FACT CHECK - என்னது கேரளா ஸ்டோரி நடிகை இஸ்லாமியரை திருமணம் செய்தாரா? லவ் ஜிஹாத் புகார் - உண்மை என்ன?
கவுஹாத்தி: பிரபல தொலைக்காட்சி நடிகை தெவோலீனா பட்டாசார்ஜி சர்ச்சைக்குரிய தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் நடித்ததாகவும், அதன் பின்னர் இஸ்லாமியர் ஒருவரையே திருமணம் செய்துகொண்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வரும் நிலையில் அதன் உண்மை தன்மை என்னவென்று அலசுவோம்.
அசாமை சேர்ந்தவர் பிரபல தொலைக்காட்சி நடிகை தெவோலீனா பட்டாசார்ஜி. இந்தி, வங்காள மொழிகளில் வெளியான பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர். இந்த நிலையில் இவர் தி கேரளா ஸ்டோரி படத்தில் நடித்ததாகவும், அதன் பின்னர் இஸ்லாமியரை திருமணம் செய்துகொண்டதாகவும் சமூக வலைதளங்கள் பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன.

சுதிப்சோ சென் இயக்கத்தில் அடா சர்மா, சித்தி இத்னானி உள்ளிட்டோர் நடிப்பில் இம்மாதம் 5 ஆம் தேதி பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் இஸ்லாமிய பெண், இந்து பெண்களை மதம் மாற்றி ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்ப்பதற்காக சிரியாவுக்கு அனுப்புவதாக காட்சிகள் இடம்பெற்று உள்ளன.
இதுவரை 32,000 பெண்கள் இவ்வாறு மதமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக அப்படத்தில் சொல்லப்பட்ட நிலையில், அதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது. அதே நேரம் தவறான ஆதாரமற்ற தகவல்களை கருவாக கொண்டு தயாரான இப்படம் மத வெறுப்பை விதைக்கும் வகையில் இருந்ததாக பல்வேறு தரப்பினர் விமர்சனங்களை முன்வைத்தனர்.

நிலைமை இப்படி இருக்க இந்த படத்தில் நடிகை தெவோலீனா பட்டாசார்ஜியும் நடித்து இருப்பதாகவும் அவர் இஸ்லாமியரை திருமணம் செய்துகொண்டதாகவும் சமீப நாட்களாக சமூக வலைதளங்களில் பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன. இதுகுறித்த உண்மை என்னவென்று நாம் அலசத் தொடங்கினோம்.
அப்போதுதான் தெரிந்தது தெவோலீனா பட்டாசார்ஜி ஒரு இஸ்லாமியரை திருமணம் செய்துகொண்டு இருக்கிறார் என்று. அவரது கணவர் பெயர் ஷானவாஸ் ஷேக். இதுவரை மட்டுமே உண்மை. தெவோலீனா பட்டாசார்ஜி தி கேரளா ஸ்டோரி படத்தில் நடிக்கவே இல்லை. இதை அவரும் ட்விட்டரில் தெரிவித்து இருக்கிறார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டவருக்கு பதிலளித்துள்ள தெவோலீனா பட்டாசார்ஜி, "முட்டாள்தனமாக பேசாதீர்கள். மனதளவிலும் பொருளாதார அளவிலும் நான் சுதந்திரமான பெண். எனது திருமணம் எனது விருப்பம். எந்த மதமாற்றமும் நிகழவில்லை. தி கேரளா ஸ்டோரி படத்தில் நடித்திருக்க வேண்டும் என விரும்பினேன். ஆனால், நான் அதில் நடிக்கவில்லை." என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
தெவொலீனாவே அதில் நடிக்கவில்லை என வெளிப்படையாக மறுத்து உள்ளதை இதன் மூலம் உறுதி செய்ய முடிகிறது. அதேபோல் அவர் ஷானவாஸ் ஷேக்கை திருமணம் செய்துகொண்டது கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி. தி கேரளா ஸ்டோரி படம் வெளியானது இம்மாதம் 5 ஆம் தேதி. எனவே கேரளா ஸ்டோரி படத்துக்கு பிறகு அவர் திருமணம் செய்துகொண்டார் என்ற தகவலும் வதந்தி.

Fact Check
வெளியான செய்தி
தி கேரளா ஸ்டோரி படத்தில் நடித்த தெவொலீனா பட்டாச்சார்ஜி இஸ்லாமியரை திருமணம் செய்துகொண்டார்.
முடிவு
தெவோலியா இஸ்லாமியரை திருமணம் செய்தது உண்மை. ஆனால், அவர் தி கேரளா ஸ்டோரி படத்தில் நடிக்கவில்லை.
ரேட்டிங்
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications