மின் கட்டணத்தை தொடர்ந்து.. பஸ் கட்டணம் உயர்த்தப்படுகிறதா? தமிழ்நாடு அரசு விளக்கம்
சென்னை: தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் பேருந்து கட்டணமும் உயர்த்தப்பட இருப்பதாக சமூக வலைத்தளத்தில் தகவல்கள் வெளியான நிலையில், தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு உண்மை என்ன என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளது. பேருந்து கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக வெளியான செய்தி வதந்தியே என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அண்மையில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டது. தமிழகத்தில் மின் கட்டணத்தை 4.83 சதவீதம் வரை உயர்த்தி மின்சார ஒழுங்கு முறை வாரியம் அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு என்பது ஜுலை 1 ஆம் தேதி முன்தேதியிட்டு அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. கடந்த வாரம் மின் கட்டண உயர்வு தொடர்பாக அறிவிப்பு வெளியானது.

மின் கட்டண உயர்வை தொடர்ந்து அடுத்து பேருந்து கட்டணம் உயர்த்தப்படலாம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று அளித்த பேட்டியில் விமர்சித்து இருந்தார். அதேபோல், சமூக வலைத்தளங்களிலும் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக பரவலாக தகவல் பரவின. தனியார் தொலைக்காட்சி ஒன்றும் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக செய்தி வெளியிட்டு இருந்தது.
பேருந்து கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக பரவலாக வெளியான செய்தி பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் முதல் நடுத்தர மக்கள் வரை பலரும் அரசு பேருந்துகளையே தங்கள் பயண தேவைக்கு சார்ந்துள்ளனர். இத்தகைய சூழலில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படலாம் என்று பரவிய தகவல் பயணிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்து இருந்தது.

இந்த நிலையில்தான், பேருந்து கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக பரவும் செய்தி வெறும் வதந்தியே என்று தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு தனியார் தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியை டேக் செய்து தனது விளக்கத்தை அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் அரசு பேருந்து கட்டணம் உயர்த்தப்படவில்லை என்றும், அரசுப் பேருந்து கட்டணத்தை உயர்த்த ஆலோசிக்கப்படுவதாக பரவும் தகவல் வதந்தியே. அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Fact Check
வெளியான செய்தி
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், பேருந்து கட்டணமும் உயர்த்தப்பட இருப்பதாக சமூக வலைத்தளத்தில் தகவல்கள் வெளியாகியது.
முடிவு
தமிழ்நாட்டில் அரசு பேருந்து கட்டணம் உயர்த்தப்படவில்லை. அரசுப் பேருந்து கட்டணத்தை உயர்த்த ஆலோசிக்கப்படுவதாக பரவும் தகவல் வதந்தி. இது தொடர்பாக எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை.
ரேட்டிங்
-
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. 0.9 கி.மீ உயரத்தில் நடந்த வானிலை மாற்றம்! சம்பவம் இருக்கு -
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள் -
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்!












Click it and Unblock the Notifications