கங்கணாவிற்கு சப்போர்ட்.. தேசிய அளவில் திடீர் வைரல்.. பாஜகவில் இணைகிறாரா விஷால்.. உண்மை என்ன?
சென்னை: நடிகர் விஷால் பாஜகவில் இணைய இருப்பதாக காலையில் இருந்து இணையத்தில் பெரிய அளவில் செய்திகள் உலவி வருகிறது. நடிகர் விஷால் தற்போது இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் விஷால் பல பேட்டிகளில், மேடைகளில் தனக்கு இருக்கும் அரசியல் ஆசையை வெளிப்படுத்தி இருக்கிறார். தன்னுடைய ரசிகர் மன்றத்தை 2018ல் இவர் மக்கள் நல இயக்கம் என்று இயக்கமாக மாற்றி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
அப்போதில் இருந்தே அரசியலில் விஷால் ஈடுபட வாய்ப்புள்ளது. பெரிய கட்சிகளில் விஷால் இணைய வாய்ப்புள்ளது என்றும் தகவல்கள் பரவி வந்தது.

செய்தி வந்தது
இந்த நிலையில் நடிகர் விஷால் பாஜகவில் இணைய இருப்பதாக காலையில் இருந்து இணையத்தில் பெரிய அளவில் செய்திகள் உலவி வருகிறது. இதற்காக இன்று பாஜக தலைவர் எல் முருகன் அவர்களை சந்திக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இதற்காக அவர் நேரம் கேட்டு இருப்பதாக செய்திகள் வெளியானது. விஷால் ரசிகர்கள் பலர் இதனால் அவருக்கு எதிராக இணையத்தில் டிவிட் செய்து வந்தனர்.

கங்கணா ராணாவத் ஆதரவு
கடந்த சில நாட்களுக்கு முன் கங்கணா ராணாவத்திற்கு ஆதரவாக விஷால் பேசி இருந்தார். நடிகை கங்கணா ராணாவத் பாஜகவிற்கு ஆதரவாக பேசி வருகிறார். மகாராஷ்டிராவில் இவர், பாஜகவிற்கு ஆதரவாகவும், சிவசேனாவிற்கு எதிராகவும் பேசி வருகிறார். இந்த நிலையில் கங்கணா ராணாவத்தை விஷால் பகத் சிங்குடன் ஒப்பிட்டு புகழ்ந்து இருந்தார். இது தேசிய அளவில் வைரலானது.

தேசிய அளவில் வைரல்
தேசிய பாஜக கட்சியினர் பலர் இதனால் விஷாலுக்கு ஆதரவாக இதில் பேசினார்கள். மகாராஷ்டிராவில் கங்கணா ராணாவத் போல தமிழகத்தில் விஷாலை பாஜக தன் பக்கம் இழுக்க போகிறதா என்று கேள்விகள் எழுந்தது. பாஜகவில் விஷால் இணைய போகிறாரா என்று கேள்விகளும், விவாதங்களும் எழுந்தது. பாஜகவில் வரிசையாக திரட்ட பிரபலங்கள் பலர் இணைந்து வருவதும் இந்த சந்தேகத்தை வலுப்படுத்தியது.

மறுத்த விஷால்
இந்த நிலையில் விஷால் தரப்பு இந்த செய்தியை மறுத்துள்ளது. அதில், நான் பாஜகவில் இணைவதாக வெளியாகும் செய்திகள் பொய்யானது. பாஜகவில் நான் யாரையும் சந்திக்கவில்லை. பாஜக தலைவர் எல். முருகனை நான் சந்திப்பதாக வெளியாகும் செய்திகள் தவறானது. பொய்யானது வதந்திகளை என் ரசிகர்கள் நம்ப கூடாது என்று விஷால் சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Fact Check
வெளியான செய்தி
நடிகர் விஷால் பாஜகவில் இணைய இருப்பதாக காலையில் இருந்து இணையத்தில் பெரிய அளவில் செய்திகள் உலவி வருகிறது.
முடிவு
நடிகர் விஷால் இந்த செய்தியை மறுத்து விளக்கம் அளித்துள்ளார்.
ரேட்டிங்
-
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications