக அளவில் ரசிகர்களைக் கொண்ட ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான், தனது நாட்டைவிட்டு அழுதபடியே வெளியேறி இஸ்லாத்தை தழுவினார். பிரிட்டிஷ் ஹாங்காங்கில் (சீனா) பிறந்த ஜாக்கி சான், தனது அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மற்றும் நகைச்சுவைக் காட்சிகள் மூலம் உலக அளவில் ஏராளமான ரசிகர்களைப் பெற்றார். கடந்த 50 ஆண்டுகளாக திரைத்துறையில் பணியாற்றிய இவருக்கு, வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கார் விருது சமீபத்தில் வழங்கப்பட்டது.
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், ஸ்டண்ட் கலைஞர் என்று பண்முக திறன் கொண்ட ஜாக்கிஜான், தற்போது தனது நாட்டைவிட்டே வெளியேறியுள்ளார். அதுவும் அழுதபடியே. சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தாலும் பொது வாழ்விலும் நல்ல பெயரை சம்பாதித்த ஜாக்கிசானுக்கு ஒரு மகன் உள்ளார். தன்னைப் போல தனது மகனும் நடிகராக வேண்டும் என்று ஆசைப்பட்ட ஜாக்கிசானின் கனவு, கனவாக போய்விட்டது. அவரது மகன், போதை பழக்கத்திற்கு ஆளாகி, அவருக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்திவிட்டான்.
இதனால் துன்பத்திற்கு ஆளான ஜாக்கி, தனது மகனை அப்பழக்கத்தில் இருந்து மீட்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். இதையடுத்து சிறிது காலம் அமைதியாக இருந்த அவரது மகன், மீண்டும் போதைக்கு அடிமையாகிவிட்டான், என்கிறார்கள். இதன் காரணமாக வாழ்க்கையை வெறுத்த ஜாக்கிஜான், திடீரென்று இஸ்லாம் மதத்தின் புனித நகரங்களான மக்கா, மதினா சென்று இஸ்லாம் மார்க்கத்தை தழுவினார். இதனால் அவரது குடும்பத்தினர் அதிச்சியடைந்தார்கள். மேலும், அவரது மகன் அவரிடம் மன்னிப்பு கேட்டு அழுதுள்ளார்.
இருந்தாலும் இனி அவனை திருத்த முடியாது, என்ற முடிவுக்கு வந்த ஜாக்கி, வாழ்க்கையில் கஷ்டம் என்றால் என்ன என்று அல்லாஹ் புரிய வைப்பான், இனி இறைவன் மட்டுமே இவனை காப்பாற்ற வேண்டும், என்று கூறியுள்ளார். கடந்த வாரம் பத்திரிகையாளர்களை அழைத்த ஜாக்கிசான், தான் சீனாவை விட்டு வெளியேறி மக்காவில் குடியேறப்போவதாக அழுதபடியே கூறியுள்ளார். ஜாக்கிசானின் அழுகையைப் பார்த்த நிருபர்களும் கண் கலங்கிவிட்டார்களாம்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
இது குறித்த உண்மை தன்மையை ஆய்வு செய்யும் முயற்சியில் ஈடுபட்டோம். அப்போது இதே புகைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் பகிரப்பட்டு வருவது தெரியவந்தது. அந்த படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜில் தேடிய போது, மலேசிய அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு ஜாக்கி சானுக்கு அந்நாட்டின் உயரிய டத்தோ பட்டம் வழங்கியபோது எடுத்த படம் என்பது உறுதியானது. இந்த பட்டம் பெறுபவர்கள் மலேசிய பாரம்பரிய முறைப்படி உடையணிந்து அதை பெறுவது வழக்கம். அப்படித்தான் ஜாக்கி சானும் தொப்பி அணிந்து சென்றுள்ளார். உடனே இதை வைத்து மதம் மாறிவிட்டார் என வதந்தி பரப்பி உள்ளார்கள்.

Fact Check
வெளியான செய்தி
உலகப் புகழ்பெற்ற நடிகர் ஜாக்கி சான் இஸ்லாமிய மதத்தை ஏற்றுக்கொண்டு மக்காவில் குடியேறினார்.
முடிவு
மலேசிய அரசு 2015ல் ஜாக்கி சானுக்கு உயரிய டத்தோ பட்டம் வழங்கியபோது எடுத்த படம்
ரேட்டிங்
-
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
கடவுளே.. பும்ராவே.. வான்கடே மைதானத்தில் பிசிசிஐ சிலை வைக்கணும்.. தெறிக்கும் ரசிகர்களின் மீம்ஸ்! -
அவரு மட்டும் வரல.. அவங்களையும் கூட்டிட்டு வந்திருக்காரு! விஜய் செயலால் டென்ஷனான தவெகவினர்! -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது? -
இனிமேல் சர்ச்சில் பேசாதப்பா.. விஜய் - திரிஷா செயலால்.. கோபம் அடைந்த உறவுகள்? பரபரப்பு போஸ்ட்! -
கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம் -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர்












Click it and Unblock the Notifications