FACT CHECK: நபிகள் நாயகம் குறித்த அவதூறு.. இந்தியாவை கண்டித்ததா நித்தியானந்தாவின் கைலாசா?
சென்னை: நபிகள் நாயகம் குறித்த அவதூறுக்காக நித்தியானந்தாவின் கைலாசா கண்டனம் தெரிவித்து இந்திய தூதருக்கு சம்மன் அனுப்பி இருப்பதாக ட்விட்டரில் வெளியான பதிவு அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
சர்ச்சைக்குரிய பேச்சுக்களால் புகழ்பெற்ற பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, அண்மையில் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அதில் பேசிய நுபுர் ஷர்மா இறைத்தூதரான நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசினார். அதேபோல் அக்கட்சியின் நவீன் குமார் ஜிண்டாலும் முஹம்மது நபி குறித்து ட்விட்டரில் அவதூறாக கருத்திட்டார்.

வழக்குப்பதிவு
நுபுர் ஷர்மாவின் இந்த கருத்து நாடு முழுவதும் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. மும்பையில் நுபுர் ஷர்மா மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இது தொடர்பாக அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவும் மும்பை போலீஸ் திட்டமிட்டு இருக்கிறது. இதேபோல் டெல்லி போலீசும் நுபுர் சர்மா மீது வழக்குப்பதிவு செய்து இருக்கிறது.

உபி கலவரம்
இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நுபுர் ஷர்மாவின் பேச்சை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதில் பலர் படுகாயமடைந்துள்ளனர். பலர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். ஆயிரக்கணக்கானோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கலவரத்தில் ஈடுபட்டவர்களின் வீடுகள் புல்டோசரில் இடிக்கப்படும் என காவல்துறை எச்சரித்து உள்ளது.

உபி கலவரம்
இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நுபுர் ஷர்மாவின் பேச்சை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதில் பலர் படுகாயமடைந்துள்ளனர். பலர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். ஆயிரக்கணக்கானோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கலவரத்தில் ஈடுபட்டவர்களின் வீடுகள் புல்டோசரில் இடிக்கப்படும் என காவல்துறை எச்சரித்து உள்ளது.
Recommended Video

நடிகை கஸ்தூரி வெளியிட்ட ஸ்க்ரீன்ஷாட்
இந்த நிலையில் திரைப்பட நடிகை கஸ்தூரி, "அல்காயிதைவை தொடர்ந்து கைலாசாவும் இந்த விவகாரத்தில் கண்டனம் தெரிவித்து உள்ளது." என்று ட்விட்டரில் பதிவிட்டு ஸ்க்ரீன் ஷாட் ஒன்றையும் பகிர்ந்து உள்ளார். கைலாசாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் என்ற பெயரில் உள்ள அந்த ட்விட்டர் பக்கத்தில், நபிகள் நாயகம் குறித்த அவதூறு பதிவு வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும், கைலாசாவுக்கான இந்திய தூதரிடம் விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. -

உண்மை என்ன?
முதலில் கைலாசா என்பதை ஒருநாடாகவே உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை. அது உலக வரைபடத்தில் எங்கு இருக்கிறது என்ற விபரமும் கண்டுபிடிக்கப்படவில்லை. மர்ம பிரதேசமான அங்கிருந்து வெளியிடப்படும் தகவல்கள் யாவும் சந்தேகத்துடனே அனுகப்படுகின்றன. அப்படி இருக்க இல்லாத ஒரு நாட்டுக்கு எப்படி தூதரை இந்தியா நியமிக்கும்? இல்லாத தூதருக்கு கைலாசா எப்படி சம்மன் அனுப்பும்? என்ற கேள்விகளிலேயே இது தவறான தகவல் என்பது உறுதியாகிறது. மேலும் நித்தியானந்தாவின் @SriNithyananda என்ற ட்விட்டர் பக்கத்தில் அதுபோலி கணக்கு என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது.

Fact Check
வெளியான செய்தி
நபிகள் நாயகம் குறித்த அவதூறை கண்டிப்பதாகவும், இந்திய தூதருக்கு சம்மன் அனுப்பி உள்ளதாகவும் கைலாசா வெளியுறவுத்துறை அமைச்சகம் என்ற பெயர் கொண்ட ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது.
முடிவு
கைலாசா என்ற நாடே இல்லாதபோது அதற்கு எப்படி இந்தியா தூதரை அனுப்பும்? நித்தியானந்தாவின் ட்விட்டர் பக்கத்திலும் இதற்கான மறுப்பு வெளியாகி உள்ளதால் இது போலி கணக்கில் வெளியான வதந்தி என தெரிகிறது.
ரேட்டிங்
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications