Fact check: ஸ்டாலினுடன் இருப்பது டிரில்லியண்ட் நிறுவன தலைவரே இல்லையா? பரவும் தகவல்! உண்மை என்ன?
சென்னை: அமெரிக்காவில் டிரில்லியண்ட் நிறுவனத்துடன் ரூ.2,000 கோடி தொழில் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அந்த புகைப்படத்தில் ஸ்டாலின் உடன் இருப்பவர் டிரில்லியண்ட் நிறுவனத்தைச் சேர்ந்தவரே அல்ல என சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. ஆனால், உண்மை என்ன?
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறைப் பயணமாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான நோக்கியா, பேபால், ஈல்ட் இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ் ஹெல்த்கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் 900 கோடி ரூபாய் முதலீட்டில் 4,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்: அதைத்தொடர்ந்து, அமெரிக்காவின் சிகாகோ சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்கும் முக்கிய நிறுவனங்களுடன் டீல்களில் கையெழுத்திட்டார். அமெரிக்காவின் டிரில்லியண்ட் நிறுவனத்துடன் ரூ.2 ஆயிரம் கோடி தொழில் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "சிகாகோவில் அற்புதமான முன்னேற்றங்கள் நிகழ்ந்துள்ளன. டிரில்லியண்ட் நிறுவனத்துடன் ரூ.2 ஆயிரம் கோடி தொழில் முதலீட்டுக்கு தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து இடப்பட்டுள்ளது. இதன்மூலம் டிரில்லியண்ட் நிறுவனம் அதன் உற்பத்தி அலகு மற்றும் வளர்ச்சி மற்றும் உலகளாவிய ஆதரவு மையத்தை தமிழ்நாட்டில் நிறுவ உள்ளது. இந்த மதிப்புமிக்க கூட்டாண்மைக்கு ட்ரில்லியன்ட் நிறுவனத்திற்கு நன்றி" என்று தெரிவித்திருந்தார்.


பரவிய தகவல்: இந்நிலையில், டிரில்லியண்ட் நிறுவனத்தின் சேர்மன் Andy White, படத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உடன் இருப்பது Jim Madej, Virdi நிறுவனத்தின் CCOO. அவருக்கும் டிரில்லியண்ட் நிறுவனத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன?: ஜிம் மடேஜ், சமீபத்தில் தான் டிரில்லியண்ட் நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார். ஆகையால், அவர் குறித்த விவரங்கள் டிரில்லியண்ட் நிறுவனத்தின் இணையதளத்தில் அப்டேட் செய்யப்படவில்லை. அவருக்கு அருகே உள்ள மைக் மோர்ட்டிமிர் பற்றிய விவரங்கள் அந்நிறுவனத்தின் இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது.
இதுகுறித்த தகவல்களை தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ளது. அதற்குரிய ஆதாரங்களையும் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம். முதல்வர் ஸ்டாலின், முதலீடுகளை ஈர்த்து வரும் நிலையில், உள்நோக்கத்தோடு இந்த வதந்தி பரப்பப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

Fact Check
வெளியான செய்தி
அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலின் உடன் இருப்பது டிரில்லியண்ட் நிறுவனத்தின் தலைவர் அல்ல என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
முடிவு
டிரில்லியண்ட் நிறுவனத்தின் தலைவராக ஜிம் மடேஜ் அண்மையில் தான் பொறுப்பேற்றதால் அவர் குறித்த தகவல்கள் இணையளத்தில் அப்டேட் ஆகவில்லை. மற்றபடி, டிரில்லியன் நிறுவனத்தினர் முன்னிலையில் தான் ஒப்பந்தம் கையெழுத
ரேட்டிங்
-
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை












Click it and Unblock the Notifications